பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
19. கூறுவதவர்: சிங்கம், முதலை நடத்திடும்
நீதி மன்றம் ! ஜாம்சையத் புகழெய்திக் குடித்தவர் ;
பேராசை வேடன் பஃஹ்ராம் உளான்; காட்டுக் கழுதை
தலைமேல் மிதிப்பினும், கலையா தவன் தூக்கம்!
19. They say the Lion and the Lizard keep
The Courts where Jamshyd gloried and drank deep:
And Bahram, that great Hunter – the Wild Ass
Stamps o’er his Head, but cannot break his Sleep.
20. சிந்திப்பேன் சில நேரம், சிவக்காது ரோஜா,
குருதி சிந்தும் எங்கோ சீஸர் புதைத்த இடத்தில்;
பூங்காவில் பூத்த ஒவ்வோர் செந்நிறச் செடியும்
ஒருவர் எழிற்தலை அதன் மடிமேல் வீழ்ந்ததுதான்!
20. I sometimes think that never blows so red
The Rose as where some buried Caesar bled;
That every Hyacinth the Garden wears
Dropt in its Lap from some once lovely Head.
இவ்வினிய மூலிகை விதையின் மென்பசுமை
பறக்கச் சிறகு தரும் நதியின் இதழ் களுக்கு;
சாய்வாய் அதன்மேல் மெதுவாய்; எழில்மிகு
செவ்விதழ் தெரியா தெழுமென யார் அறிவார் ?
21. And this delightful Herb whose tender Green
Fledges the River’s Lip on which we lean –
Ah, lean upon it lightly! for who knows
From what once lovely Lip it springs unseen!
+++++++++++++++++++
- தொடுவானம் 154. இறுதித் தேர்வுகள்.
- 65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.
- கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17
- காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு
- இது கனவல்ல நிஜம்
- ஏக்கங்களுக்கு உயிருண்டு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- இளஞ்சிவப்பு கோடு !
- ‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாக
- உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?
- இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.
- கட்டு