மீண்டும் நீண்ட விடுமுறை.
இந்த முறை தாம்பரம் சென்று சில நாட்கள் கழித்துவிட்டு சிதம்பரம் செல்ல முடிவு செய்தேன். திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றேன். மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன்.
என்னைக் கண்ட அத்தை வீட்டினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. விடுதி, படிப்பு, தனிமை, தேர்வு என்று இருந்துவிட்டு வந்த எனக்கு அது மாற்றத்தையே உண்டுபண்ணியது. வழக்கம்போல் அத்தை மகள் நேசமணி விழுந்து விழுந்து கவனித்தாள். அவள் பாவம். என்னை வைத்து நிறைய மனக்கோட்டை கட்டியிருந்தாள். நான் அதை ஊக்குவிக்கவில்லை என்பது உண்மை. நான் யார் மீது அன்பு செலுத்தினாலும் இறுதியில் திருமணம் என்று வரும்போது அப்பாவின் முடிவுதான் எடுபடும் என்பது எனக்குத் தெரியும். இல்லையேல் அவருடைய எதிர்ப்பையே எதிர்நோக்க நேரிடும்.
அப்பாவின் முடிவை மாற்ற இயலாது என்று தெரிந்திருந்தும் எதற்காக லாதாவுடனும் வெரோனிக்காவுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும்? லதா பற்றி அப்பாவுக்குத் தெரியும். எங்களுக்குள் இப்போது தொடர்பு இல்லை என்று நம்பினார். அது ஓரளவு உண்மைதான். அவளிடமிருந்து கடிதங்கள் முன்புபோல் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நானும் அவ்வளவு ஆர்வமாக பதில் எழுதுவதில்லை. அதற்கு தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். ஏனோ தெரியவில்லை வெரோனிக்காவும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அவள் கல்லூரியில்தான் இன்னும் எம்.எஸ். சி. பயின்று வருகிறாள். இந்த வருடத்துடன் அதையும் முடித்துவிடுவாள் அவளுக்கு திருமண வயதுதான். வீட்டில் என்ன ஏற்பாடு செய்துள்ளார்களோ தெரியவில்லை. அவளும் அது பற்றி ஏதும் எழுதவில்லை. இங்கும் பிரிவும் தொலைவும் காரணமாக இருக்கலாம்.கடிதம் எழுதுவதுதான் ஒரே தொடர்பு. தொலைபேசி மூலம் பேசிக்கொண்டிருக்க முடியாது.
தாம்பரம் வந்துள்ளதால் இந்த முறை வெரோனிக்காவைச் சந்திக்கலாம். அவளுடைய உண்மையான நிலையை அறிந்து கொள்ளலாம்.
” கொஞ்சம் பொறுங்கள் ” என்று சொல்லியவாறு பக்கத்து அறையினுள் நுழைந்தாள். சற்று நேரத்தில் உடை மாற்றிக்கொண்டு வந்தாள். சிவப்பு நிற சேலையில் அவள் அழகாக இருந்தாள். வெளியில் அவளைப் பார்ப்பவர்கள் இன்னொரு முறையும் திரும்பிப் பார்ப்பார்கள். அவ்வளவு அழகு!
- புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.
- தொடுவானம் 158.சிதைந்த காதல்
- கோடிட்ட இடங்கள்….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 நிகழ்வு அழைப்பிதழ்
- இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ஏவு கணையில் 104 துணைக் கோள்களை ஏவியுள்ளது.
- படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல்
- சாதாரணதும் அசாதாரணமானவையும் – எஸ்ஸார்சியின் புதிய சிறுகதைத் தொகுப்பு “சொல்லில் நிரம்பிய குளம்”
- பொருனைக்கரை நாயகிகள் (திருப்புலியூர் சென்ற நாயகி)