பிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி இன்பமாக மாறியது. இனி பிரசவம் எப்படியெல்லாம் பாப்போம் என்பதை விவரிப்பேன்.
பிரசவ வலி வந்ததும்தான் பெண்களை வார்டிலிருந்து பிரசவக் கூடத்துக்குக் கொண்டு வருவோம். வலி வந்ததுமே பெரும்பாலும் பிரசவம் ஆகிவிடும். கட்டிலில் படுத்துள்ள பெண்களின் பிறப்பு உறுப்பில் விரலை விட்டு கருப்பையின் வாய் எவ்வளவு விரிந்துள்ளது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அதை வைத்து பிரசவம் எப்போது சம்பவிக்கும் என்பதை யூகிக்கலாம். அதன்படி அங்கேயே இருந்து குழைந்தையை வெளியில் எடுக்கும் வரை இருப்போம். சிலருக்கு முதல் பிரசவ வேளையின்போது குழந்தையின் தலையை வெளியே கொண்டுவர பிறப்பு உறுப்பில் ஒரு வெட்டு போடுவோம். அதன் பின்பு குழந்தையை எளிதில் எடுத்துவிடலாம். எடுத்தபின்பு வெட்டிய பகுதியை மீண்டும் தைத்துவிடவேண்டும். பயிற்சியின்போது இதை நாங்கள்தான் செய்யவேண்டும். இதற்கு ” எப்பிசியோட்டமி ” ( Episiotomy ) என்று பெயர்.
கருவுற்ற பெண்ணுக்கு முதல் இரண்டு மாதத்தில் இன்னொரு ஆபத்தான அவரச அறுவை மருத்துவமும் தேவைப்படும். இது தாயின் உயிரைக் காக்க செய்யப்படுவதாகும். அப்படி செய்யும்போது சிசு அழிந்துவிடும்.அதைக் காப்பாற்ற இயலாது. இது கருப்பைக் குழாயில் ( Fallopian Tube ) கரு தரிப்பதாகும் ( Tubal Pregnancy ).கரு கருப்பைக்குள் வளராமல் கருப்பைக் குழாயில் வளரும். இரண்டு மாதத்தில் கரு பெரிதானதும், குழாய் விரிந்து கடுமையாக வலிக்கும். உடனடியாக அதை அறுவை மூலம் அப்புறப்படுத்தாவிடில், குழாய் வெடித்து இரத்தம் வெளியேறி தாயின் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணிவிடும்! இப்படி குழாயில் வளரும் ஆபத்தான கருவை அல்ட்ராசவுண்டு மூலம் கண்டறியலாம்.
அறுவை மருத்துவ அறைக்கு நான் வேறு காரணத்துக்காகவும் அடிக்கடி சென்று வருவதுண்டு. பிரசவமான தாய்மார்கள் சிலருக்கு கருத்தடை அறுவை செய்ய நான் கற்றுக்கொண்டேன். அதன்பின்பு நானே நிறைய பேர்களுக்கு அதைச் செய்துவந்தேன். அதை அரை மணி நேரத்தில் செய்துவிடலாம்.
அது கேட்டு அவளிடம் மேலும் என்ன கேட்பது என்று தெரியாமல் தடுமாறினேன்!
- வெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ நூல் அறிமுகக் கூட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8
- சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை
- புலவி விராய பத்து
- பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது
- தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி
- உமர் கயாம் ஈரடிப்பாக்கள்
- ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா
- (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”
- ஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்
- இவனும் அவனும் – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை