அருணா சுப்ரமணியன்
கழுவில் ஏற்றப்படும் காவல்காரர்கள்
நாள்கணக்காய்
காத்துக்கிடக்கும்
எங்களை மூலையில்
தான் கிடத்துகிறீர்கள்
நீங்கள் இல்லா நேரத்தில்
உங்கள் உடமைகளை
களவாட நினைப்பவர்கள்
கல்லால் அடிக்கிறார்கள்
தாங்கிக்கொள்கிறோம்
சில நேரங்களில்
உங்கள் மறதியால்
நாங்கள் தண்டனை
பெறுகிறோம்..
நீங்கள் சாவியைத்
தொலைத்துவிட்டு
பூட்டுக்கள்
எங்களை ஏன்
கழுவில் ஏற்றுகிறீர்கள்?
——————————–
கனவுகளைத் திருடியவள்
என் கனவுகளை
திருடியவளை
கண்டேன்…
கனவுகளை
தொலைத்ததால்
எனக்கு நேர்ந்த
துயரங்களை
சொல்லி என்
கனவுகளை
திருப்பித் தர
கேட்டேன்..
காலம் கடந்து
வந்திருக்கிறாய்
என்றாள்
என்னைப் போன்று
இருந்தவள்….
——————————–
–
- நாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறது
- தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.
- அருணா சுப்ரமணியன் கவிதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
- நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிந்த சாதனையை வானலைகளில் பரவச்செய்த அப்பல்லோ ‘சுந்தா’
- ITHAKA – பாடல் மொழிபெயர்ப்பு
- வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி
- என் உலகத்தில் நீ இல்லை
- கிருஷ்ணா !
- 2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்
- இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]
- Sangam Kalai Vila on Saturday June 10th in Staten Island, NY
- மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்
- மரபிலக்கணங்களில் பெயர்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13