வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13

This entry is part 15 of 15 in the series 21 மே 2017

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 13. கிஷன் தாசின் பங்களாவில், முன்னடிக் கூடம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷன் தாசும் பிரகாஷும் பஞ்சணை நாற்காலிகளில் அமர்ந்து ஆளுக்கு ஒரு நாளிதழைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தலை உயர்த்தும் பிரகாஷ், “அப்பா! நாம் காப்பி குடிக்கலாமா?” என்கிறான். “இன்று காப்பி கிடையாது, பிரகாஷ்!” “ஏன், அப்பா?” “அதிகாலையில் எழுந்து சமையலை முடித்துவிட்டு நகுல் தன் சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருக்கிறான். மாலையில்தான் திரும்புவான்.” “அப்படியானால ஃப்ரிட்ஜிலிருந்து நான் குளிர்ப்பானங்களை எடுத்து வரட்டுமா?” […]

நாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறது

This entry is part 1 of 15 in the series 21 மே 2017

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா  நாசா விண்ணுளவி கண்ட துருவ ஒளிவண்ண நடனம் +++++++++++++++ சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் ஓட்டைகளா ? பூமியைச் சூடாக்கி வருபவை சூழ்வெளி மண்டலத்தில் முகில் மூட்டம் உண்டாக்கும் அகிலக் கதிர்களா ? பரமாணுக்கள் என்னும் அக்கினிப் பூக்களா ? பம்பரமாய்ச் சுற்றும் பூமியின் அச்சாணியோ, சுற்றுவீதியோ […]

தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.

This entry is part 2 of 15 in the series 21 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 170. அப்பா வந்துவிட்டார். நான் பயிற்சி மருத்துவம் முடித்துவிட்டேன். இனி நான் ஒரு மருத்துவன். என்னுடைய பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ளலாம். என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதோடு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருந்தது. அப்பா சிங்கப்பூரிலிருந்து நிரந்தரமாக ஊர் திரும்புகிறார்! நான் படித்து முடித்து பயிற்சி மருத்துவமும் முடிக்கும்வரை அவர் பணியில் இருந்துள்ளார். சரியாக நான் முடித்தபின்பு அவரும் ஓய்வு பெற்றுவிட்டார். உண்மையில் இது ஓர் ஆச்சரியம்தான்! இனிமேல் அவர் […]

அருணா சுப்ரமணியன் கவிதைகள்

This entry is part 3 of 15 in the series 21 மே 2017

அருணா சுப்ரமணியன் கழுவில் ஏற்றப்படும் காவல்காரர்கள் நாள்கணக்காய் காத்துக்கிடக்கும் எங்களை மூலையில் தான் கிடத்துகிறீர்கள் நீங்கள் இல்லா நேரத்தில் உங்கள் உடமைகளை களவாட நினைப்பவர்கள் கல்லால் அடிக்கிறார்கள் தாங்கிக்கொள்கிறோம் சில நேரங்களில் உங்கள் மறதியால் நாங்கள் தண்டனை பெறுகிறோம்.. நீங்கள் சாவியைத் தொலைத்துவிட்டு பூட்டுக்கள் எங்களை ஏன் கழுவில் ஏற்றுகிறீர்கள்? ——————————– கனவுகளைத் திருடியவள் என் கனவுகளை திருடியவளை கண்டேன்… கனவுகளை தொலைத்ததால் எனக்கு நேர்ந்த துயரங்களை சொல்லி என் கனவுகளை திருப்பித் தர கேட்டேன்.. காலம் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

This entry is part 4 of 15 in the series 21 மே 2017

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++ [64] நேற்று பிறப்பித்தது இன்றைய வெறியை; நாளைய வெற்றி, தோல்வி, வாய்ப் பூட்டை: குடி! எங்கிருந்து வந்தோம், ஏனென் றறியோம், குடி! ஏன் போவோம், எங்கென் றறியோம் நாம். [64] Yesterday This Day’s Madness did prepare; To-morrow’s Silence, Triumph, or Despair: Drink! for you know not whence you came, nor why: Drink! […]

நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

This entry is part 5 of 15 in the series 21 மே 2017

   முருகபூபதி – அவுஸ்திரேலியா   ” நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய  சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் ( Three roses)  என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து  அனுபவித்து, ஆ…ஆ… என்று  வெளிவிட்டு விளம்பரப்படுத்தும் விளம்பரத்திற்கு  நான் குரல் கொடுத்திருந்தேன். மிகப்பிரபலமாக  அது  ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவ்வேளை பம்பலப்பிட்டி  சரஸ்வதி  மண்டபத்தில்  ஒரு  நாடகத்தில் நடிப்பதற்காகச் சென்றிருந்தேன். நான் மேடையில் தோன்றும் முதல் கட்டம்  வந்தது.  முன்வரிசையில் சில […]

ITHAKA – பாடல் மொழிபெயர்ப்பு 

This entry is part 6 of 15 in the series 21 மே 2017

பாண்டியன் சுப்ரமணியம்   1894 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1910 இல் வெளியிடப்பட்ட Constantine Cavafy  இயற்றிய “ITHACA” என்ற கவிதை உலகப்பிரசித்தம் பெற்றது. இந்த பாடல் வாழ்க்கையை ஒரு பயணமாக உருவகப்படுத்தி எழுதப்பட்டது. உலகப்புகழ் பெற்ற இலக்கியங்கள், பாடல்கள், இசை, ஓவியங்கள் என படைப்புகள் எந்த அடிப்படையில் அச் சிறப்பை பெறுகின்றன? பல காரணிகள் இருப்பினும் முதன்மையாது அப்படைப்புகளில் இழையோடும் உண்மை. அது நமது வாழ்வினில் மறைந்திருக்கும் “வாழ்வியல் உண்மைகளை ” மிக அழகாக வெளிப்படுத்தும். அந்த உண்மைகளை வாசிப்பவர் […]

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி

This entry is part 7 of 15 in the series 21 மே 2017

  வேலூர் மாவட்ட அறிவியல் மையம், தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சென்னை, இணைந்து நடத்தும் கோடைக்கால அறிவியல் முகாம் மே’17-2017, அன்று காலை தொடங்கி மே’19-2017 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் ஸ்ரீ புற்றுமகரிஷி சமூக மருத்துவ சேவா மையத்தின் சார்பில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது.  கண்காட்சியை கோவை அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் அழகர்சாமி ராஜு தொடங்கி வைத்தார்.  மூலிகை பயன்பாடுகள் குறித்து கிராமப்புற தாவரவியல் வல்லுநர் ப. […]

  என் உலகத்தில் நீ இல்லை

This entry is part 8 of 15 in the series 21 மே 2017

        அறைந்து பூட்டப்பட்டுவிட்டது கதவு !   அதன் சாவி ஒரு முரட்டுக் கரத்தால் யாரும் மீட்டெடுக்க முடியாத ஆழ் கடலில் வீசப்பட்டுவிட்டது !   மனிதர்களுக்குப் புரியாத குயிலின் குரலில் அதை நான் முகரியில் இசைத்துக் கொண்டிருக்கிறேன்   எனக்கான உலகத்தில் தனிமையின் விரல் பிடித்தபடி என் கூடவரும் சொற்களால் வண்ண வண்ண உருவங்கள் செய்து மகிழ்கிறேன் !   எப்போதும் கோடையின் தகிப்பை உண்டு காலம் நொண்டியடிக்கிறது !   […]

  கிருஷ்ணா !

This entry is part 9 of 15 in the series 21 மே 2017

  உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களோடு நிற்கிறான் மூன்று வயது பார்த்திவ் ! ” கிருஷ்ணா நான் பார்திவ் வந்திருக்கேன்… கண்ணை முழிச்சுப் பாரு… நான் பார்த்திவ் வந்திருக்கேன்… கனக நாசரைப் பாத்ததுபோல் என்னை பார்… ” — பக்தர்களின் சிரிப்பை அவன் கண்டுகொள்ளவில்லை !