போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம் கொண்டேன்.
மேசை மீது நான் படிக்கும் நாவல்களையும் கண் மருத்துவ நூல்களையும் வரிசையாக அடுக்கிவைத்தேன். படிக்கவும் எழுதவும் அதுபோன்ற ஓர் இடம் கிடைப்பது அபூர்வம். மனதில் இனம்காணாத ஒருவகையான நிம்மதி. எழுத அமர்ந்துவிட்டால் கற்பனை சிறகடித்துப் பறக்கும்.
இனி எனக்கு எந்த கவலையும் இல்லை. வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டத்தைக் கடந்து வந்து விட்டேன். அந்த ஆறு வருடங்கள் வேகமாக உருண்டோடிவிட்டன.இப்போது ஒரு கண் மருத்துவராக பணியில் சேர்ந்துவிட்டேன். இனி அடுத்த கட்டம் நோக்கி நிதானமாக பயணிக்கலாம்.
இந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து பணி புரிந்தால் திருச்சபையின் உதவியுடன் வியன்னா சென்று கண் மருத்துவ மேல் படிப்பை முடிக்கலாம். அதன்பின்பு நிரந்தரமாக இங்கேயே கண் மருத்துவராக பணியாற்றலாம்.இது நடைபெறவேண்டுமெனில் டாக்டர் பிச்சை ராபர்ட்டின் பரிந்துரை தேவை. நான் இபோதுதான் இங்கே சேர்த்துள்ளேன். இன்னும் இரண்டு வருடங்களாவது இங்கேயே அவரின் கீழ் பணியாற்றினால்தான் அவரிடம் இது பற்றி கேட்க முடியும்.முடியும்.
நான் இங்கே சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.தினமும் வெளிநோயாளிப் பிரிவில் சிகிச்சை செய்தேன். நூற்றுக்கணக்கில் கண்களை அன்றாடம் பார்ப்பது சலிப்பையே உண்டுபண்ணியது. இது கண் மருத்துவமனை என்பதால் கண்களைத்தானே பார்த்தாகவேண்டும். ஆனால் எனக்கு மனிதர்களின் இதர உறுப்புகளில் தோன்றும் நோய்களைக் குணமாக்கும் பொது மருத்துவம் மேல்தான் நாட்டம் அதிகம். அது மருத்துவம் படிக்கும்போதே நான் விரும்பிய ஒன்றாகும்.
கண் அறுவை மருத்துவம் கற்றுக்கொள்ளலாம் என்ற ஆசையில் அதில் கவனம் செலுத்தினேன். டாக்டர் பிச்சை ராபர்ட் அறுவை சிகிச்சை செய்யும்போது கூர்ந்து கவனிப்பேன். வார்டு ரவுண்ட்ஸ் செல்லும்போது அவர் கட்டுகளை அவிழ்த்து அறுவை செய்த கண்களைப் பரிசோதிப்பார். அப்போது என்னை டார்ச் லைட்டை பிடித்து ஒளியை அந்தக் கண்ணின் மேல் படும்படி அடிக்கச் சொல்வார். ஒவ்வொரு நோயாளியாக அவர் பார்க்கும்போது என்னுடைய வேலை டார்ச் பிடித்து ஒளி அடிப்பதுதான். அப்போது எனக்கு ஒருவிதமான விரக்தி உண்டாகும். இவ்வளவு படித்தபின்பு இந்த டார்ச் அடிக்கும் வேலைதானா?
அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றி அவ்வாறே செய்தேன். அப்படி டார்ச் பிடித்து ஒளி வீசினாலும் அதிலும் அவர் ” இப்படிப் பிடி ” ,” அப்படிப் பிடி ” என்று சொல்லித்தருவார். அது எனக்கு அருவருப்பை உண்டுபண்ணியது.டார்ச்சை எப்படிப் பிடிப்பது என்பதைக்கூட எனக்குச் சொல்லுகிறாரே. இப்படி வார்டு ரவுண்ட்ஸ்களின்போது அவருக்கு விளக்கு பிடிக்க மூன்று மாதங்களோ. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கவே செய்தது. இருந்தாலும் என்னால் என்ன செய்ய முடியும். அவர்தானே தலைமை மருத்துவர். அதோடு சர்வ வல்லமையும் படைத்த திருச்சபையின் செயலர்.
நாட்கள் செல்ல செல்ல எனக்கு கண் மருத்துவம் மீது ஆர்வம் இல்லாமல் போனது.என் ஆசையெல்லாம் பொது மருத்துவம் மீதுதான். இங்கு காலியாகக் கிடைக்கும் இந்த போத்தனூர் கட்டிடங்களில் ஒரு பொது மருத்துவமனை துவங்கினால் நான் மன நிறைவோடு அதில் பணிபுரிவேன். அனால் அது இப்போது நடக்கும் காரியமா.
பிறகு வீட்டினுள் சென்று ஒரு ஏர் மெயில் கவர் கொண்டுவந்தார். அதை என்னிடம் தந்தார். அதை மலயாவிலிருந்து கமலா அக்காள் அனுப்பியிருந்தார்கள். அதனுள் ஏர் இந்தியா விமான பிரயாணச் சீட்டு இருந்தது கண்டு நான் வியந்துபோனேன். எல்லாம் இவ்வளவு துரிதமாக நடைபெற்றுள்ளது!
- தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு
- எனது ஜோசியர் அனுபவங்கள்
- ஒரு தவறான வாயில் வழியாக …
- பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!
- கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்
- இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது
- ஆயா
- கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதைகள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 16