உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 4 of 18 in the series 2 ஜூலை 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

[82]

என் புதைந்த எரிச் சாம்பல் குவளையில்

இனிய வாசனை எழுந்து கலக்கும் காற்றில்.

அருகே கடந்து செல்கையில் நாத்திகனும்

எதிர்பாராது தன்மேல் படுவதை அறியான்.

[82]

That ev’n my buried Ashes such a Snare
Of Perfume shall fling up into the Air,
As not a True Believer passing by
But shall be overtaken unaware.

[83]

மெய்யாய் நான் நீடித்து நேசித்த தெய்வங்கள்

மனிதர் கண்முன் தவறுடன் கடனைக் கழிக்கும்.

மானத்தை நான் மட்டக் குவளையில் மூழ்கவிட்டு

என் மதிப்பை விற்றேன் ஒற்றைப் பாடலுக்கு !

[83]

Indeed the Idols I have loved so long
Have done my Credit in Men’s Eye much wrong:
Have drown’d my Honour in a shallow Cup,
And sold my Reputation for a Song.

[84]

உண்மை, உண்மை மனம் திருந்திச் சூளுரைப்பேன்

ஆயின் சூளுரைக்கு முன் நினைவோ டிருந்தேனா ?

மீண்டும் மீண்டும் வசந்தம் வரும் பூவேந்திக் கொண்டு.

என் பாபச் செயலின் மூல நார் முறிந்திடும் கிழித்து.

[84]

Indeed, indeed, Repentance oft before
I swore – but was I sober when I swore?
And then, and then came Spring, and Rose-in-hand
My thread-bare Penitence apieces tore.

Series Navigationவெய்யில்அருவம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *