Posted in

நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

This entry is part 5 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017
‘நபிகள் நாயகம்’ எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.
முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூலுக்கு கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் தொகுப்பாசிரியராகவும் கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளா உதவியாளராகவும் இருந்து நெறிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தொகுப்பாக்க ஆலோசனை கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளாக்கான் போன்றோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களின் கவிதைகள் ஒன்றுதிரட்டப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இதில் சகோதர இனத்துக் கவிஞர்களது கவிதைகளும் இடம்பெற்றிருப்பதானது இந்நூலின் மதிப்பினை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு கணிப்புரை வழங்கியுள்ள கவிஞரும், விரிவுரையாளருமான எப்.எச்.ஏ. ஷிப்லி ‘உலக மக்களால் அறிவிலிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரேபிய பாலைவனப் பூமியில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்நிலையை அடைய முடிந்தது எப்படி? என்ற கேள்விக்கான விடையை இந்நூலில் நீங்கள் பெறலாம்’
மேலும் ‘நபிகள் நாயகம் போன்று ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்? நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அப்படியே இன்றும் பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விக்கான விடைகளும் கவிதை வடிவில் இந்நூல் எங்கும் விரவிக் கிடக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஜம்யத்துல் உலமா கிண்ணியா பிராந்திய செயலாளர் ஆரிப் மௌலவி, மஜ்லிஸ் அஸ்ஸூரா தலைவர் ஏ.எம். ஹிதாயத்துல்லாஹ் (நளீமி), விரிவுரையாளர் ஹபீபுள்ளா மௌலவி, கதீப்மார் சம்மேளனத் தலைவர் ஏ.எம். நபீர் மௌலவி போன்றோரும் இந்நூலுக்கு உரை வழங்கியிருப்பது பெரும் சிறப்பம்சமாகும்.
எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அதன் தலைவரும், செயலாளரும் அழைப்பு விடுக்கின்றனர்.
தகவல் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்
Series Navigationசூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறதுஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *