உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 12 in the series 10 செப்டம்பர் 2017

unnatha

திண்ணை வாசக நண்பர்களே,

ஆங்கிலத்தில் பெர்னார்ட் ஷா எழுதிய Man and Superman நாடக மொழிபெயர்ப்பான எனது நூல் “உன்னத மனிதன்”, சென்னை தாரிணி பதிப்பகமாக, திருமிகு தேமொழியின்

மதிப்புரையோடு திரு. வையவன் வெளியிட்டுள்ளார். இந்நாடகக் காட்சிகள் யாவும் தொடர்ந்து திண்ணையில் வாரா வாரம் வெளிவந்தவை.

மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் 

நன்கலம் நன்மக்கட் பேறு.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

“மக்களால்” காணப் படும்.

என்னும் திருவள்ளுவர் குறட்பாக்களின் இல்லறத்து உட்கருத்தை விளக்குவதே உன்னத மனிதன் நாடகத்தின் குறிக்கோள். நடிப்பு நாடகமாக அது எழுதப்பட்டாலும், அது ஒரு படிப்பு நாடகமாகவே மெதுவாக நகர்கிறது. வசனங்கள், கருத்துகள் நீண்டு போகும் போது வாசகர் களைப்படை வதால், வசனங்கள் சுருக்கப் பட்டுள்ளன. சில கருத்துகள் நீக்கப் பட்டுள்ளன.  படிப்பு நாடகத்தில் மேற்கோள் பொன்மொழிகளாக, ஃபிரடெரிக் நியட்ஸே, டால்ஸ்டாய், விவேகானந்தர், ஆல்பர்ட் சுவைட்ஸர் போன்றோர் வாசகங்கள் இடை இடையே கூறப்பட்டுள்ளன.

பெர்னார்ட் ஷாவின் நாடகப் படைப்புகளில் உயர்ந்த முறையில் மனித நேய நெறிப்பாடுகளைக் கலைக் கண்ணோட்டத்தில் உளவி நேர்த்தி யான கருத்துக்களை வார்த்துள்ள நாடகம் “மனிதன், உன்னத மனிதன்” நாடகம் [Man and Superman]. உயர்ந்த திறமுள்ள வாரிசுகளுடன் இல்வாழ்க்கையில் வையத்துள் வாழ்வாங்கு வாழும் உன்னதம் பெற இல்லறத் தம்பதிகளுக்கு நாடகத்தில் வழிகாட்டியுள்ளார் பெர்னார்ட் ஷா.  உன்னத மனிதன் நாடகம் நடிப்பு நாடகம் என்பதை விடப் படிப்பு நாடகம் என்பதே பொருத்த மானது. பெர்னார்ட் ஷா எழுதிய பல்வேறு நாடகங்களில் உன்னத மனிதன் நாடகமே உயர்ந்த படைப்பாகக் கருதப் படுகிறது.

ஒரு மனிதன் காதலில் மூழ்கிக் கிடந்தால், அவனது எதிர்கால வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும் தீர்மானங்களை அவன் எடுக்க அனுமதிக்கக் கூடாது ! காதலுக்கு முன்னிடம் அளித்து அறிவோடு வாழ மனிதனுக்கு ஏற்புடமை இல்லை ! காதலரின் சபதங்கள் பயனற்றதாக நாம் பறைசாற்ற வேண்டும். மேலும் உயர்ந்த இல்வாழ்வுக்குக் காதல் தடையானது என்று சட்டப்படி அது தவிர்க்கப்பட வேண்டும். மேலான ஆடவர் மேலான மாதரை மணக்க வேண்டும். விதிமுறை இல்லாத கும்பலுக்கு (Rabble)  காதல் ஒதுக்கப்பட வேண்டும். திருமணம் செய்து கொள்வதின் குறிக்கோள் சந்ததி விருத்திக்கு மட்டுமில்லாது, சந்ததி உயர்வுக்கும் உரியது !” என்று ஃபிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி (Friedrich Nietzsche) (1844-1900) கூறுவதை ஏற்றுக் கொள்கிறார் பெர்னார்ட் ஷா.

நூல் பக்கங்கள் : 258

விலை ரூ. 300

பதிப்பகம் : தாரிணி பதிப்பகம்,

திரு வையவன்

4A. ரம்யா பிளாட்ஸ்

32/79  காந்தி நகர்’

4 ஆவது மெயின் ரோடு

அடையார், சென்னை: 600020

++++++++++++++++++++

சி. ஜெயபாரதன், கனடா 

Series Navigationவிதை நெல்உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *