சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 11 in the series 15 அக்டோபர் 2017

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு
——————————————————————————————
சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு ” மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர் ஜலான் ஈப்போவில் – நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர்.
நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் பேசினார்
” சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.
ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதநிது போவதை இந்நாவல் காட்டுகிறது.
மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின்யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது ” என்றார்.
சுப்ரபாரதிமணியன் ஏற்புரை வழங்கினார்.
வீரபாலன் ( முன்னேற்றப் பதிப்பகம் சென்னை) பதிப்பாளர் பேசினார் – எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும்.
என் ” முன்னேற்றப்பதிப்பகம் “ வெளியிடும் “ கடவுச்சீட்டு “ என்ற இந்நாவல் மலேசியா பின்னணி நாவல் ஆகும். மலேசியா வாழ் தமிழ்மக்களின் வாழ்க்கையைச் சொல்லுவது. அமரர் அகிலன் அவர்களின் “ பால்மரக்காட்டினிலே “ நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர் எழுதிய நாவல் என்ற வகையில் பெருமை கொண்டது . அது போல் “ கடவுச்சீட்டு “ என்ற இந்நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்டது. அம்மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த விசயங்களின் சாரமாக இதை எழுதி உள்ளார். மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட இவரின் இன்னொரு நாவல் “ மாலு “ ( மாலு- ரப்பர் மரத்தில் பால் எடுக்கப் போடப்படும் கோடு )வை உயிர்மை பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது.
சுப்ரபாரதிமணியனின் “கோமணம் “ என்ற நாவலை சென்றாண்டு வெளியிட்டேன். சிறந்த வரவேற்பு பெற்ற அந்நாவலை அடுத்து இந்நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.சமூகத்தில் எழுத்தாளர்கள் சமூக யதார்த்தை எழுதி சமூக மாற்றங்களுக்கு வித்திட வேண்டும். பயமற்ற எழுத்து பயமற்றப்பதிவு. மலேசியா தமிழர்களின் வாழ்க்கையின் ஒருபகுதியை இந்நாவல் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
அருள் ஆறுமுகம் ( துணைத் தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் ) எழுத்தாளர்கள் ரேவதி, கண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
( ரூ120 முன்னேற்றப் பதிப்பகம் சென்னை வெளியீடு. 94867 32652 )

எச்சிலால் கூடுகட்டி வாழும் அரியவகை வெளிநாட்டு பறவைகள் சிலது பற்றி செய்தித் தாள்க்ளின் மூலம் அறிந்து கொண்டதைப்பகிர்ந்து கொள்கிறேன்.

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.
——————————————-
மலேசியப்பின்னணி நாவல்
பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்

Series Navigationபுரியாத கவிதைஏன் இந்த நூல்? (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *