காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)

This entry is part 6 of 12 in the series 7 ஜனவரி 2018

அதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல்

“பார்வையா தாக்கும்
படையா ”

என்னையறியாமல்
என்மனம்
மயங்குவதெப்படி?
ஒ இவள்தான் காரணம்!
அணிகலன்களால்
கனத்திருக்கும்
கனத்த அணிகலன்களால்
அழகோடிருக்கும்
இவள்தான் காரணம்

இவளென்ன
இவ்வுலகின்
இயலபான பெண்ணா?
இல்லை
அழகிய மயிலா
இல்லை
தெய்வப்பெண்ணா
மயங்குகிறதே மனம்

எப்படி?
அவள் பார்வை
அப்படி!

பார்க்கிறாள்
எனப்பார்த்தால்
ஒரு
படையுடன்வந்து தாக்கும்
தெய்வப்பெண் போலல்லவா
பார்க்கிறாள்

பெண்மை
பெருகிவழியும்
இவள்
பார்வையின் வழி
கண்டர்றியாத
கண்டறியமுடியாத
காலனைக்கண்டேன்

போதையாய் வடிவெடுத்த
பேதையிவள்
இந்தப்பேதைப் பருவத்துப்
பெண்ணின் பார்வைக்கு
உயிர் உண்ணும் ஆற்றல்
உள்ளதையும் அறிந்தேன்

பார்வையால் உயிருண்ணும்
பாவையிவள் பார்வை
காலனோ
மானோ
கண்களோ
இல்லை இல்லை
இம்மூன்றின் கூட்டோ
மூன்றும் ஒன்றாகி
உருவெடுத்த ஒன்றோ

வளைந்த புருவங்கள்
வளையாமல் நெளியாமல்
இருந்தால்
துன்பங்கள் நமக்கில்லை
பார்வையால் வரும்
பதற்றமும் நடுக்கமும்
நமக்கில்லை

ஆண்யானைமீது போர்த்திய
முகப்படாம் எனும்
பதாகையா
இந்த நிறைநிலாப்பெண்ணின்
சாயாகொங்கைகளில்
சாத்தியிருக்கும் ஆட்டை
சார்ந்திருக்கும் ஆடை?

வியப்பின்
விளைவல்லவா இது?
வியக்கவைக்கும்
வசீகரத்தின்
விசித்திரமல்லவா இது!

போர்க்களத்தில்
பகைவரே நடுங்கும்
என்
கம்பீரம் கர்ஜனை
பகைவரே அஞ்சும்
என்
தோற்றம் சீற்றம்
பகைவரே பதைக்கும்
நெஞ்சுக்குள் உதைக்கும்
என்
வித்தைகள் வினைகள்
இவளின்
நிகரில்லா நெற்றிக்கு
முன்
நில்லாது தோற்றதே
ஒளிமிகு நெற்றிக்குமுன்
நில்லாது
ஓடி ஒளிந்த்தே ஏன்?

பித்துகொள்ளவைக்கும்
பெண்மான் பார்வை
பிறப்போடுவந்த
தமிழ்மண் நாணம்
இரண்டும்சேர்ந்த இவளுக்கு
நகையென
அணிகளன்பூட்டுவது
நகைப்புக்குரியதே

புன்னகைப் பொழியும்
இவளுக்குப்
பொன்னகை எதற்கு?
காதலை
கவார்ச்சியை
மனதின் இழப்பை
கவர்ந்திழுக்கும் ஈர்ப்பை
இவளைக்கண்டால்
வழங்கும் வள்ளல்
காமமே
உண்டால் மயக்கம்
தரும்
சுவை மதுவுக்கு இல்லை
அந்த மகிமை.

(4.1.2018)

Series Navigationதொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …குடல் வால் அழற்சி ( Appendicitis )
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *