சீமானின் புலம்பல் வினோதங்கள்

This entry is part 1 of 12 in the series 7 ஜனவரி 2018

அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த சில வருடங்களில் ஆகியிருக்கிறது. இலுமினாட்டி என்று தமிழில் எழுதி கூகுளில் தேடினார் 32800 பதிவுகள் இருக்கின்றன என்று சொல்லுகிறது. இந்த இலுமினாட்டி என்பது அமெரிக்க புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பரப்பிய கட்டுக்கதை. முக்கியமாக உலகமயமாக்கப்படும் அமெரிக்க […]

இரவு

This entry is part 2 of 12 in the series 7 ஜனவரி 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு அமர்ந்திருக்கும் காவலாளிக்கு இரவென்பதொரு இருமடங்கு பகலாய்…. போரற்ற பாருக்காய் ஏங்கிக்கொண்டே அவரவர் நாட்டின் எல்லைப்புறஙளில் ஆயுதந்தாங்கிக் கண்காணித்துக்கொண்டிருக்கும் படைவீரர்களுக்கு இரவென்பதும் இன்னொரு கண்ணிவெடியாய்…. ஒருவேளை சோறில்லாமல் தெருவோரம் படுத்துறங்கும் பிச்சைக்காரருக்கு இரவென்பது […]

திருமண தடை நீக்கும் சுலோகம்

This entry is part 3 of 12 in the series 7 ஜனவரி 2018

தாரமங்கலம் வளவன் “ நம்ம பொண்ணுக்கு இப்ப பதினைஞ்சு வயசு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாண மேட்டரை பத்தி அவளோட எப்படி பேச முடியும்.. நீ ஜாதகக்காரன் கிட்ட போனதே தப்பு..” என்றார் என் கணவர். என் கணவர் இப்படிச் சொன்னவுடன், மகள் கல்பனாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜாதகக்காரரிடம் திருமண தடை ஏதாவது இருக்கிறதா என்று அவசரப் பட்டு கேட்டு விட்டோமோ என்று தோன்றியது எனக்கு. நான் கேட்டவுடன், “ ஆமாம்.. திருமணத் தடை […]

செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு

This entry is part 4 of 12 in the series 7 ஜனவரி 2018

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++  https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது ! இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து  வாகனம் போய்வரும் ! செல்வந்தர் முதலில் குடிபோகும் புதிய காலனியாய்ச் செவ்வாய்க்  கோளாகி சிவப்பொளி விண்வெளி யுகத்தில் சுடரப் போகுது ! மாந்தரைக் கவரப் போகுது ! […]

தொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …

This entry is part 5 of 12 in the series 7 ஜனவரி 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 203. எனக்கொரு மகன் பிறந்தான் … மருத்துவமனையில் நடந்துள்ள ஊழல் ஊழியர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அதுபோன்ற இனிமேல் யாரவது செய்தால் சுலபத்தில் பிடிபடுவார்கள் என்ற நிலையும் உருவானது. அந்த வகையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா மிகவும் கண்டிப்பாகவே இருந்தார். ஆனால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனைச் சங்கம் இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக ஒரு தீர்வைச் சொல்லாமல் தள்ளிப்போட்டது. இதனால் டாக்டர் செல்லையா பொறுமை இழந்தார். இதனிடையே […]

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)

This entry is part 6 of 12 in the series 7 ஜனவரி 2018

அதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல் “பார்வையா தாக்கும் படையா ” என்னையறியாமல் என்மனம் மயங்குவதெப்படி? ஒ இவள்தான் காரணம்! அணிகலன்களால் கனத்திருக்கும் கனத்த அணிகலன்களால் அழகோடிருக்கும் இவள்தான் காரணம் இவளென்ன இவ்வுலகின் இயலபான பெண்ணா? இல்லை அழகிய மயிலா இல்லை தெய்வப்பெண்ணா மயங்குகிறதே மனம் எப்படி? அவள் பார்வை அப்படி! பார்க்கிறாள் எனப்பார்த்தால் ஒரு படையுடன்வந்து தாக்கும் தெய்வப்பெண் போலல்லவா பார்க்கிறாள் பெண்மை பெருகிவழியும் இவள் பார்வையின் வழி கண்டர்றியாத கண்டறியமுடியாத காலனைக்கண்டேன் போதையாய் வடிவெடுத்த […]

குடல் வால் அழற்சி ( Appendicitis )

This entry is part 7 of 12 in the series 7 ஜனவரி 2018

டாக்டர் ஜி. ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை சிகிச்சையில் இதுவே முதலிடம் […]

ஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 8 of 12 in the series 7 ஜனவரி 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்னொருவன் மார்பில் புரளும் சின்னப் பெண்ணே ! நீ செத்துப் போவது நல்லதென நான் சிந்திக்கிறேன் ! சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் சின்னப் பெண்ணே ! இன்றேல் எனக்குத் தெரியாது நான் எப்படிப் பட்டவன் என்று ! உயிரைப் பற்றிக் கொண்டு இயன்றால் நீ ஓடிப் போவது நல்லது சின்னப் பெண்ணே ! மண்ணுக்குள் புதைத்துக் கொள் மண்டையை சின்னப் பெண்ணே ! அடுத்தவன் அணைப்பில் நீ […]

குறிப்புகள் அற்ற குறியீடுகள்!

This entry is part 9 of 12 in the series 7 ஜனவரி 2018

இல.பிரகாசம் இவைகளை இப்படியெல்லாம் குறிப்பெழுதலாம் ஒரு தூண்டில் என்றும் ஒரு கெண்டை என்றும் ஒரு மறைந்து போன குளத்திற்கு வருணனையாக இப்படியெல்லாம் குறியீடுகளைக் குறிக்கலாம் ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொரு தொழிலோடு தொடர்புடைய குறியீடுகளை ‘அது அவர்கள் வசிக்கும் தெரு” வென்று பலவித சைகை மொழிகளோடு குறிப்புகளை வரையலாம் அவர்களைப் பற்றிய(பெண்களாக இருக்கக் கூடும்) குறிப்புகளை உடற்குறிகளிட்டு அதிக சிவந்தெழத்தக்க கோபங்களின் போது மற்றவர்களை முன்னொட்டு அல்லது பின்னொட்டுகளாக அழைக்கிறபோது அவர்களது சுயமொன்று தோன்றலாம் அவள் நேற்று மாலைக்குப் […]

சிறுவெண் காக்கைப் பத்து

This entry is part 10 of 12 in the series 7 ஜனவரி 2018

சிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம் சிறிது வெளுத்துக் காணப்படுவதால் இது சிறுவெண்காக்கை எனப்படுகிறது. இது நம் நாட்டிலும், மலாயா, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் ஐப்பசி முதல் நான்கு மாதங்களுக்கு நீர்நிலைகளில் காணப்படும். பிற காலங்களில் வேறு நாடுகளுக்குச் சென்று விடும். நீர்நிலைகளில் […]