இப்போது எல்லாம் கலந்தாச்சு !

This entry is part 5 of 8 in the series 24 ஜூன் 2018

 

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++++++++

 

ஒன்று, இரண்டு, மூன்று !

இன்னும் எண்ணிக் கொள்ளவா ?

நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு !

நான் உம்மை நேசிக்கிறேன் !

அகரம், இகரம், உகரம், எகரம் !

தோழ னுக்கு இளநீர் தர்மம் !

நகரம், தகரம், மகரம், வகரம் !

நான் உம்மை நேசிக்கிறேன் !

 

நாம் யாம், நாம் தாம் எல்லாம் !

கடல் கடந்து கால்தடம் வைப்போம் !

காட்டை வெட்டி வாழ்தளம் படைப்போம் !  

காற்று ஏணியில் வானைத் தொடுவோம் !

நோக்குவீர் இப்போ தெம்மை !

எல்லாம் ஒன்றாச்சு !  எல்லாம் கலந்தாச்சு !

இப்போ தொருமைப் பாட்டில் எல்லாம்  !

 

கறுப்பு, வெளுப்பு, நீலம், பச்சை !

தீர்த்து வைப்பேன் தோழனின் இச்சை !

பழுப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு,

பாரில் வர்ணத்தை நேசிப்பேன் !

எல்லாம் ஒன்றாச்சு !  எல்லாம் கலந்தாச்சு !

இப்போ தொருமைப் பாட்டில் புகுந்தாச்சு !

 

+++++++++++

Series Navigationகோனோரியா ( மேகவெட்டை நோய் )வீதியுலா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *