‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 7 in the series 8 ஜூலை 2018

 

 

  1. பிரதி

 

எதற்கு ?


வேண்டாம் _


போதும்.”

 

உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய்

எழுத்தாளர் பிரதி;

 

கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய்

இருபதாயிரம் மைல்களுக்கப்பால்

சுயமைதுனஞ்செய்யும்

வாசகப்பிரதி;

 

கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது

கவிதை

கன்னங்களில் நீர் படிய.

 

 

 

  1. பங்களிப்பின் பல்பொருள் அகராதி :

ஓர் அறிமுகம்

கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.

 

கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.

 

காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்

 

ஆனபடியால் ஆகட்டும் _

 

உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.

 

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *