தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உருண்டை யான உலகம் சுழல்வதால்
சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன் !
உருண்டை யான உலகம் பழையதால்
துருப்பிடிக்கும் காதல் பழையது !
புதுப்பித்துக் கொள் காதலை !
காதலே எல்லாம் ! காதல் மாது நீ !
புயல் ஓங்கி அடிப்பதால் எனது
புத்தி மிரண்டு போகுது !
புயல் காற்று பழையதால், காதல் பழையது
புதுப்பித்துக் கொள் காதலை !
காதலே எல்லாம் ! காதல் மாது நீ !
வானம் நீலமாய் இருப்பதால் தான்
வருகுது அழுகை எனக்கு !
வானம் பழையதாய் இருப்பதால்
காதலும் பழையது !
வாடும் காதல் புதுப்பித்துக் கொள் !
காதலே எல்லாம் !
காதல் மாது நீ !
+++++++++++++++++++
- 52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)
- சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
- ’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்
- தொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை
- மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )
- நான் என்பது
- 2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்
- பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – எல்லாம் உருண்டை