பட்டினி என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்
க்ரைம் ஆஃப் பிரிட்டன் இணையதளம்.
பிரிட்டன் தனது காலனிய ஆட்சிமுறைக்கு முக்கியமான சாதனாக கருதியது பட்டினியை. அது இன்றும் ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இன்றும் யேமனில் இருக்கும் 28 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கிறார்கள். இன்றும் பிரிட்டனின் ராணுவ ஆலோசகர்கள், சவுதி அரேபியாவின் ராணுவத்துக்கு எங்கே தாக்க வேண்டும், எப்படி தாக்கவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள். ஆகையால், யேமனின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமானதல்ல.
தனது பேரரசின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பிரிட்டனின் நீண்ட வரலாறை பார்ப்போம்
ஐர்லாந்து
1845-52 இல் ஐர்லாந்தில் உருவாக்கப்பட்ட பஞ்சம் ஆப்பிரிக்காவில் உருவாக்கப்படும் பஞ்சங்களை போன்றே செயற்கையானது. அந்த பஞ்சம் போருக்கான ஒரு ஆயுதம், ஆக்கிரமிப்புக்கான ஒரு ஆயுதம். சுமார் 10 லட்சம் ஐரிஷ் மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களை ஆண்டது பிரிட்டனே. 15 லட்சம் ஐரிஷ் மக்கள் ஐர்லாந்தை விட்டு பிணப்பெட்டி என்று அழைக்கப்பட்ட கப்பல்களில் ஐர்லாந்தை விட்டுதப்பினார்கள்.
ஐர்லாந்தில் ‘Black 47’ என்று அழைக்கப்பட்ட கறுப்பு 47இல், பஞ்சத்தின் போது, ஐர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுதான்யங்களையும் இதர உணவுகளையும் ஏற்றிகொண்டு சுமார் 4000 கப்பல்கள் ஐர்லாந்திலிருந்து பிரிஸ்டல், கிளாஸ்கோ, லிவர்பூல் லண்டன் ஆகிய துறைமுகங்களுக்கு சென்று ஆங்கிலேயர்களுக்கு உணவை கொண்டு சென்றன. வெறும் வெண்ணெயை மட்டுமே எடுத்துகொண்டால், சுமார் 800,000 காலன் வெண்ணெய் ஐர்லாந்திலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு ஆங்கிலேயர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஏனெனில், ஐர்லாந்து மக்கள் பட்டினியால் செத்தாலும் ஆங்கிலேயர்கள் வெண்ணெய் இல்லாமல் இருக்கக்கூடாது அல்லவா?
இந்த இனப்படுகொலைக்கு முன்னால், ஐர்லாந்தின் மக்கள் தொகை 80 லட்சமாக இருந்தது. இன்னும் 150 ஆண்டுகளுக்கு பின்னாலும் ஐர்லாந்தின் மக்கள் தொகை அந்த எண்ணிக்கைக்கு வரவில்லை.
இந்தியா
பிரிட்டனின் ஆட்சிக்காலத்தில் பரந்த பஞ்சம் பட்டினி என்பது வாழ்க்கையின் நிரந்தரமான விஷயமாக இந்தியாவில் ஆனது. 1943இல் வங்காள பஞ்சமே பிரிட்டன் உருவாக்கிய கடைசி இந்திய பஞ்சம். இதில் சுமார் 40 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். அதே நேரத்தில் பிரிட்டனின் ராணுவம், பல லட்சக்கணக்கான டன்கள் அளவில் இந்த பஞ்சத்தில் அடிபட்ட மக்களிடமிருந்து அரிசியை எடுத்துகொண்டது. மற்ற நாடுகள் வங்காளத்துக்கு உணவு உதவி அனுப்ப முன்வந்தாலும், வின்ஸ்டன் சர்ச்சில் அந்த உதவியை கொடுக்கக்கூடாது என்று தடுத்தார்.
பிரிட்டிஷ் அரசின் போது இந்தியாவில் வந்த மிகப்பெரிய பஞ்சங்கள்
மிகப்பெரும் வங்காள பஞ்சம் (1769-1770) – 1 கோடிக்கும் மேல் கொலை
சென்னை மாகாணத்தில் பஞ்சம் (1782-1783) சாலிசா பஞ்சம் (1783-1784) – மொத்த படுகொலைகள் 1.1 கோடி
டோஜி பாரா பஞ்சம் (1791-1792) – 1.1 கோடி
ஆக்ரா பஞ்சம் (1837-1838) – 10 லட்சம்
மேலை டோயப் பஞ்சம் (1860-1861) – 20 லட்சம் கொலை
ஒரிஸ்ஸா பஞ்சம் (1866) – 10 லட்சத்துக்கும் மேல்
ராஜபுடானா பஞ்சம் (1868-1870) – 15 லட்சத்துக்கும் மேல் கொலை
பிகார் பஞ்சம் (1873-1874) – ரிச்சர்ட் டெம்பிள் என்பவர் அதிகாரியாக இருந்து மக்களை பஞ்சத்திலிருந்து தப்பிக்க வைத்தார்.
அதனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டார். இதன் பிறகு பஞ்சத்தின் போது அரசாங்கம் செலவு செய்யக்கூடாது என்ற கொள்கை உருவானது
பெரும் பஞ்சம் (1876-1878) – 55 லட்சம் கொலைகள்
கஞ்சம், ஒரிஸ்ஸா, பிகார் பஞ்சம் (1888-1889) – லட்சத்துக்கும் அதிகமான கொலைகள்
இந்தியா பஞ்சம் (1896-1897) – பல லட்சம்
இந்தியா பஞ்சம் (1899-1900) – 10 லட்சம் சாவுகள்
பாம்பே பிரசிடென்ஸி பஞ்சம் (1905-1906) – லட்சக்கணக்கான சாவுகள்
வங்காள பஞ்சம் (1943-1944) – 40 லட்சத்துக்கும் மேலான சாவுகள்
இந்த பஞ்சங்களின் போது ‘relief works’ என்ற பெயரில் வேலை கொடுத்து உணவு கொடுக்கும் திட்டங்களை நிறைவேற்றினார்கள். இந்த திட்டங்களில் ஏறத்தாழ சாகும் வரைக்கும் வேலை கொடுத்து சாகடிக்கும் திட்டங்களே இவை [i]
”கருப்பன்களை காப்பாற்ற இவ்வளவு செலவு செய்வது தவறானது”“a mistake to spend so much money to save a lot of black fellows”. [i] என்று லார்ட் சாலிஸ்பரி மற்ற இந்திய அரசாங்க நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார்.
பஞ்சத்தின் போது நிவாரண காசு (பெரும் பஞ்சம் 1876-88) இதில் 55 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் நிவாரணம் பெறுவதற்காக வரும் இந்தியர்கள் தகுதியானவர்களா என்று நிர்ணயிக்க பிரிட்டன் ஒரு திட்டத்தை வகுத்திருந்தது. பட்டினியில் வரும் இந்தியர்கள் நிவாரணம் வேண்டுமென்றால், 10 மைல் தூரம் நடந்துவந்து அதனை பெற்றுகொள்ள வேண்டும். இந்த நிவாரண முகாம்களில் கொடுக்கப்பட்ட உணவு ஹிட்லர் நடத்திய படுகொலை முகாம்களில் கொடுக்கப்பட்ட உணவை விட குறைவு. 1877 இல் பஞ்சத்தின் போது நடத்தப்பட்ட நிவாரண முகாம்களில் மட்டும் இறப்பு விகிதம் 94% சதவீதம். அதாவது நிவாரணம் பெற வந்த 100 பேரில் உயிர் பிழைத்தவர்கள் வெறும் ஆறுபேர்தான்.
பிரிட்டனின் ஆட்சி, அதன் வழிமுறை, நோக்கம் ஆகியவை இந்தியாவில் பஞ்சத்தை தடுப்பதல்ல. அதனை உருவாக்குவதே.
மலாயா
1948-60இல் பிரிட்டன் மலாயாவை ஆட்சி செய்தபோது மலாயா எமர்ஜன்ஸி என்ற ஒன்றை கொண்டுவந்தது. இது மலாயா மக்களுக்கு உணவை கொடுக்ககூடாது என்பதே நோக்கம். பிரிட்டன் மலேசியாவை கொள்ளையடிப்பதை எதிர்க்கும் மலேசியர்களை பட்டினி போட்டு கொல்வதே முக்கிய நோக்கம். இதற்காக ரேஷன் உணவு குறைப்பு, டப்பாக்களின் அடைக்கப்பட்ட உணவை கொடுக்கும்போதே அதனை ஓட்டை போட்டு உடனே சாப்பிட வைக்கும் முறை, வேலை செய்யும் இடங்களில் உணவை உண்ணக்கூடாது என்ற சட்டம் ஆகியவை இதன் பாகங்கள்.
Brits spraying crops with herbicides and defoliants (Agent Orange).
மரங்களின் இலைகளை அழிக்கும் வேதிப்பொருட்களையும், செடிகொடிகளை அழிக்கும் வேதிபொருட்களையும் தெளிக்கும் பிரிட்டானியர்கள்
ஆப்பரேஷன் ஸ்டார்வேஷன் (பட்டினி திட்டம்) செயல்பாட்டுக்காக பிரிட்டானியர்கள் ஏஜெண்ட் ஆரஞ்சை விவசாய பயிர்கள் மீது தெளித்தார்கள். அமெரிக்கா இதனை பார்த்துத்தான் வியத்நாமில் ஏஜெண்ட் ஆரஞ்சை வியத்நாம் காடுகளில் தெளித்து உணவு உற்பத்தியை கெடுத்தது.
பல லட்சக்கணக்கான மலாய்கள் பிரித்தானியர்களால் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் உருவாக்கிய தோட்டங்களில் கட்டாயமாக வேலை செய்விக்கப்பட்டார்கள். மிகச்சிறிய தவறும் கடுமையாக தண்டிக்கப்பட்டது. முதல் வேலையே உணவை நிறுத்துவதுதான்.
பயாஃபரா
பிரிட்டன் நைஜீரியாவுக்கு ஏராளமான ஆயுத தளவாடங்களையும் கூலிப்படைகளையும் பயாஃப்ரா போரின் போது (1967-70)இல் கொடுத்தது. காரணம் நைஜீரியாவில் இருந்த அமெரிக்க, இங்கிலாந்து பெட்ரோல் கம்பெனிகளுக்கு எதிராக போராடிய மக்களை கொன்று குவிக்கத்தான்.
நைஜீரியாவுக்கு உதவுவதற்காக, அதற்கு எதிராக போராடிய பயாஃப்ரா மக்களுக்கு எதிராக உணவுத்தடையை உருவாக்கி பல எண்ணற்ற மக்கள் கொல்லப்படுவதற்கு உதவி புரிந்தது.[iii]
பிரிட்டன் காமன்வெல்த் மந்திரி ஜார்ஜ் தாமஸ் 1967இல் “நைஜீரியாவுக்கு இங்கிலாந்து உதவுவதற்கு ஒரே காரணம் நைஜீரியா நமக்கு அதிக வியாபாரத்தையும், இங்கிலாந்து அங்கே முதலீடு செய்வதற்கு உதவுவதற்காகவும்தான். முக்கியமாக அங்கே இருக்கும் பெட்ரோலை நாம் கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவுகிறார்கள் என்பதே” என்றார். (iii)
யேமனின் 28 மில்லியன் மக்கள் (2.8 கோடி மக்கள்) பிரிட்டனின் கையாளான சவுதி அரேபியாவால் பட்டினிக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கே தினந்தோறும் குண்டு மழை பொழிகிறது. பிரிட்டானியர்கள் சவுதி அரேபியாவின் ராணுவ மையங்களில் ஆலோசகர்களாக உட்கார்ந்துகொண்டு எங்கே குண்டை போடவேண்டும் என்று ஆலோசனை கூறிகொண்டிருக்கிறார்கள் (iv) யேமனின் விவசாய நிலங்களும், பண்ணைகளுமே முதல் குறியாக தாக்கப்படுகின்றன என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயமல்ல. பிரிட்டனின் இந்த தாக்குதல் திட்டத்தாலேயே அவர்கள் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள்.
[i] Mike Davis, “Late Victorian Holocausts” (UK: Verso Books, 2000], pg.37
[ii] ibid., pg.40
[iii] Quoted in the Independent Newspaper, 2004.
[iv] From the Guardian Newspaper, 2016.