வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும்
மேலாகப் பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது
.பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது
என்ற நினைப்பை, அவர் கடந்து சென்றுவிட்டார், நமக்காக வாழ்ந்த நினைவாக,அவரது நிறைவான
எழுத்து முழு நம்பிக்கையுடன் நம்மிடையே உலா வருகின்றது.
புதுச்சேரி, பல சிறந்த படைப்பாளிகளை உருவாக்கியுள்ளது. பாரதி, தமிழ் நாட்டில் பிறந்து,
புதுச்சேரியில், தஞ்சம் புகுந்து, அவரது எண்ணங்களை,
சுதந்திர வானில் பறக்கவிட்டார். பிரபஞ்சன் புதுச்சேரியில் பிறந்து, சென்னையில் தவழ்ந்து வந்தார்.
பிரபஞ்சன் வாழ்ந்த போது, பல நல்ல உள்ளங்களை கண்டுக்கொண்டார்.
அவரை சுற்றி ஒரு கூட்டம், இலக்கிய சோலையில் பறந்துக்கொண்டிருந்தது.
மனிதத்தை தன் எழுத்தின் மையப்புள்ளியாக சுழல விட்டார். அவரது தோழைமையுணர்வும்,
அன்பான அணுகுமுறையும் ,பல படைப்பாளிகளை
உருவாக்கியுள்ளது. அவரது சொத்து அதுதான் என்று அவர் நினைத்து வாழ்ந்திருக்கலாம்.
அவரது வங்கிக்கணக்கை நம்பி வாழ்ந்ததில்லை.
வழியெங்கும், தோழைமையின் சுவடுகள் நிரம்பிக்கிடந்தை, எண்ணி
மகிழ்ந்திருக்கலாம். ஒரு கையெழுத்துப் பத்திரிகைக்கு, தயங்காமல்,
பேட்டிக் கொடுத்த மாபெரும் மனித எழுத்தாளன் அவன்.
புதுச்சேரி, பூமியில். பிரஞ்சு ஆதிக்கத்தின் வரலாற்றை ஒரு இலக்கியக்கர்த்தாவின்
படைப்பாக நம் முன் கொண்டு நிறுத்தியவர் பிரபஞ்சன்.
அவரது, கடைசி காலக்கட்டத்தில், திறந்த மனதுடன், பல நல்ல நூல்களின்
சிறப்பினை, வளரும், படைப்பாளிகளுக்கு அடையாளம் காட்டினார்.
மனிதத்துவத்திற்கும் படைப்புக்கும் உள்ள உறவினை, அவரது எழுத்துக்கள்
இணைப்புப்பாலமாக இனம் காட்டியுள்ளது.
பெண்மையை போற்றிபோற்றி எழுதிச் சென்றுள்ளார். அவரது படைப்புகளில் உலாவரும்,
பெண்கள் , எழ்மையுடன் நடந்து சென்று,
வாழ்க்கைப் படகை, நம்மிக்கையுடன் ஒட்டுபவர்கள். ஆண்களின்
காலைப்பிடித்து தொங்காமல், உள்ளத்தின் ஒளிக்கொண்டு வாழ்ந்து
செல்பவர்கள். பல பெண்ணிய இயக்கங்களில் சென்று, தன் கருத்தினை
கூறிச் சென்ற, சில படைப்பாளிகளில், பிரபஞ்சன் முதன்மையானவர்.
பெண்மையில், பல இடங்களில், பெரியாரிய தடங்களைக்காணலாம்.
அவரது முற்போக்கான பெண்ணிய முயற்சிகள், பல பெண்களுக்கு பிடிக்காமல்
போகலாம், ஆனால், இன்றைய ஆணாத்திக்க உலகில் அதுவோ
உண்மையாக பேசுகின்றது.
மகாநதி என்ற அவரது நாவல், அவரது சொந்த வாழ்வினை படம்பிடித்துக்காட்டும்.
அவரது வாழ்வின் உயர்வும், தாழ்வும் , இலக்கிய
மாக நமக்கு கிடைத்துள்ளது.
அந்த மகாநதி, பிரஞ்சமெங்கும் இலக்கிய நதியாக ஓடுகின்றது.
தமிழ் எழுத்தாளனை, புதுவை அரசு, ராஜமரியாதையுடன் ,இறுதிப்பயணமாக
அனுப்பி, தமிழை தலை நிமிர செய்துள்ளது.
- 2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு
- புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்
- துணைவியின் இறுதிப் பயணம் – 9
- பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி
- தனிமொழியின் உரையாடல்
- நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)
- ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு
- தலைவி இரங்கு பத்து
- பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்
- செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3