A-SAT ஏவுகணையை உபயோகித்து வான்வெளியில் இருக்கும் ஒரு சாட்டிலைட்டைத் தாக்கி அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்த நாளிலிருந்து சும்ப இந்தியர்கள், அதிலும் கேவலமான நிகும்பத் தமிழர்களின் கருத்து வாந்திகளைக் கண்டு விக்கித்துப் போயிருக்கிறேன்.
மோடி பேசப் போகிறார் எனத் தெரிந்தவுடன், உலகமே கூர்ந்து கவனித்தது. இதுவரை இந்தியாவில் இருந்த எந்த பிரதமருக்காவது இப்படி நடந்திருக்கிறதா? ஒரு இந்தியனாக பெருமையல்லவா நீங்கள் படவேண்டும்? முன்பெல்லாம் அமெரிக்க ஜனாதிபதிகளுக்குத்தான் இத்தனை மதிப்பு இருந்தது. இன்றைக்கு ஒரு இந்தியப் பிரதமர் அந்த நிலையை அடைந்திருக்கிறார். சாதாரண விஷயமில்லை என்பதனை இந்தக் குருவி மூளைக்காரர்களிடம் எப்படிச் சொல்லி விளக்குவது?!
முப்பதினாயிரம் மைல் வேகத்தில் போகிற ஒரு சேட்டிலைட்டைக் குறிவைத்துத் தாக்கி அழிப்பது என்பது சாதாரண விஷயமேயில்லை. அதனைத் துல்லியமாகச் செய்து முடிப்பது, அதுவும் முதல் முயற்சியிலேயே செய்து முடிப்பது என்பது, மிகப் பெரியதொரு சாதனை. அமெரிக்காவும், ரஷ்யாவும், சீனாவும் அதனைப் பல தோல்விகளுக்குப் பின்னரே சாதித்தார்கள். அதிலும் சீனர்கள் வான்வெளியில் நிலையாக நிறுத்தப்பட்டிருந்ததொரு சேட்டிலைத்தான் இதுவரை தாக்கி அழித்திருக்கிறார்கள். இந்தியா அழித்ததைப் போன்றதொரு வேகமான சேட்டிலைட்டை அல்ல.
இன்றைய உலகம் முற்றிலும் வான் வெளியில் இருக்கிற சேட்டிலைட்டுகளைச் சார்ந்திருக்கிறது. தகவல் பரிமாற்றத்திர்லிருந்து உளவு பார்ப்பது வரைக்கும் அந்தச் சேட்டிலைட்டுகள் மூலமாகத்தான் நடக்கிறது. ஒரு ஏவுகணை துல்லியமாக பறக்க வேண்டுமானால் அந்த சேட்டிலைட்டுகளின் உதவியில்லாமல் நடக்காது. ஒருவேளை இந்தியாவிற்கும், சீனாவிற்கும் போர் நடந்தால் சீனர்கள் முதலில் இந்திய சேட்டிலைட்டுகளைத்தான் அழிப்பார்கள். அதற்குப் பிறகு சீனனுக்கு இந்தியாவைத் தாக்குவது எளிதாகிவிடும். எத்தனை அணுகுண்டுகள், ஏவுகணைகள் இருந்தாலும் சாட்டிலைட் நேவிகேஷன் இல்லாவிட்டால் நம்மால் செய்ய முடிவது அதிகமில்லை.
சீனர்கள் நம்மை மிரட்டிக் கொண்டிருந்ததும் அதனால்தான். இன்றைக்கு இந்தியா சீனனின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இனிமேல் சீனர்களின் பேச்சும், செயலும் மிக மரியாதையாகவே இருக்கும். ஏனென்றால் இந்தியா சீனாவிற்கு இணையான வலிமை பெற்றுவிட்டது.
இதனை மோடி அறிவிக்கக்கூடாது என்று கூப்பாடு போடுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மோடிதான் இன்னும் இந்தியப் பிரதமர். இந்தச் சாதனைகளைச் சொல்ல அவருக்கு முழு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் களவாணிகளைப் போல தேர்தலுக்கு ஓட்டு வாங்க சொல்லும் பொய் வாக்குறுதிகளை அல்ல அவர் சொன்னது. இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை மூடர்காள். இது வல்லரசாக மாறிவிட்ட இந்தியாவின் அறிவிப்பு.
அதனை மோடிதான் செய்யவேண்டும். மோடி மட்டுமே செய்யவேண்டும்.
இது கொஞ்சம் செண்டிமெண்டல் போஸ்ட். பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள்.
உலகத்திலேயே என்னைத் துயருற வைக்கிற ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது குழந்தைகளுக்கு எதிராக நடக்கிற வன்முறைகள்தான். அப்படியொரு சமாச்சாரத்தை துரதிருஷ்டவசமாக நான் பார்க்க நேர்ந்தால் என்னால் இரண்டு நாட்களுக்கு உறங்க முடியாது. அடிப்படையில் கொஞ்சம் முரட்டுக் குணம் உள்ள என்னால் சாதாரணமாக குழந்தைகள் அழுவது போலப் பாடல் வந்தால் கூட அந்தப் பாடலை என்னால் கேட்க முடியாது. அதுபோல வரும் திரைப்படங்களையும் என்னால் பார்க்க முடியாது என நான் சொன்னால் பெரும்பாலோர் நம்ப மாட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் சிறு பிள்ளைகள் கடவுளின் அவதாரங்கள். ஒரு சிறு பிள்ளையின் பேச்சுக்கும், பொக்கைவாய்ச் சிரிப்புக்கும் இணையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. குழந்தைகளை யாரேனும் ஒருவன் துன்புறுத்துவதனைப் பார்த்தால் நான் அவனைக் கொலை செய்வதற்குக் கூடத் தயங்கமாட்டேன். I mean it.
ஓரினிச் சேர்க்கை உணர்வுள்ள ஹோமோசெக்சுவல்களைக் கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிறு பிள்ளைகளை வன்புணர்வு செய்பவனை என்னால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அது என்ன மாதிரியானதொரு மன அழுகல் என எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவனையெல்லாம் மனித இனத்திலேயே சேர்த்துக் கொள்ள முடியாது. அப்படியாகப்பட்டவனைப் பொது இடத்தில் வைத்துக் காயடிக்க வேண்டும் என்கிறேன்.
பெரும்பாலும் இந்தச் செயல்களைச் செய்பவன் அந்தக் குழந்தைகளுக்கு மிகப் பழக்கமானவனாகத்தான் இருப்பான். அவனை நம்பிச் செல்லும் குழந்தைகளை நாசம் செய்பவனை மனிதப்பிறவியல்லன்.
நண்பர்களே, உங்கள் குழந்தைகளை யாரை நம்பியும் விட்டுச் செல்லாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இதில் இளைஞன், வயதானவன் என்கிற வேற்றுமையெல்லாம் இல்லை. உங்கள் பிள்ளைகளை உங்களின் தொடர் கண்காணிப்பிலேயே தயவுசெய்து வைத்திருங்கள். அதற்குத்தான் முன்பெல்லாம் வீட்டில் வயதானவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு அவர்களை வெளியேற்றியதால், கைவிட்டதால் வந்த வினைதான் இவையெல்லாம்.
தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்.
- காற்றின் கன அளவுகள்
- இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்பு
- பறவைப் பார்வை
- பெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் பல்லடுக்குச் சவால்கள்
- A-Sat ஏவுகணை – சிறுவர் பாலுறவு வல்லுறவு
- ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்
- தமிழ் நுட்பம் -12- Ai in paintings/art