அம்புகள் துளைத்தபோதும், ஆழ்கிணறில் விழுந்து குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த பறவை இருகால்களும் ஒரு மனமுமே இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது படைப்புவெளியில் _ இயக்கமே ஆனந்தமாய்…. சகோதரத்துவம் பற்றி சதா screech-இட்டுக்கொண்டே…
அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள் குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே அறியப்பட்டாலும் மரணதண்டனை கூடாது, கூடாது, கூடவே கூடாது மனிதநேயம் மறக்கலாகாது. அதேசமயம்…
காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை குரல்கள் வாசனைகள் வாசல்கள்….! வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும் பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது. ’பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு’ என்று தன்னைக் கடைவிரிக்கும் கூறுகெட்டத்தனம் காற்றுக்குக் கைவராது. ஆறுணரும்…