மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கிற விஷயம் அது. தான் சார்ந்த அல்லது தனக்குப் பிடித்த ஒரு கட்சியை மட்டுமே எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்பது ஒரு மனநோய். அதற்காக ஒருவரைக் கொல்கிறவரைக்கும் செல்கிறவன் மனநோய் முற்றிய, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியதொரு சைக்கோ.
பெரும்பாலும் பரம்பரை தி.மு.க. ஆதரவாளர்களிடம் மட்டுமே இந்த மாதிரியானதொரு வெறித்தனத்தைப் பார்த்திருக்கிறேன். அ.தி.மு.க.காரன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்கிறவன். அவனது மனநோய் இன்னொருவிதமானது என்றாலு தி.மு.க. ஆதரவாளன் பெருங்கிறுக்கன். ஆபத்தானவன். மனிதகுல விரோதி.
தி.மு.க.வே ஒரு மனித விரோதக் கட்சிதான்.
என்னுடைய அப்பா தி.மு.க. அனுதாபி. கண்மூடித்தனமான ஆதரவாளர். அந்தக் கட்சியில் உறுப்பினராகவும் இருந்தவர் என்று நினைக்கிறேன். நான் சிறுவனாக இருக்கையில் சென்னைக் கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் நடக்கும் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார். இருந்தாலும் என்னால் தி.மு.க.வையோ அல்லது மு.க.வையோ என்னால் அங்கீகரிக்க இயலவில்லை. அதிலும் மு.க.வை என்னால் ஏற்றுக் கொள்ளவே இயன்றதில்லை.
என்னுடைய அப்பாவின் தலைமுறைக்காரர்கள் பெரும்பாலோர் இன்றுவரை தி.மு.க.வின் வெறித்தனமான அனுதாபிகளாகவே இருக்கிறார்கள் என்பதினைக் கவனிக்கிறேன். அதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல் கண்மூடித்தனமாக ஏன் இவர்கள் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிவதில்லை. இது ஒரு பெரும் உளவியல் சிக்கல் என நினைக்கிறேன்.
அதே உளவியல் சிக்கல் அவர்களது பிள்ளைகளுக்கும் தொற்றியிருக்கிறது. எந்தவிதமான ஜனநாயகப் போக்கோ அல்லது முன்னேற்றச் சிந்தனைகளோ இல்லாத, ரவுடியிசமும், வன்முறைக்கும் அஞ்சாத குண்டர்படை கொண்ட, சுய நலம் ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட குடும்பக் கட்சியான தி.மு.க.தான் தங்களைக் கரையேற்றும் என இன்றைக்கும் நினைப்பவன் குறுமதி கொண்ட பைத்தியக்காரன். ஐம்பது ஆண்டுகாலத்தில் இல்லாத முன்னேற்றம் ஒரு துண்டு சீட்டைக் கூடச் சரிவரப் படிக்க முடியாத ஸ்டாலின் போன்றவர்களால் வரும் என நினைப்பவன் பைத்தியக்காரனேயன்றி வேறேன்ன?
என்னுடைய அப்பா அப்படியென்றால் என்னுடைய மாமனார் அதனையும் விட மோசமான தி.மு.க. அனுதாபி. “மோடி தோற்றே ஆகவேண்டும்” என்று என்னுடன் வாதிட்டுக் கோபத்தில் இருக்கிறார். அதற்கு ஆதரவாக அவர் சொல்லும் காரணங்கள் எல்லாமே கேணத்தனமானவை. அவரைப் பொறுத்தவரையில் ஸ்டாலின் ஒரு “சிறந்த நிர்வாகி”. அதைக் கேட்டால் ஸ்டாலினே மயக்கமடைந்து விழுந்துவிடுவார் என்றேன். கோபத்தில் பொங்கித் தள்ளிவிட்டார். “என்னுடைய மகளை திருப்பிக் கொடு” என்று மட்டும்தான் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் அதையும் செய்திருப்பாரோ என்னவோ? 😊
மே 23-ஆம் தேதி மாற்றம் வந்தபிறகு, அதாகப்பட்டது ராகுல்காந்தியும், தி.மு.கவும் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகுதான் என்னுடன் பேசுவார் என்று நினைக்கிறேன்
- முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்
- இன்றும் தொடரும் உண்மைக்கதை!
- நானென்பதும் நீயென்பதும்….
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.
- அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]
- தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை