முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்

This entry is part 4 of 8 in the series 21 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada

++++++++++++++++++

  1. https://youtu.be/rcWKKqsCANs
  2. https://youtu.be/vzQT74nNGME
  3. https://www.bbc.co.uk/programmes/m00042l4
  4. https://www.bbc.co.uk/programmes/p0755t2s
  5. https://en.wikipedia.org/wiki/Black_hole
  6. https://youtu.be/OfMExgr_vzY
  7. https://www.bbc.com/news/science-environment-47873592

+++++++++++++

M87

Image copyright

DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY

Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black hole at its heart from false colour images such as this one. The dark centre is not a black hole but indicates that stars are densely packed and fast moving

+++++++++++++++++++

அகிலத்தின் மாயக் கருந்துளை

அசுரத் திமிங்கலம் !

உறங்கும் பூத உடும்புகள் !

ஒளி விழுங்கி ! விண்மீன் விழுங்கி !

அண்டக் கல்லறை !

ஒளிபுகா இருட்டறை !

கண்ணுக்குத் தெரியாத புள்ளிப்

பெருநிறை !

பற்றி ஈர்க்கும் விசை மூலம் 

பார்க்க முடியும் !

படைப்பின் அற்புதம் ஒளிமந்தைகள் !.

நடுவில் உள்ள கருந்துளைப்

படப் பிடிப்பு ஓர் அதிசய நிகழ்ச்சி !

அபூர்வ நிகழ்ச்சி !

ஒரு படம்  ஆயிரம் பதங்கட்குச் சமம் !

எட்டு விண்ணோக்கி 

கூட்டிணைப்பில்

எடுத்த அபூர்வப் படப் பிடிப்பு இது !

இருநூறு வானியல் உலக நிபுணர்

இருபது ஆண்டுகள் உழைத்து

இயற்கைப் படைப்பு ஒன்றைக் 

கண்ணால் காண வைத்தது

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்

ஒரு பெரும் சாதனை !

தனிப் பெரும் விஞ்ஞானச் சவால்,

மனிதரின் மகத்துவம் !

+++++++++++++++++++++

Drives

KATIE BOUMAN

Image captionKatie Bouman is the MIT student who developed the algorithm that pieced together the data from the Event Horizon Telescopes. Without her contribution the project would not have been possible.

+++++++++++++++++++++++++உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும்  கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள்  உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம்  இது.  மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக  மதிப்பிடப் படுகிறது. அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது.  6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது.  அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87]  மையத்தில் உள்ளது.

Blackness of space with black marked as center of donut of orange and red gases

The supermassive black hole at the core of supergiantelliptical galaxyMessier 87, with a mass ~7 billion times the Sun’s, as depicted in the first image released by the Event Horizon Telescope (10 April 2019).Visible are the crescent-shaped emission ring and central shadow, which are gravitationally magnified views of the black hole’s photon ring and the photon capture zone of its event horizon. The crescent shape arises from the black hole’s rotation and relativistic beaming; the shadow is about 2.6 times the diameter of the event horizon.++++++++++++++++ அந்த கருந்துளையைச் சுற்றி வட்டமாய் உள்ளப் பேரொளிமய வளையம் , பேரளவு உஷ்ணமுள்ள வாயுப் பிளாஸ்மா [தீ வளையம்]. [Plasma Ring of Fire].  அந்த டோனட் வடிவத் தீவளையம் நிகழ்வுத் தொடுவான்  [Event Horizon] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த தொடுவான் அகலம் 40 பில்லியன் கி.மீ. [24 பில்லியன் மைல்].  காலக்ஸி ஒளிமந்தையின் கருந்துளை, கண்ணுக்குப் புலப்படா விட்டாலும்,  அதைச் சுற்றியுள்ள வாயுத் தீவளை யத்தை  [நிகழ்வுத் தொடுவான்]  ரேடார் விண்ணோக்கிகள் மூலம் படமெடுக்க முடியும்.  அவ்விதம் உலகின் தூர எல்லை களில் உள்ள [ஹவாயி, மெக்ஸிகோ, அரிசோனா, ஸ்பெயின், சில்லி, தென் துருவம்] எட்டு  ரேடார் விண்ணோக்கி களின் கூட்டுப் படப் பிடிப்பே இந்த முதல் கருந்துளைப் படவெளியீடு. இது ஆங்கிலத்தில் “நிகழ்வுத் தொடுவான் விண்ணோக்கி கூட்டுப் படப்பிடிப்பு”   [ EHT – Event Horizon Telescopes Collaboration ]  என்று அழைக்கப் படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 80 ஆண்டுகட்கு முன்பே  கண்ணுக்குத் தெரியாத இந்தக் கருந்துளை இருப்பைத் தனது “ஈர்ப்பியல் நியதி” அல்லது “பொது ஒப்பியல் நியதி   [Theory of Gravity]  OR [General Relativity] மூலம் முன்னறிவிப்பு செய்துள்ளார்.  இப்போது முதல் கருந்துளைப் படப்பிடிப்பு, படக்காட்சி ஐன்ஸ்டைன் கூற்றை, மீண்டும் மெய்ப்படுத்தி உள்ளது. +++++++++++++++++++++++++

What is a black hole?

  • A black hole is a region of space from which nothing, not even light, can escape
  • Despite the name, they are not empty but instead consist of a huge amount of matter packed densely into a small area, giving it an immense gravitational pull
  • There is a region of space beyond the black hole called the event horizon. This is a “point of no return”, beyond which it is impossible to escape the gravitational effects of the black hole

+++++++++++++++++++++++

South Pole Telescope

EHT [Event Horizon Telescope]

EHT array

Image caption : The eventual EHT [Event Horizon Telescopes]  array will have 12 widely spaced participating radio facilities.

+++++++++++++++++

Black Hole Team of Scientists

எங்கள் விண்ணோக்க ஆய்வுகளில் தீவிர எக்ஸ்-ரே சுரப்பிகள் இருப்பினைக் காட்டுவது, ஒருவேளைக் கருந்துளைகளுக்கு ஊட்டம் அளித்து உருவாக்குவதாகக் கருதப்படலாம். கருந்துளைகள் விண்மீன்களிலிருந்து விடுபடக் கதிர்வீச்சு அயனிகளுக்கு உதவும் புயல்களை உருவாக்கும்.  அதன்படி பிரபஞ்சம் ஒளி ஊடுருவும் தன்மை பெற கருந்துளைகள் உதவி இருக்கலாம்.

ஒரு கருந்துளைக்குள் பிண்டம் விழும்போது, கருந்துளை சுழலத் துவங்கிறது.  விரைவான சுழற்சி ஓரளவு பின்னப் பகுதிப் பிண்டத்தை வெளியேற்றும்.  கருந்துளைகள் எழுப்பும் காந்தப் புயல்கள் புறவூதா ஒளி வெளியேற விடுவிப்பு வழியை உண்டாக்கலாம்.

ஃபிளிப் காரட் [ பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம், பௌதிக வானியல் துறை, தலைமை ஆய்வாளர்]

[youtube https://www.youtube.com/watch?v=4Arj1SBpEy0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

கருந்துளை பற்றி புதியதோர் கருத்தோட்டம்

 

2016 மே மாதத்தில் ஐயோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பௌதிகப் பேராசிரியர் ஃபிளிப் காரட் [Philip Kaaret] மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், பூமியைச் சுற்றிவரும் சந்திரா விண்ணோக்கி மூலம், விண்மீன் உருவாக்கும் அரங்கத்தில், [Tol 1247-232] ஒற்றை எக்ஸ்-ரே சுரப்பி ஒளி வீச்சும், ஒளித் தணிப்பும் மாறி, மாறி வரக் கண்டனர். குழுவினர் அது விண்மீன் வடிவாக்கம் இல்லை என்று கருதுகிறார்.  நமது சூரியன் அதற்கு ஓர் உதாரணம்.  ஒளிவீச்சு மாற்றம் ஏற்பட அது கருந்துளை போல், ஓர் சிறு அண்டமாக இருக்க வேண்டும் என்று ஃபிளிப் காரட் கூறுகிறார்.

[youtube https://www.youtube.com/watch?v=vzQT74nNGME?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

ஆனால் கருந்துளை போல் அசுர ஈர்ப்பு விசையால் அனைத்து அண்டங்களையும் இழுத்து விழுங்கும் போது, அது பிண்டத்தை வெளியாக்குமா என்னும் வினா எழுகிறது. உடன்பதில் அதற்கு, யாருக்கும் தெரியாது என்பதே. காரணம் கருந்துளை பற்றித் தனித்து அறிவது மிகக் கடினம். ஏனெனில் காலக்ஸி ஒளிமந்தையில் நடுவில் ஆழ்ந்து பதிக்கப் பட்டுள்ளது கருந்துளை. நெருங்கிவரும் ஒளி கூடத் தப்ப முடியாது.  சமீபத்தில் வானியல் நிபுணர் கூறும் விளக்கம் :  வெளித்தள்ளும் பிண்டத்தின் உந்துவிசை கருந்துளை சுழற்சி விசைக்கு ஊட்டம் அளிக்கிறது.

[youtube https://www.youtube.com/watch?v=rcWKKqsCANs?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

 

பிரபஞ்சப் பெருவெடிப்புக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் அனைத்திலும் இருட்டடிப்பு நேர்ந்தது.   அந்த தீவிரக் கொந்தளிப்பு நிகழ்ச்சி, அகிலத்தைக் குலுக்கி, கலக்கி, கனல் வாயுப் புகை மூட்டம் ஒளியை மூடிவிட்டது.  அடுத்து ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பிரபஞ்சம் விரிய ஆரம்பித்து ஒளி புகும்படி வசதியானது.  பிறகு விண்மீன்கள் நிறைந்த ஒளிமந்தை காலக்ஸிகள் தோன்றி பிரபஞ்சத்தை நிரப்பின. அதுவே நாமிருக்கும் இப்போதைய பிரபஞ்சம்.

+++++++++++++++++++++

A Black Hole

கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தது என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துகளைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)

(காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

பேராசிரியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளை கள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளை யின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

Star Blast to form a Black Hole

பிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டீஃபென் ஹாக்கிங் 

இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பௌதிக மேதையாகக் கடுமையான நோயில் காலந் தள்ளி 2016 இல் 74 வயதான ஸ்டீஃபென் ஹாக்கிங் விஞ்ஞான ஆற்றலில் கலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோ ருக்கு இணையாகக் கருதப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி ! விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற நியதி [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், [Elementary Particles], இயற்கையின் உந்துவிசை [The Force of Nature], பிரபஞ்சத்தின் கருங்துளைகள் [Black Holes], காலத்தின் ஒருதிசைப் போக்கு [The Arrow of Time], பௌதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரமாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய “மகா ஐக்கிய நியதி” [Grand Unified Theory, (GUT)] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு வந்தவரில் ஒருவர், ஸ்டீஃபென் ஹாக்கிங்!

Computer Simulated Image of A Black Hole

இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தவர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பாற்றலைக் கண்டுபிடித்த கணிதப் பௌதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726), நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்!

பிரபஞ்சத்தின் கருந்துளை என்றால் என்ன ?

1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

Stephen Hawking

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத் துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டு போய் விழுங்கிவிடும்.

Medal of Science to Hawking

கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ? நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன ! அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு ! பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ! ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள் தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

Formation of a Black Hole

அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்ச வியலைப் [Cosmology] பற்றி  அறியப் புது கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் பொது ஒப்பியல் நியதியில்  [General Theory of Relativity] ஒற்றை முறைகேடுகளை [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக  வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்ட வெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி  ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருந்துளை களின் ஓர் மகத்தான  ஒழுக்கப்பாடு குணத்தைக் [Property] கண்டு பிடித்தார்! ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது! ஒளித் துகளை அவை விழுங்கி விடும்! ஆதலால் அங்கே காலம்  முடிவடைகிறது! கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது! ஜெர்மன் விஞ்ஞானி  வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை  [Radiation] வெளி யேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

அந்த வெற்றியின் முடிவில் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியையும், கதிர்த்துகள்  நியதியையும் ஒன்றாக இணைக்க முற்பட்டு, பிரபஞ்ச இயக்கங்களை ஒருங்கே விளக்கக்  கூடிய ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றை உண்டாக்க முடியுமா என்று  முயன்றார்! மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத  சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை  ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால்  புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க  வேண்டும் என்று எடுத்துக் கூறினார்! அவற்றை ‘மினிக் கருந்துளைகள்’ [Mini Black Holes] என்றார், ஹாக்கிங்! பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல்  கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள்  யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று  ஹாக்கிங் கூறினார்! கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும்  வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச்  சிதைகின்றன என்று கண்டறிந்தார்! ஸ்டீஃபன் ஹாக்கிங் கண்ட இந்த அரிய விஞ்ஞான  முடிவு, கருந்துளைகளின் ஆயுட் கால வரலாற்றில் பூர்வீக வெப்ப யியக்கவியல் [Classical  Thermodynamics], கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mehanics] இரண்டுக்கும் தொடர்புள்ளது  என்று எடுத்துக் காட்டும் முக்கியத்துவம் பெற்றது!

மேலும் ஒரு மகத்தான ஹாக்கிங் சாதனை 1983 இல் ஸான்டா பார்பராவைச் சேர்ந்த ஜிம்  ஹார்ட்டிலுடன் [Jim Hartle of Santa Barbara] ஆராய்ந்து அறிவித்த ‘விளிம்பற்ற கூறுபாடு’ [No  Boundary Proposal]! விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are  finite]! ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது [They do not have any  boundary or edge]!

ஸ்டீஃபன் ஹாக்கிங் படைத்த நூல்கள், பெற்ற பாராட்டுகள்

1973 இல் எல்லிஸுடன் [G.R.S Ellis] எழுதிய ‘விண்வெளிக் காலத்தின் பேரளவு அமைப்பு’  [The Large Scale Structure of Space Time], 1981 இல் எழுதிய ‘பிரம்மாண்ட விண்வெளி பெரு ஈர்ப்பியல்’ [Superspace & Supergravity], 1983 இல் எழுதிய ‘மிக இளைய பிரபஞ்சம்’ [The Very  Early Universe]. ஸ்டீஃபன் எழுதி 1988 இல் வெளியிட்ட ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு ‘ [A  Brief History of Time] சிறப்பு விற்பனை நூலாக பல மில்லியன் பிரதிகள் விற்கப் பட்டன! 1993  இல் எழுதிய ‘கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்’ [Black Holes & Baby Universes]. 1992 இல்  படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘வாழ்க்கையும் பணியும்’ என்னும்  தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’  என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார்! மிக இளைய வாலிப வயதிலே ஸ்டீஃபன் F.R.S  [Fellow of Royal Society] பெற்று, 12 கெளரவப் பட்டங்களையும் இதுவரைப் பெற்றுள்ளார்.  அவர் 1989 இல் ‘மதிப்பு மிகு தீரர்’ [Champian of Honour], பெயர் எடுத்து, அமெரிக்காவின்  தேசிய விஞ்ஞானப் பேரவையில் [National Academy of Sciences] உறுப்பினர் ஆனார்!

1991 மார்ச் 5 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹாக்கிங் வீடு திரும்பும் போது, சக்கர  நாற்காலியின் முன்னும் பின்னும் சிவப்பு விளக்குகள் மின்ன, அவர் வீதியைப் பாதி  கடந்து செல்கையில், வேகமாய் எதிர்த்து வந்த கார் வாகனம் ஒன்று எதிர்ப்பட பணிப் பெண் [நர்ஸ்] ‘அங்கே பாருங்கள்’ என்று அலறினாள்! ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய  வில்லை! வாகனம் வேகமாய்ச் சக்கர  நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில்  குப்புற விழுந்தார்! அந்தக் கோர விபத்து சக்கர நாற்காலியைச் சிதைத்து, மின்கணனியை  உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது! தலையில் பல வெட்டுக்  காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார்! அவருக்குப் பதிமூன்று இடங்களில்  தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று! பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள்,  இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார்! சரியாக இரண்டு நாள்  கழித்து, ஹாக்கிங் வேலை செய்ய ஆய்வுக் கூடத்திற்குக் கிளம்பினார்!

2018 ஆம் ஆண்டு மார்சு 13 ஆம் தேதி தனது 76 ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார்.   ஹாக்கிங் கடும் நோயுடன் துன்புற்றாலும்,  சீக்கிரம் நடுத்தர வயதில் மரிப்பார் என்று எதிர்பார்த்தாலும், அவர் பல்லாண்டு காலம் வீல்சேரில் மௌனமாய் வாழ்ந்து விண்வெளித் தோற்றம், கருந்துளை, பெருவெடிப்பு விளக்க விஞ்ஞானத்தை விருத்தி செய்தார்.  காலவெளிக் கருந்துளை ஆய்வு, பிரபஞ்சத் தோற்ற விளக்கம் போன்ற புதிய விஞ்ஞான  ஆக்கத்திற்கு இதுவரை,  அவருக்கு  நோபெல் பரிசு கிடைக்காமல் போனது விஞ்ஞான உலகின் புறக்கணிப்பைக் காட்டுகிறது !

ஆதாரங்கள்:

1. A Brief History of Time, By: Gene Stone & Stephen Hawking [1992]
2. Scientific Genius, By: Jim Glenn [1996]
3. Stephen Hawking ‘s Universe, By: John Boslough [1889]
4. A Brief History of Time, By: Stephen Hawking [1988]
5.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html(பிரபஞ்ச விஞ்ஞான  மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)
6. https://jayabarathan.wordpress.com/2007/12/07/black-holes/ [பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள்  ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)]

7.  http://www.biography.com/people/stephen-hawking-9331710
8. http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking  (February  12, 2015)

9. http://www.cbc.ca/news/world/stephen-hawking-dead-obituary-1.4575341 [March 13, 2018]

10.  http://www.spacedaily.com/reports/Stephen_Hawking_a_brief_history_of_genius_999.html  [March 14, 2018]

11. http://www.bbc.com/news/uk-43396008  [March 14, 2018]

12. https://www.livescience.com/65185-what-is-black-hole-event-horizon.html?utm_source=llm-newsletter&utm_medium=email&utm_campaign=20190410-llm [April 9, 2019]

13. https://www.bbc.com/news/science-environment-47873592 [ April 10, 2019]

14. https://www.vox.com/science-and-health/2019/4/11/18306110/first-image-black-hole-eht-event-horizon-singularity  [April 11, 2019]

15. https://www.sciencemag.org/news/2019/04/black-hole?utm_campaign=news_weekly_2019-04-12&et_rid=263416574&et_cid=2765249 [April 11, 2019]

16 https://en.wikipedia.org/wiki/Black_hole [ April 13, 2019 ]

17. https://science.nasa.gov/astrophysics/focus-areas/black-holes

18. https://spaceplace.nasa.gov/black-holes/en/

19. https://www.bbc.com/news/science-environment-47873592

***********************
S. Jayabarathan (jayabarathans@gmail.com)  April 13, 2019 [R-3]

***********************

Series Navigationஉயிர்த்தெழ வில்லை !Insider trading – ப சிதம்பரம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *