மஞ்சுளா
முற்றிலும் இழந்து விட்ட நேரங்களால் நிரம்பியுள்ளது இவ்வுலகம் மூடப்பட்ட இவ்வுலகத்திலிருந்தே திறக்கின்றன நமக்கான கதவுகள் திறக்கப்படும் ஒலியை அறியும் செவிகள் நுட்பமானவை நுட்பத்திலும் வெகு நுட்பமான திறனுடன் அறியப்பட்ட வெவ்வேறு வடிவங்களில் நிரப்பப்பட்ட கலன்களில் ஊறிக்கொண்டிருக்கின்றன நம் சுவைகள் சுவையூரிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்க்கை நவீன உத்திகள் பொதிந்த விளம்பரங்களால் வளர்ந்து கொண்டே போகின்றன சிதைவுகளின் கோர உருவத்தை மறைத்து விளம்பரங்களையே நுகரும் மக்களால் வாழும் இவ்வுலகத்தில் உற்பத்தி செய்யப்படலாம் எதுவும் முற்றிலும் இழந்து விட்ட நமக்கான நேரங்களைத் தவிர.
மஞ்சுளா மதுரை
- குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்
- ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]
- கசடு
- பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.
- உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி
- என்னவளே
- நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை
- திருப்பூர் சக்தி விருதுகள்
- நேர்மைத் திறமின்றி வஞ்சனை சொல்வாரடீ…….