பொடியா

author
1 minute, 28 seconds Read
This entry is part 2 of 6 in the series 9 ஜூன் 2019


கௌசல்யா ரங்கநாதன்
         

-1-

வழக்கம் போல,  அன்றும், மதிய சாப்பாட்டுக்கு 1 மணியளவில் கிளம்பிய  நான், என் உதவியாளரை அழைத்து என் பார்மசியை  பார்த்துக்கொள்  வழக்கம்போல என்று சொல்லிக்கொண்டிருக்கையில், ” புஸ், புஸ்”
என்று பெருமூச்சு விட்டவாறு அந்த கொளுத்தும் கோடை வெயிலில், நடைபின்ன, ஒரு முதியவர் வியர்வை ஒழுக, ஒழுக,  என் கடைக்குள் அடியெடுத்து வைத்த போது  “தள்ளுபா, தள்ளு அந்தாண்ட” என்று
 ஒரு ஆட்டோ ஓட்டுனர் வேகமாய் கடைக்குள் நுழைந்து “இந்தாபா எனக்கு காய்ச்சல், உடம்பு பூரா நோவு பின்னி எடுக்குது , மாத்திரை எதனாச்சும் கொடுப்பா” என்றான் என்னிடம்.
“டாக்டர் பி¡¢ஸ்க்ருப்ஷன் இருக்கா”? என்ற என்னிடம் “இன்னா தொர, இதுக்கெல்லாம் போய் டாக்டர் சீட்டா? நீயே எதனாச்சும் மருந்து கொடப்பா” என்றான்.
“நான் டாக்டர் பி¡¢ஸ்க்ருப்ஷன் இல்லாம  மருந்து, மாத்திரை எதுவும், யாருக்கும் கொடுக்கிறதில்லைப்பா”.
“அப்படியா!! அப்ப ஊர்ல வேற மருந்து கடைங்களே  இல்லைனு நினைச்சிகினியா! ரொம்பத்தான் தெனாவட்டா பேசறே!” என்றவன் விருட்டென திரும்பியபோது, உள்ளே மெதுவாய் வந்துகொண்டிருந்த அந்த முதியவர் மீது மோதிவிட,
இருந்தவன் “இன்னா பெர்சு, ஏன் நட்ட நடுவால வந்து நின்னுகினு உசிரை வாங்கறே ? ஐயே!தள்ளுபா ” என்று தன் கோபத்தை அவர் மீது பாய்ச்சினான், அவரும் பதிலேதும்  சொல்லாமல் அப்படியே
திகைத்து நிற்க “யோவ் உன் காதுல விழலையா நான் கத்திகினு இருக்கிறது” என்று சொல்லிவிட்டு விருட்டென தன் ஆட்டோவை கிளப்பிக்கொண்டு ” சட்டம், சராப்  எல்லாம் பேசறானுவ.பேமானி
பசங்க” என்று என் காதுபடவே திட்டியவாறு  போனான்.
என் பார்மசிக்கு வருபவர்களிடமெல்லாம் இப்படி பேச்சு கேட்பது அன்றாட நிகழ்வுதான் எனக்கு.  செல்ஃப் மெடிகேஷனை நான் ஆதா¢ப்பதில்லை  ஒருபோதும்..இப்படி பலவாறாய் நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில்தான்,
உள்ளே வந்த அந்த முதியவர் நிற்க கூட முடியாமல் பெருமூச்சு விட்டவாறு கையில் ஒரு பிருஸ்கிருப்ஷனுடன் நிற்க”வாங்க ஐயா. வாங்க” என்று வரவேற்று அவர் கையில் இருந்த மருந்து சீட்டை வாங்கிப் பார்த்தபோதுதான்,  அது  என்னிடம் ஸ்டாக் இல்லை.  அது ஒரு லைஃப் சேவிங்  டிரக் என்பதால், “இப்பவே வேணுமா ஐயா, இல்லை சாயங்காலமா வாங்கி தரவா” என்ற என்னிடம், “ரொம்ப அர்ஜன்ட்பா..என்ன செய்யறது..விதி..எங்கே போவேன் ஃபார்மசி,ஃபார்மசியா இதை வாங்க”என்றார் அவர்..
“இருங்க ஐயா, பக்கத்து, பக்கத்து பார்மசிகளில்  கிடைக்குமானு போன் போட்டு பார்க்கிறேன்.  கிடைக்கும்னா, நானே உடனே போய் வாங்கிகிட்டு  வந்து தரேன் “என்றேன்..
“நீ எப்படிப்பா கடை பிஸினசை விட்டுட்டு…வேணாமே..  பார்த்துக்கலாமே அப்புறமா”என்றவரைப் பார்த்து,
“பரவாயில்லை ஐயா.  இது என்னதான் பிஸினஸ்னாலும் மனித குலத்துக்கு  செய்யற சேவை இல்லையா?.  மத்தவங்க போல நானும் ஸ்டாக் இல்லை சார்னு சொல்லிடலாம்தான் சுலபமா..வர கஸ்டமர்கள் ரொம்ப பிரஸ்
பண்ணினா டாக்டர் கிட்ட கேட்டுட்டு வாங்க, ஆல்டர்னேட் மெடிசின்  பெயரைனும் சொல்லி அனுப்பிடலாம். ஆனா அதுக்குள்ள அவங்களுக்கு ஏதனாச்சும் ஆயிருச்சுனு தொ¢ஞ்சா,  மனசு கிடந்து அடிச்சுக்கும்.  இருங்க..பிளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..தாக சாந்தி பண்ணுங்க”.
இப்ப உடனடியா ஒண்ணோ, இரண்டோ வேற கடைகளில் கிடைக்குமானு பார்க்கிறேன்.  இப்பவே இண்டென்ட் போட்டுடறேன்” என்று என் சக பார்மசி நண்பர்களுக்கு போன் போட்டு
பார்த்ததில் தேனாம்பேட்டை பார்மசி ஒன்றில் 3 மாத்திரைகள் மட்டுமே இருப்பதாக தொ¢ய வர “உடனே வரேன். அதை பத்திரப்படுத்தி வைங்க” என்று சொல்லிவிட்டு என் டூ வீலரை  எடுத்துக்
கொண்டு அந்த பசி வேளையிலும் கடையை பையனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பியபோது, வீட்டிலிருந்து என் சகதர்மிணி “என்னங்க மணி இரண்டாச்சு.  இன்னம் சாப்பாட்டுக்கு
 கிளம்பலையா.  நான் உங்களுக்காக காத்துகிட்டிருக்கேன் இன்னம் சாப்பிடாம.  என்னங்க இப்படி பண்ணறீங்க? பிசினஸ் பண்ண வேண்டியதுதான்.  அதுக்காக, சுவர் இருந்தாதானே
சித்திரம் எழுத முடியும்னு உங்களுக்கு தொ¢யாதா” என்ற போது  “பிளீஸ் டிரை டு அன்டர்ஸ்டான்ட் மீ.  ஒரு அவசர வேலை.  தேனாம்பேட்டை வரை போகணும் ஒரு முதியவருக்கு ஒரு அவசர  மருந்து தேவைப்படுது..நம்ம கடையிலும், பக்கத்து,பக்கத்து கடைகளிலும்  ஸ்டாக் இல்லை..  எப்படியாச்சும் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்தப்புறம்தான் சாப்பாடு எல்லாம்” என்று பேசியதை முதியவர் கேட்டவாறு கண்களில் கண்ணீர் வழிய என் கைகளை பற்றிக்கொண்டார்.”இந்தக் காலத்தில் கூட இப்படி ஒருத்தனா!” என்றார்..தொடர்ந்து அவர்,
என்னால் எத்தனை பேர்களுக்கு சிரமம்.வயசானப்புறம் இப்படி அவதிப்படறதை , வசை கேட்பதை, என்னால் பொறுத்துக்க முடியலைப்பா.
ஏன்தான் அந்த ஆண்டவன் என்னை இன்னமும் வச்சு ஆட்டிபடைக்கிறானோ..  ஒரு பக்கம் ஆட்டோக்காரன், கடைக்காரர்கள் எல்லாம் “பெர்சு  தள்ளு ஐயா அந்தாண்ட.ஒரு ஒதுக்குப்புறமா போய் நிற்கிறதுதானே, ஏன்
தள்ளாடிகிட்டு வந்து எங்க உசிரை வாங்கிறே?உன்னோட படா பேஜாராப் போச்சு.  காதுகளும் கேட்கலை.  கண்களும் நல்லா தெர்லைன்றப்ப,வூட்ல மருமக, பிள்ளைங்க போட்டதை தின்னுட்டு, அவங்ககிட்ட சண்டை வலிக்காம, அக்கடானு வுளுந்து
 கிடக்காம டிராபிக்ல ஏன்  வெளில வரணும்? கார், வண்டில அடி கிடி பட்டுச்சுனா இன்னா பண்ணுவேனு.”  இவங்கள்ளாம் இப்படியே என்றும் பதினாறா இளைமை மாறாம மார்கண்டேயனா
ட்டம் இருக்கப்போறதா ஒரு  நினைப்பு .இதெல்லாம் முதுமையை கிண்டல் பண்ணறாப்பல இல்லை.  இதில சீனியர் சிடிசன் தினம் எல்லாம் கொண்டாட வேற செய்ய்யறாங்க.  இப்படி போற
இடத்தில் எல்லாம் மனம் நொந்து வேதனைப்பட்டுகிட்டு இருக்கிறப்ப ஆறுதலாய் உன்னைப்போல சிலரைப்பார்க்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.  ஆண்டவன் உன்னையும், உன் குடும்பத்தையும், தீர்க்காயுசா, நோய், நொடி இல்லாம வைக்கட்டும்னு பிரார்த்தனை பண்றேன்..”

“கண் கலங்காதீங்க ஐயா.  நீங்க இப்படி எதை எதையோ நினைச்சு வேதனைப்பட்டுகிட்டு இருந்தா, உங்க உடல் நிலைதான்  இன்னம் மோசமா பாதிப்புக்குள்ளாகும்.இருங்க, இதோ வந்துடறேன் மாத்திரை வாங்கிக்கிட்டு..”

“எனக்காக பாவம் நீ ஏம்பா உன் மதிய உணவை தியாகம் பண்ணனும்?ஊண் உடம்பே ஆலயம்னு ஒரு செய்யுள் உண்டே.  ” என்றவரை பலவாறாய் சமாதானப்படுத்தி கடையிலேயே அவரை அமரவைத்ததுடன், மின்விசிறியையும் சுழலவிட்டுவிட்டு என் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஜெட் ஸ்பீடில் தேனாம்பேட்டைக்கு போய் அந்த குறிப்பிட்ட மாத்திரைகளை(அதுவும் அதன் டோஸேஜ், காலாவதியாகும் தேதி எல்லாம் பார்த்து) பிறகு வாங்கிக்கொண்டு வந்து அவருக்கு கொடுத்த பிறகுதான் மனம் நிம்மதி அடைந்தது எனக்கு..
 என் நினைவுகள்  பின்னோக்கி சென்றது 1950 களுக்கு.
-2-
இந்த முதியவரை பார்க்கும்போது ஏனோ  எனக்கு என் அப்பா நினைவு வந்தது.கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதை தடை செய்ய முடியவில்லை என்ன முயன்றும்..  “அப்பா தி கிரேட்” என்றே பாராட்ட தோன்றியது எனக்கு..  அப்போது,
நாங்கள் அனைவரும்கூட்டு குடும்பமாய்த்தான் இருந்தோம்.  அப்பாதான் மூத்தவர்.  அவர் சொல்தான் வேதவாக்கு. அவர் முன் நின்று ஏதாவது கேட்க நாங்கள் அனைவருமே அச்சப்படுவோம் அற்றை நாட்களில்..அது பயமா,மா¢யாதையா என்று இன்னமும் தொ¢யவில்லை..  அதனால் அவராய் கூப்பிட்டால்கூட அவர் முதுகுப்பக்கம் போய் நின்று கொண்டு ஹீனமான குரலில் எதுவொன்றையும் கேட்பதோ, பதில் சொல்வதோ  எங்கள் வழக்கம்..
எங்களுக்கு மூதாதையர்  விட்டுப்போன சொத்துக்கள்  ஏராளமாய் உண்டு, பல தலைமுறைகளுக்கு  உட்கார்ந்து சாப்பிடுமளவுக்கு.    இருப்பினும் அதிலிருந்து அப்பா ஒரு பைசா கூட தொட
மாட்டார்.  ஒரு பண்ணை முதலாளியிடம் வேலை பார்த்து அந்த சொற்ப வருமானத்தில் செலவுகளையும் பார்த்துக்கொண்டு  மிச்சமும் பிடித்து வந்தார்.   அதற்காக அவர் எங்களுக்கு எந்த குறையும்
வைக்கவில்லை. பலர் பலவிதமாய் அப்பாவைபற்றி,  அதவாது கஞ்ச பிசினா¡¢, எச்ச கையால் காக்கை ஓட்ட மாட்டான் என்றெல்லாம் சொன்னாலும் எதையும் பொருட்படுத்தமாட்டார்.  
“நான் என்ன ஊரை ஏமாற்றினேனா, திருடினேனா, பொய் சொல்லி சம்பாதிச்சேனா?  என் முன்னோர் கஷ்டப்பட்டு தேடி வச்ச சொத்து. அதுக்கு நான் கார்டியன் மட்டுமே.  அதை மேலும்
என் உழைப்பு மூலம் வர வருமானத்தையும் சேர்த்து பெருக்கி அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போகணுமேயொழிய  கண்டபடி, சகட்டுமேனிக்கு நான் செலவழிக்கக்கூடாது.  இது என் கோட்பாடு, அதாவது சித்தாந்தம்” என்பார் தன்னைப் பற்றி குறை சொல்பவர்களிடம்..
  பின்னாட்களில் சென்னை வந்த நான் ஒரு இலக்கிய விழாவில் மறைந்த திரை பிரபலம் ஒருவர் இதே கருத்தை வலியுறுத்தி பேசியபோதுதான்  எனக்கு ” great men think alike” என்ற வாசகம் நினைவுக்கு வந்தது..
-3-
அப்படிப்பட்ட அப்பாவுக்கு ஒரு நாள் திடீர் என்று நெஞ்சு வலி வந்து மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டபோது, ஒரு உயிர் காக்கும் மருந்து எங்குமே கிடைக்காமல் அவர் மரணத்தை தழுவிட
நேர்ந்தது. அவர் தன் மரணப்படுக்கையில் மனம் நொந்து சொன்னார் என்னிடம்  “நீ பார்மஸிஸ்ட் கோர்ஸ் படிச்சு பட்டி தொட்டி எங்கும் 24 மணி நேர பார்மசி தொடங்கி மக்களுக்கு சேவை செய்”
என்று.  உன் பார்மசில ஒரு முக்கியமான உயிர் காக்கும் மருந்து ஒருத்தர் வந்து கேட்கிறப்ப ஸ்டாக் இல்லைனா கூட அவரை அலைய விடாம அது எங்கே கிடைக்கும்னு விசா¡¢ச்சு நீயே நேர்ல
போய் வாங்கி வந்து அவங்க வீட்டில இல்லைனா  அட்மிட்டாயிருக்கிற  ஆஸ்பத்தி¡¢ல கொண்டுபோய் கொடு.  இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல.  மனித குல சேவை.ஒரு  டாக்டர் கிட்ட போற
நோயாளிக்கு அவர் பிருஸ்கிரைப்பண்ற மெடிசின்ஸ்  எல்லா பார்மசிகளிலும் தங்கு தடை இல்லாமல் கிடைக்கணும் ” என்றெல்லாம்  சொன்னதை நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன். ஆமாம்.  
என்னிடம் வரும் ஒருவர் என் பார்மசியில் மருந்து இல்லை என்று திரும்பி போகக்கூடாது. வேறு, வேறு பார்மசிகளில் போன் போட்டாவது வாங்கி கொடுப்பதை கடமையாய், சேவையாய்த்தான் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறேன்.  
அதனால் தான் இந்த முதியவருக்கு கொளுத்தும் வெயிலிலும் என் மதிய உணவு இடைவேளையாய் இருந்தாலும், ஒரு உயிரை காப்பாத்தியேயாகணும்ன்ற எண்ணம் தலைதூக்க, மருந்து வாங்கப் போகிறேன் என் சக பார்மசியாளா¢டம் .இது என் இயல்பு..  அது மட்டுமல்ல, பணம்மட்டுமே
சம்பா¡¢க்கணும்னா, எத்தனையோ தொழில்கள் வாயிற்கதவை திறந்து வைத்து காத்திருக்கின்றன.  எனக்கும் சம்பாதிக்கத்தொ¢யும் கோடிகளில்.  ஆனால் என் லட்சியம் பணம்
பண்ணுவது மட்டுமே அல்ல.  “பாடுபட்டு தேடி, பணத்தை புதைத்து வைத்த கேடு கெட்ட மானுடரே கேளுங்கள். கூடு விட்டு ஆவிதான் போன பின்பே…….” என்ற பட்டிணத்தார் பாடல் வா¢கள்
எனக்கு பிடித்தமானவை.  முன்பொரு முறை ஒரு அரசியல் பிரபலம் ஒரு விழாவில் பேசியது நினைவு கூரத்தக்கது இங்கே என்று நினைக்கிறேன்.  அதாவது அவர் சொன்னார் “நாட்டின் முதல்குடி மகனுக்கு ஒரு நோய் வந்தால்,எப்படி உயர்தர சிகிச்சை அளிக்கப்படுமோ, அப்படி நாட்டின் கடைக்குடி மகனுக்கும் கிடைக்கச்செய்வோம்”  என்று.  அப்படி நிசமாகவே நடந்தால்!ஊம்..
 அது பாராட்டப்படக்கூடிய செயல்தான்.  அதனால் தானோ என்னவோ அரசும் இன்று ஏராளமான மருத்துவ காப்பீட்டு திட்டங்களையும்
நடைமுறை படுத்துகிறார்களோ
என்னவோ, ஏழை, எளியவர்கள் பயனடைய என்றே தோன்றியது.
– 4-
இப்படி பலவித எண்ண ஒட்டங்களுடன் அவருக்கு அரை மணி தேசாலத்தில் தேனாம்பேட்டை போய் மருந்து வாங்கி  கொடுத்து ஒரு டோசை அங்கேயே சாப்பிடப் பணித்து காபியும், ஸ்னாக்சும்,
வாங்கி கொடுத்து, ஆசுவாசப்படுத்தி ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டுக்கு அனுப்பிய பிறகே நான் வீடு சென்றேன் மதிய உணவுக்கு. அது மட்டுமல்ல..முதியவரை பார்த்து “உங்களுக்கு மருந்து எப்ப தேவைப்பட்டாலும்,,
தயங்காம எனக்கு ஒரு கால் கொடுங்கய்யா.  நான் வீட்டில் கொண்டு வந்தே கொடுக்க  ஏற்பாடும் பண்றேன்.  சிரமபட்டுக்கிட்டு நீங்க இங்கே வர வேணாம்.  பணம் இல்லைனா கூட மெதுவா வாங்கிக்கிறேன்”என்றெல்லாம்
 இன்முகம் காட்டியதால், அவர் நாளடைவில் என் உற்ற நண்பரானார்.அவரை என் தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்தேன். நானும் அவரும், பல விஷயங்களை,அதாவது, நாட்டு நடப்புக்களை, பொ¢யதிரை,சின்னத்திரை, இன்றைய வேலையில்லா திண்டாட்டம், etc..etc.. என்று எல்லாவற்றையுமே பகிர்ந்து
கொள்வோம்.  அது என்னவோ தொ¢யவில்லை அவருக்கு என் மீது அப்படியொரு பாசம்.குறிப்பாய் முதிய பருவத்தில்தான் அனைவருமே,
பாசத்துக்கு ஏங்குவார்கள், என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்..
-5-
அவர் மைய அரசு அலுவலகம் ஒன்றில் கெஜட் பதிவு பெற்ற ஆபீசர் அந்தஸ்தில் இருந்ததாகவும் தன் கீழ் 30 பேர்களை வைத்து வேலை வாங்கினார் என்றும் தொ¢ய வந்தது.  வேலையில் கெடுபிடி மற்றும்,
கண்டிப்பு காட்டுவாராம்.  நேரம் தவறாமை மிகவும் பிடிக்குமாம்.  சின்ஸியராகவும், பொய் சொல்லாதிருப்பதும் கூட. அவர் சொல்வதை வாதிடாமல் மறு பேச்சு பேசாமல் கேட்க வேண்டும் தன் கீழ் உள்ள ஊழியர்கள் என்பதில்
உறுதியாய் இருப்பாராம், அது தவறு என்று தொ¢ந்தாலும் கூட.  அதனால் அவா¢டம் பணியாற்றுபவர்கள் அனைவருமே எஸ் சார், எஸ் சார்  என்றே சொல்வார்களாம் அப்படி இருப்பது அவருக்கு
பிடிக்கும் என்பதால். யாராவது எந்த ஒரு சந்தர்பத்திலாவது எதிர்த்து பேசினால் முகம் சிவக்க , do what I say . .. understand” என்பாராம். அதற்கு மேலும் ஒருவர் தொடர்ந்து  ஆர்கியு பண்ணினால் “இங்கே
நீ ஆபீசரா? இல்லை நான் ஆபீசரா? என்பாராம். அவா¢டம் பழகியதிலிருந்து  அவர் ஓரளவு ஆணவம், அதாவது தலை கனம் பிடித்தவராய் இருந்திருக்கிறார் தன் பணிக் காலத்தில் என்றே தோன்றியது.பணி ஓய்வுக்கு பிறகும் அப்படியே தன் வீட்டிலும் நடந்து கொள்ள முடியுமா என்ன? பாவம் முதியவர்.  அவா¢டம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.பொதுவாகவே
ஒரு  மனிதன் தன் பணி ஓய்வுக்குப் பிறகு  deject  மூடில் இருப்பான்.  தான் பிறரால் புறக்கணிக்கப்படுகிறோம்  என்ற மன நிலைக்கு  தள்ளப்படுவதும் இன்றைய அவசர உலகில் சகஜம்.  அதுவும் ஒரு செல்வாக்கான பதவியில்
இருந்துவிட்டு இப்போது புறக்கணிக்கப்படுகிறோம் என்றால்?  அட வெளியில் தான் இப்படி புறக்கணிப்பு என்றால் வீட்டிலும் யாரும் மதிப்பதில்லையாம், ஒரு வார்த்தை கூட நின்று, நிதானித்து, அன்பாய்
பேச…ஊஹூம்.  “பூமியில் மானுட ஜன்மம் எடுத்து விலங்குகள் போலே வாழ்வது  முறையா? என்ற அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாடல்  வா¢கள் தன் நினைவுக்கு அவ்வப்போது வருகிறது என்பார்.   சில சமயங்களில் அவர்,
வெளி இடங்களில் அவமானபடுத்தப்படும்போதோ, புறக்கணிக்கபடும்போதோ பொறுக்க முடியாமல் வெடித்துவிடும்போது கூட எள்ளி நகையாடப்படுவதுண்டாம் அவரை.  “பார்ரா, பொர்சுக்கு எம்மாம் கோபம் வருதுனு.
நைனா கோபப்படாதே.  பிரஷர் எகிறிடப்போகுது.  பத்திரமா வூடு போய்ச் சேரு” என்பார்களாம், அவர் கோபத்தை மேலும் அதிகா¢க்கும் வகையில்.  உடலில் ஒரு நோய் என்றால் மிக சிறந்த மருத்துவ சிகிச்சை
பெற அரசு அனுமதித்திருக்கிறது.  ஆனால் மனத்தளவில்  அதாவதது  mental depression  என்றால்?  பொ¢யவர்களுக்கு முதுமை என்பது இரண்டாம்  குழந்தைப்பருவமாமே. ”  எனக்கென்ன
குறைச்சல் நான் ஒரு ராஜா.  வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை”  என்று பாட இது சினிமா இல்லை.   இன்று ஏளனப்படுத்தப்படும்  எத்தனை,எத்தனை,
முதியவர்கள்தானே தங்கள் இளைமை பருவத்தில் சாதனை செய்தவர்கள்..பல நிர்மாண திட்டங்கள், சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தவர்கள்.  
சுதந்திர போராட்ட கால கட்டத்தில் பங்கேற்று சிறை வாசம் சென்றவர்கள் .! தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் தானே!.  அவர்கள் போட்ட சாலைகளில் தானே இன்றளவும் நாம்
பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பது மிகைப்படுத்தப்பட்ட சொல் அல்ல. இவர்களை பொக்கிஷமாய், போற்றி பாதுகாத்திட வேண்டாமோ நாம்? “முதல்வன்” திரைப்படத்தில், ஒரு நாள்
முதல்வராய் பதவியேற்ற திரு. அர்ஜுன் கதாபாத்திரம் வாயிலாய் என்ன அருமையான கருத்துகளை பட இயக்குனரும், வசன கர்த்தாவும், வைத்திருப்பார்கள்.  அதாவது முதியோர்களின் அனுபவ
அறிவை, ஆலோசனைகளை கேட்டு அவற்றை நடைமுறை படுத்த (implementation)இளைஞர்  சக்தியை பயன்படுத்திக்கொள்ள வேன்டும்” என்று.
-6-
இதனால்தானோ என்னவோ, அந்த முதியவர் பொறுத்து பார்த்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு தனி குடித்தனமே போய் விட்டாராம்.  அப்போதும்கூட சிலர் ” பார்ரா, பொ¢சுக்கு இரண்டாம் ஹனிமூன் கேட்கிறாப்பல”
 என்கிறார்களாம்.  தன் மனைவியுடன் தனி குடித்தனம் போகும் முடிவை பிள்ளைகளிடம் சொன்ன போது கூட அவர்களிடமிருந்து நோ ¡¢யாக்க்ஷனாம். ” உங்க விருப்பப்படி செய்யுங்க” என்றார்களாம்.
பிறகும் குடித்தனம் போன இடத்துக்கு வந்து யாருமே பார்க்கவில்லையாம்.  “போடா ஜாண்டான்.  யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க” என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டாராம் அவர்.
என்னிடம் சமயம் வாய்க்கும் போதெல்லாம் “நம் கலாசாரம் என்பது எவ்வளவு தொன்மையானது, புனிதமானது…வயதானவர்களை போற்றி பொக்கிஷமாய் அவர்களை காப்பாற்றி அவர்தம் சொல் கேட்டு
நடந்தால் வாழ்க்கையில் துன்பமே வாராது ” என்பார்.  நாங்க அப்படித்தான் கூட்டு குடும்பமாய் இருந்தோம் பொ¢யவங்களுக்கு மா¢யாதை கொடுத்து.  பட், டு டே…  ஊம்” என்றவரை வெகுவாய்
சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பேன், “நான்,  இவங்க கிட்ட பணம், காசு, மற்றும் எதையுமே  எதிர்பார்க்கலைப்பா.  எனக்கு கணிசமான பென்ஷன்  வருது.  வைத்திய வசதியும் இருக்கு.
இவங்க கிட்ட நான் எதிர்பார்க்கிறது கனிவாய் நாலு வார்த்தைகள், அதான் அன்பு, பாசம் மட்டுமே” என்று சில முறைகள் சொல்லியிருக்கிறார்.  
ட்ரூ, ஆனாலும் இன்றைய உலகம் அவசரமானது.  பணம், பணம், பணம் மட்டுமே பிரதானமாகி விட்டிருக்கிறது.  இவ்வளவு ஏன்? இவங்களுக்கு இவங்க பெற்றெடுத்த பிள்ளைகளையே
கவனிக்க நேரமில்லை.  அதான் இன்றைய தலைமுறை. ஊம். “இதுவும் கடந்து போம்” என்று இருக்கத்தான் வேண்டும்” என்றவர் சொன்னார் “ஐஆம்  ஹாப்பி நௌ எஸ்.  தனியே வீடு
பார்த்துகிட்டு வந்தப்புறம்தான் நாங்களே கொஞ்சம் நிம்மதியாய் இருக்கோம்.”என்றார்..  
இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் நான் ஒரு கலியாணத்தில் கலந்து கொள்ள வேண்டி தஞ்சாவூர் போக வேண்டியிருந்ததால் ஒரு வாரம் போல், பி.எஸ்சி படிக்கும் என் மகனுக்கும் அது சம்மர் வெகேஷன் டைம்
என்பதால் அவனை கடையைப்பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் போயிருந்தோம்.  கலியாணம் முடிந்து  திரும்பிய அன்றே பொ¢யவர் என் வீடு தேடி வந்தார்.  
-7-
“வாங்கய்யா வாங்க..நல்லா இருக்கீங்களா ஐயா!” என்று வரவேற்ற போதும், அவர் ஏனோ சுரத்தில்லாமல்  நின்று கொண்டே இருந்தார் எங்கோ
வெறிக்கப் பார்த்தவாறு,  in a deject mood..
“ஐயா, தாக சாந்தி பண்ணுங்க” என்ற போது “நான் ஒண்ணும் இங்கே உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை.  நியாயம் கேட்கத்தான் வந்தேன்” என்றவர் சற்று நிறுத்தி “உன் கடைப்பையன் …அதுவும் ஒரு
பொடியன் என்னை என்னமாய் வாய்துடுக்காய் பேசிட்டான் அன்னைக்கு. அவன் மட்டுமா?கடைக்கு வந்தவங்களும் என்னை கேவலமாய்  
பேசினப்ப, இவன் என்ன பண்ணியிருக்கணும்?”உங்க வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு போங்க..அவர்கிட்ட உங்களுக்கு என்ன பேச்சுனு”
கேட்டிருக்கணும்ல இவன்.கேட்கலையே இவன். என் வயசென்ன? படிப்பென்ன?வகித்த பதவிகள் என்ன? இது தொ¢யாம   சே” என்றார்.

“மன்னிச்சுருங்க ஐயா.  அவன் அப்படி பேசியிருந்தா அது  தப்புதான். .”

“பேசியிருந்தான்னா, என்ன அர்த்தம்?அவன்தான் பேசினான்னு சொல்றேன்ல.  அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையில்லை, அப்படித்தானே.”

“ஐயா, தயவு பண்ணி மன்னிச்சுருங்க.  அவன் சின்னப்பையன்.  விட கட்டத்தொ¢யாது.மனசு நோகக்கூடாது நீங்க.  இப்ப அவனை உங்க எதி¡¢லேயே கூப்பிட்டு மன்னிப்பு கேட்கச்சொல்றேன்.,”என்றபோது,  
“அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்வார் என்று எதிர்பார்த்ததற்கு  நேர் எதிராய் மௌனம் சாதித்தார். எப்படி கல்லூ¡¢யில் படிக்கும் இந்தக்கால இளைஞனை போய் “அவராண்ட மன்னிப்பு
கேள்” என்று சொல்வது,அதுவும், அவன் தரப்பு  வாதம் என்னவென கேட்காமல். என் மகன் என்பதற்காக சொல்லவில்லை.  அவன் இந்தக்கால பிள்ளையே இல்லை.   he is a gem. நன்முத்து.  இன்று வரையில்,
என்னிடம் எதுவொன்றும் வேண்டும் என்று கேட்டதில்லை. அகவை முதிந்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே மதிப்பும், மா¢யாதையும் கொடுப்பவன்.  பொதுவாக அவன் பேசுவதே வெளியில் கேட்காது. ரொம்ப பயந்த
 சுபாவி.  நாலு வார்த்தை நானோ, என் மனைவியோ, உறவினர்களோ, நண்பர்களோ, ஆசி¡¢யர்களோ வேறு யாராவது பேசினாலும் பொறுமையாய் காது கொடுத்து கேட்டுக்கொள்வதோடு, அப்போதும், பதில் தேவைப்பட்டால் மட்டுமே,
ஒன்றிரண்டு வார்த்தைகளில் அவன் பதில் சொல்வான்,அதுவும் ஹீனமான குரலில்.  
“ஈங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற படப்பாடல் வா¢கள் அவனுக்கு சாலப்பொருந்தும்.  ஆனால் பொ¢யவர் விடாப்பிடியாய் அவன் தன்னிடம் மன்னிப்பு கேட்டேயாக
வேண்டும்  என்றார். “ஐயா அவன் அப்படி என்னதான் பேசினான்னு  சொன்னா, அவங்கிட்ட பேசி மன்னிப்பு கேட்க சொல்ல முடியும்” என்றேன்.
-8-
“என்ன பேசினானா? அன்னைக்கு நான் மருந்து வாங்க வழக்கம் போல உன் கடைக்கு வந்தப்ப மொட்டையாய் “மருந்து ஸ்டாக் இல்லை ஐயானான்.  ஸ்டாக் இல்லைனா என்ன அர்த்தம்னேன்.?
“இருப்பு இல்லை.  அதைத்தான் ஸ்டாக் இல்லைனு சொன்னேன் ஐயானான்.  என்னை எகத்தாளம் பண்றாப்பல இருந்தது.  அப்படியும் பொறுமையாய்  “எப்ப கிடைக்கும்னேன்.  அவன் இன்டென்ட்
போட்டிருக்கேன்.  ஸ்டாக்கிஸ்டுகிட்ட இருந்தா அனுப்பிடுவாங்கன்னான்.  எனக்கு அவசரம்பா, எங்கேயாவதுபோய் வாங்கி கொடேன்னேன்.  எனக்கு யாரையும் தொ¢யாதே ஐயா.  ஒரு குறிப்பிட்ட
மருந்து ஸ்டாக் இல்லைனா இண்டென்ட்தான் போடுவோம்னான்.  அப்ப என்ன பண்றதுனேன்.  ஐயா, வேற கடைகளில் முயற்சி பண்ணி பாருங்களேன்னான்,  மறுபடி.  தம்பி இந்த கடை ஓனர் நான் மருந்து வாங்க இங்கே வரச்சொல்ல, குறிப்பிட்ட அந்த
மருந்து ஸ்டாக் இல்லைனா வேற கடைகளுக்கு போன் போட்டு அது எங்கே கிடைக்குதோ அங்கே போய் வாங்கி வந்து தருவார்னேன். எனக்கு யாரையும் தொ¢யாதே ஐயா போன் போட்டு விசா¡¢க்கனான்.
இப்படியா ஒரு பொறுப்பில்லாத ஆளை கடையில் வச்சுட்டு உன் முதலாளி ஊருக்கு போவார்னேன்.  பதிலே சொல்லலை.  கல்லுளி மங்கனாட்டம் இருந்தான்.  “என்னப்பா எதுவும் பதில் பேச
மாட்டேன்றியேனேன்.  எனக்கு பதில் சொல்லத்தொ¢யலை ஐயானான்.  அப்பத்தான் கடைக்கு மருந்து வாங்க வந்தவங்க சிலர் “அதான் ஸ்டாக் இல்லைனு தம்பி சொல்லுதுல்ல,  வேற கடைகளில்
முயற்சி பண்ணி பாருங்களேன் ஐயா. ஏன் நை, நைனு சொன்னதையே, திரும்ப, திரும்ப சொல்லிகிட்டுனாங்க.  இவன் என்ன பண்ணியிருக்கணும்? “நீங்க யாரும் பேசாதீங்க.  நான்தான்  பதில்
சொல்லிகிட்டு இருக்கேன்னுல சொல்லணும்.  வயசானவங்கனாலே ஒரு இளக்காரம் எல்லாருக்கும்.  கண்டவங்களும், கண்டபடி பேசிட்டு போறதுனா, என்ன அர்த்தம்? அப்ப நான் வரட்டுமானு
கேட்டேன்.  அப்ப கூட “மனசில எதையும் வச்சுக்காதீங்க ஐயா.  நான் மருந்து கிடைச்சதும் வாங்கிகிட்டு வந்து உங்க வீட்டிலேயே கொடுத்துடறேன்னு சொல்லியிருக்காலம்ல உன்னைப்போல”
என்று பொ¢யவர் அங்கலாய்த்தபோது என் தவறு எனக்கு பு¡¢ந்தது.  தப்பு என் மீதும்தான்.  ஒரு கடையில் கேட்ட பொருள்  இல்லையென்றால்  இல்லை சார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்க
வேண்டும்.  அதை விடுத்து வேறு கடைகளுக்கு ஏன் போன் போட்டு விசா¡¢த்து அங்கே போய் வாங்கி வந்து கொடுப்பதோ, இல்லை கஸ்டமர்கள் வீடுகளுக்கு கொண்டுபோய் கொடுப்பதோ
செய்ய வேண்டும். நான் ஏற்கனவே சொல்லியது போல் இதை நான் ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாய் மட்டும் நினைக்கவில்லை.  மனித குல சேவையாய்த்தான் நினைத்து, அதுவும் இதுபோல அகவை முதிந்தவர்கள்,மாற்றுத்திறனாணிகள்,மற்றும்
 உடல் அசக்தமானவர்கள் மீது பா¢தாபப்பட்டு அவர்கள் வீடுகளை தேடிப்போய் கொடுக்க வேண்டும் .  இதுதான் என்  மனிதாபிமானத்துக்கு கிடைத்த பா¢சா, இல்லை தண்டனையா?
இருப்பினும் ஏற்கனவே மனத்தளவில் நொந்து போயிருக்கும் ஒரு பொ¢யவரை ஏன் நான் வேறு நோகச்செய்ய வேண்டும் என்று நினைத்து என் மகனை விளித்து அவனிடமும் எதுவும் பேச
முடியாமல் தவித்து பிறகு மெல்ல இது பற்றி சொல்லி “நீ எனக்காக தயவு பண்ணி அவர் வீடு வரை போய் மன்னிப்பு கேட்டுட்டு வரணும் தப்பு உன் மேல இல்லாட்டியும், இல்லாட்டியும் என்ன..நிச்சயமா தப்பு உன்மேல இல்லை..   எனக்காக செய்வியா?
என்றபோது என் மகன் சொன்னான்.  “அப்பா நாம் வாழறது பாரத தேசம்.  பெத்தவங்க, பொ¢யவங்க, ஆசி¡¢யர்களுக்கு பணிஞ்சு நடக்கனும்னு  படிச்சிருக்கேன். ” பித்ரு வாக்கிய பா¢பாலனம்”,
அதாவது “தந்தை சொல் மிக்க மந்திரமில்லைனு ஸ்ரீ ராமபிரான், தனக்கு மகுடாபிஷேகத்துக்கு நாள் குறிச்ச பிறகும்,  தசரத மன்னன், தானே  நோ¢ல் ஸ்ரீ ராமனிடம் சொல்லாமல், கைகேயி மாதா மூலம் ஸ்ரீராபிரான்கிட்ட “ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ கானகம் போய் 14 வருஷங்கள் வாசம் பண்ணனும்னு  சொல்லச்சொன்னப்பக்கூட, “எதுக்கு இப்படியொரு திடீர் முடிவுனு
 ஒரு வார்த்தைகூட கேட்காமல்   மரவு¡¢ தா¢த்து கானகம் போனவன் ஸ்ரீ ராமபிரான்னு நீங்கதானே எனக்கு சொல்லி கொடுத்தீங்க?.  தன் மனைவி
ஏதோ தவறு பண்ணிட்டானு, சந்தேகப்பட்டு,தன் பிள்ளையாண்டான் பரசுராமனை அந்த ஜமதக்னி முனிவர் அழைத்து உன் தாயாரை கோடாலியால் வெட்டிட்டு வானு சொன்னதும் உடனே அப்படியே செய்தவர் அந்த
பரசுராமர்.. அவர் வாழ்ந்த புண்ணிய பூமி இது.  உடனே ஜமதக்னி முனிவர் தன் மகன் கிட்ட உனக்கு என்ன வரம் வேணும், கேள்னு சொன்னப்ப அவரும் என் தாயாரை உயிர்பிச்சுகொடுக்கணும்னு
கேட்டாராம்.  இதையெல்லாம் விடவா  அப்பா நீங்க எங்கிட்ட விடுத்த வேண்டுகோள் பொ¢சு. ஒரு தடவை இல்லை, எத்தனை முறைகள் நீங்க என்னை அவராண்டபோய்  மன்னிப்பு கேட்கச்சொன்னாலும் கேட்பேம்பா..அது மட்டுமில்லைபா,நீங்க எது சொன்னாலும் “ஏன்?எதுக்குனு” கேட்காமல் செய்வேம்பா” என்றான். மன்னிப்பு கேட்டு  திரும்பி வந்த  மகனை கட்டி அணைத்துக்கொண்டேன்.  கண்ணீர் விட்டேன்.  “நீங்க எதுக்குப்பா கண்ணீர் விடறீங்க? அகவை முதிர்ந்தவங்க
கால்களில் விழுந்து வணங்கி, ஆசிகள் பெற எனக்கு ஒரு சந்தர்பத்தை அமைச்சு கொடுத்த உங்களுக்குத்தான்  நன்றி சொல்லணும்” என்றான்.
கூடவே சில வருடங்கள் முன்பு வந்த ஒரு தொலைகாட்சி விளம்பரம் தன் நினைவுக்கு வந்தது என்றும்,  அதில் ஒரு சிறுவன் டாக்டர் ஒருவா¢டம் போனபோது,
அவர் அவனிடம்,”உனக்கு
என்ன பிராபிளம்? ” என்று கேட்க, அவனோ தன் சகாக்களில் ஒருவன் அவனை பொடியானு கூப்பிடறாதாக சொல்ல, டாக்டர் அவனிடம் “இந்த காதால வாங்கி, அந்த காதாலே விட்டுடு..இதெல்லாம் ஒரு ஜுஜூபி மாட்டர்னு
சொல்ல, அவன்”அப்படியெல்லாம் சுலபமா விட முடியாது.  இதுக்கு மருந்து ஏதாவது இருக்கா என்பான். அவரும் அவன் மன நிலை அறிந்து ஒரு பானத்தை சிபா¡¢சு செய்வார்.  ஒரு சில நாட்களுக்கு பிறகு அவன் டாக்டா¢டம் வந்து தன்குறை நீங்கி
விட்டதாகவும். இப்போதெல்லாம் தன் சகாக்கள் யாரும் தன்னை கிண்டல் செய்வதே இல்லை ” என்று சொல்லி மகிழ்வான்.., அப்படிதாம்பா இந்த பொ¢யவர் மன நிலையும் இருக்கும் போல…  அதாவது  நான் என்னவோ அவரை
தரக்குறைவாய் பேசிட்டதாகவும்,அப்ப இன்னம் சிலரும் சேர்ந்து  அவரை இன்சல்ட் பண்ணிட்டதாகவும் நினைச்சிக்கிட்டிருக்கார்..அவராண்ட நான் மன்னிப்பு கேட்டதால அவர் மன
உளைச்சல் போயிருச்சினா அதை விட எனக்கு வேறென்ன  சந்தோஷம் இருக்குப்பா எனக்கு” என்றான்..

Series Navigationநிழல் தேடும் வெயில்அட்டைக் கத்திகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *