மஞ்சுளா
காலம் காலமாய் போதி மரங்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றன
பல நேரங்களில் புத்தர்கள் அங்கு வந்து போவதுண்டு
குழந்தைகள் ஒழிந்து விளையாடும் நேரங்களில் தங்களையும் குழந்தைகளாகிவிட்டு மீண்டும் புத்தர்களாகி போவதுமுண்டு
மனித கண்களுக்கு மட்டும் தெரிவதேயில்லை
நம்மை தொலைத்து நம்மையே தேடும் நமக்காக எப்படியோ அன்று சரித்திரமாகிப் போனார் ஒரு புத்தர் மட்டும்
அன்றிலிருந்து ஒரு புத்தன் தொலைந்து விட்டான் என்று போதி மரங்களை நெருங்குவதே இல்லை எந்த புத்தனும் ! – மஞ்சுளா மதுரை