எதைக் கொண்டும்
நிரப்ப முடியாத
வாழ்வின் கணங்களை
வழிந்தோடும் தேவைகளால்
நிரப்பிக் குடித்து
தீர்ந்த போதும்
மீண்டும் அவற்றை
நாடித் திரிகிறோம்
ஆசைகளால்
நிரப்புகிறோம்
அடைந்த பின்னும் தீராமல் ஆசைகள் வழிந்தோட
நமக்கான தருணங்களை தூரத்து விண்மீன்களாக்கி மறைத்தே வைக்கிறோம்
ஒவ்வொரு
விடியலுக்கு முன்பும்
-மஞ்சுளா