வாசக நண்பர்களுக்கு,
வணக்கம்.
ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினைப் போற்றும் விதத்தில் காலச்சுவடு (மார்ச் 2019) சிறப்பிதழைச் கொண்டுவந்து கௌரவம் செய்தது.
அதன் தொடர்ச்சியாக, தனபாலின் சுயசரிதையும் நூலாக்கம் பெற்றிருக்கிறது. ஆனந்த விகடன் இதழில் தொன்னூறுகளின் மத்திய ஆண்டுகளில் – தொடர்ந்து பத்து மாதங்களுக்கு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை!’ என – அவரெழுதிய தொடர் வாசகர்களிடம் பரவலான கவனமும் பெற்றுள்ளது. சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம் அத்தொடரைப் பதிப்பித்துள்ளது. சிற்பி தனபாலின் தேர்ந்தெடுத்த படைப்புகளும் புகைப்படங்களும் ‘Art Paper’இல் பின்னிணைப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நவீன ஓவிய ஆளுமை குறித்த முதல் புத்தகம் இதுவென்பது கூடுதல் சிறப்பு.
பரிந்துரை சுட்டி:

நூலின் பிரதியைப் பெற (விலை: Rs 180) கீழுள்ள முகவரியில் தொடர்புகொள்ளவும்:
Kalachuvadu
No. 130/257, Triplicane High Road,
Triplicane,
Chennai 600005
Phone: 91-44-2844 1672
E-Mail: chennai@kalachuvadu.com
ஓவியம் சார்ந்து காலச்சுவடு பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்:
1. தமிழக ஓவியங்கள் – ஐ. ஜோப் தாமஸ்
2. அர்ச்சுனன் தபசு – சா. பாலுசாமி
3. நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் – சா. பாலுசாமி
4. மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் – சா. பாலுசாமி
5. சோழர் காலச் செப்புப் படிமங்கள் – ஐ. ஜோப் தாமஸ்
6. சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் – எஸ். ஏ. வி. இளஞ்செழியன்
7. மேற்கத்திய ஓவியங்கள் பகுதி I & II – பி. ஏ. கிருஷ்ணன்
நவீன ஓவியம், நவீன கலைகள் சார்ந்த மேலும் சில புத்தக வேலைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்களின் ஆதரவின்றி இதுபோன்ற நுண்கலை சார்ந்த ஆவணப்படுத்தும் எழுத்துப் பணிகள் சாத்தியமே இல்லை.
நண்பர்கள் வட்டத்தில் இம்மின்னஞ்சலைப் பகிர்ந்து உத்வேகப்படுத்துங்கள்.
நன்றி.
அன்புடன்,
எஸ். நாகம்,
மேலாளர் – காலச்சுவடு,
சென்னை.
- 5. பாசறைப் பத்து
- மீப்புனைவாளன்
- மாலை – குறும்கதை
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்
- ஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால் (காலச்சுவடு பதிப்பகம்)
- நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்