சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை.

This entry is part 3 of 20 in the series 2 பெப்ருவரி 2020

சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை. நாற்காலியைத் தவிர ஊர்வன, பறப்பன, ஓடுவன, ஓளிவன என அவன் தின்னாத சமாச்சாரமே கிடையாது. மனுசனையும் தின்கிறார்களா என்று தெரியவில்லை என்றாலும் எனக்கு அந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள்புரிவானாக.

பெரும்பாலான சீனர்கள் குரூரமானவர்கள். தாங்கள் தின்னப் போகும் விலங்கு துடித்துச் சாவதை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிற சீனர்களே அதிகம். நானும் மாமிசப்பட்சிணிதான் என்றாலும் அப்படிச் சாப்பிடுவதை ஒரு குற்ற உணர்வுடனேயே செய்து கொண்டிருக்கிறேன். மாமிசம் உண்ணும் இந்தியர்கள் அதற்கும் ஒரு அளவு வைத்துச் சாப்பிடுவார்கள். சீனர்கள், அமெரிக்கர்களைப் போல மூன்றுவேளையும் மாமிசம் தின்னுகிற இந்தியன் அபூர்வத்திலும் அபூர்வமானவன். நானும் அதிகமெல்லாம் சாப்பிடுவதில்லை.

அமெரிக்கர்களும் சீனர்கள் அளவுக்கு மாமிச பட்சிணிகள் என்றாலும் நாசூக்கானவர்கள். தன் கண் முன்னே ஒரு விலங்கு துடித்து இறப்பதை அமெரிக்கன் பார்க்க விரும்பவே மாட்டான். கண்ணுக்குத் தெரியாமல் கொன்று, வெட்டிக் கொண்டுவந்து சூப்பர் மார்க்கெட்டில் வைக்க வேண்டும் அவனுக்கு. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய பத்து இலட்சம் மாடுகள் இறைச்சிக்காக அமெரிக்காவெங்கும் கொல்லப்படுகின்றன என்கிற விஷயம் அவனுக்கு நன்றாகவே தெரியும். மாடுகள் மட்டுமல்ல. மில்லியன் கணக்கிலான கோழிகளும், பன்றிகளும், மாட்டுக் கன்றுகளும், வகைதொகையற்ற மீன்களும் அமெரிக்காவில் தினமும் கொல்லப்படுகின்றன.

அமெரிக்காவில் ஒரு மாநிலம் (எந்த மாநிலமென்று சொல்லமாட்டேன்) கன்றின் இறைச்சிக்கென்று புகழ் பெற்றது. பிறந்த கன்றுகளை உடனடியாக அதன் அன்னையிடமிருந்து பிரித்து நான்கடிக்கு, நான்கடி உள்ள ஒரு சிறிய அறையில் தனித்தனியாக அடைத்து வைத்துவிடுவார்கள். சூரிய வெளிச்சம் படாமல், வெளி உலகம் பார்க்காமல், அப்படி இப்படி நகர முடியாமல் அடைபட்டுக் கிடக்கும் அந்தக் கன்றினை நான்கைந்து மாதங்கள் கழித்துக் கொன்று அதன் இறைச்சியை வெளியில் விற்பார்கள். மிக விலை உயர்ந்த மாமிசம் அது. Veal என்று அதற்குப் பெயர். அந்தப் பெயரைக் கேட்டாலேயே சப்புக் கொட்டுவான் அமெரிக்கன்.

இன்னொரு மாநிலத்தில் மாடுகளைக் கொல்வது ஒரு பெருந்தொழில். தினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் தொடர்ச்சியாக ஒரு பெரும் தொழிற்சாலையில் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். மாடுகள் வரிசையாக உள்ளே செல்லச் செல்ல அதன் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் கன்வேயர்களின் வழியாக உள்ளே செல்லும் மாடுகளின் உடல்களை இயந்திரங்கள் தோலுறிக்கும். அடுத்த நிலையில் இயந்திர ரம்பங்கள் அந்த மாட்டின் உடலை இரண்டாகப் பிளக்கும். பின்னர் அடுத்த லெவல் புராஸஸிங் செய்ய அந்த உடல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு செல்லும்…….துக்ககரமான விஷயம்தான்.

வரிசையில் நிற்கும் மாடுகள் தாங்கள் இறக்கப்போவதை உணர்ந்து கண்ணீர் சிந்தும்., சில நேரங்களில் துப்பாக்கி குண்டு சரியாகப் பாயாமல் உயிருடன் இருக்கும் மாட்டின் தோல் உயிருடன் உரிக்கப்பட்டு பின்னர் இரண்டாகப் பிளக்கப்படுவதை எவனோ வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தான். அதுவேதான் பன்றிகளுக்கும், கோழிகளுக்கும்…..ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கையில் அமெரிக்கர்கள் தஙகளை இரக்க சுபாவிகளாகக் காட்டிக் கொள்ளத் தவறுவதில்லை.

சீனனின் குரூரம் வெளிப்படையானது. ஒரு பசுமாட்டினை உயிருடன் நடுத்தெருவில் உட்கார்த்தி வைத்து அதன் தோலை உரித்துக் கொண்டிருக்கும் ஒரு காணொளியைப் பார்த்து பயந்து நடுங்கிப் போனேன். இப்படியும் கூட இரக்கமற்று இருப்பார்களா என்கிற எண்ணம் இரண்டு நாட்களுக்கு என்னை வதைத்தது. அதுவேதான் நாய்களுக்கும். சீனர்களுக்கு நாயின் இறைச்சி மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான நாய்களப் பிடித்து கூண்டிலடைத்துக் கொண்டுவந்து ஒரு திருவிழா போலக் கொன்று தின்பார்கள். நாய்கள் அறிவுள்ளவை. தனக்கு நேரப்போகுக்ம் கதியை அது உணர்ந்து ஊளையிட்டுக் கண்ணீர் சிந்துவதைக் காண்பவர்களின் கல் மனதும் கரையும். ஆனால் சீனனின் மனது கரையாது. அதைப் பார்த்துச் சிரிக்கிற சீனனே அதிகமானவன்.


பைதிவே, தமிழ்நாட்டில் மாடுகளைக் கொல்வதைப் பார்க்கிற மென்மையான மனதுடையவர்கள் அங்கேயே உயிரை விட்டுவிடுவார்கள். கடப்பாரை, பெரிய சுத்தி அல்லது பாறங்கல்லை அந்த மாட்டின் தலையில் போட்டு மண்டையை உடைத்து அல்லது கழுத்து நரம்புகளை வெட்டி மணிக்கணக்கில் அதனைத் துடிக்கவிட்டு…..வேண்டாம். அதனை விட்டுவிடுவோம். நான் சொல்லவருவது நமது ஊரிலும் அப்படியான குரூரிகள் இருக்கிறார்கள் என்பதுதான்.

சீனனின் இன்னொரு பிரச்சினை உலகின் எல்லா விலங்குகளுகும் பேரிடியாய் வந்து இறங்கியிருக்கிறது. சீனனுக்கு அவனுடைய (…..ம்ம்ம்….இதை எப்படி நாகரிகமாகச் சொல்வது?…..குச்சி என்று வைத்துக் கொள்வோமா? சரி, குச்சியே இருக்கட்டும்) குச்சி சின்னதாக இருப்பதாக ஒரு தாழ்வுமனப்பான்மை உண்டு. வெறும் ஒன்றரை இஞ்ச்சி குச்சியை வைத்தே உலகில் மிகப்பெரிய மக்கள்தொகையுடைய நாடாகியிருக்கிறான் என்பதனை சீனன் அவ்வப்போது மறந்துவிடுகிறான். இருக்கட்டும்.

அவனுக்கு ரஸ்புடின் சைஸ் குச்சி இருந்தால் உலகம் என்னவாகியிருக்கும் என்கிற கற்பனையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

அவ்வப்போது தன்னுடைய குச்சியை பெரிசாக்கும் ஆசை சீனனுக்கு வந்துவிடுவதால் உலகத்தில் இருக்கிற எல்லா விலங்குகளின் குச்சியையும் சூப் வைத்துக் குடிப்பது அவனுடைய வழக்கம். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறான் இன்றைய சீனன். புலிக் குச்சிதான் உலகின் விலை உயர்ந்த குச்சி. ஆனால் வீரியம் நிறைந்த குச்சி என சீனன் நினைப்பதால் உலகில் இருந்த பெரும்பாலான புலிகள் காணாமல் போய்விட்டன. அதற்கப்புறம் மாட்டுக்குச்சி, மானின் குச்சி, ஆட்டுக் குச்சி என சூப் வைத்துக் குடித்தே உலகில் பெரும்பாலான விலங்குகள் அழிந்துவிட்டன அல்லது அழியும் நிலையில் இருக்கின்றன.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் கண்மூடித்தனமாக சுறாக்களைக் கொல்வது. சுறாவைப் பிடிக்க வேண்டியது அதன் உடலின் மேலிருக்கும் Fin-ஐ மட்டும் வெட்டியெடுத்துவிட்டு அந்தச் சுறாவைக் கடலில் வீசிவிடுவது. சீனன் சுறாவையும் தின்பவன்தான். ஆனால் அத்தனை சுறாவையும் படகில் வைக்க இடமில்லை. அதற்கும் மேலாக சுறாவின் Fin-னுக்கு ஏராளமான பணம் கிடைக்கும். சீனனின் குச்சி வெகுவேகமாக வளர சுறா Fin சூப் உகந்தது என்பது சீனனின் நம்பிக்கை. நீரில் நீந்துவதற்குத் தேவையான தனது Fin-ஐ இழந்த சுறா கடலில் மூழ்கி இறக்கும். அதனைக் குறித்தெல்லாம் சீனர்களுக்குக் கவலையில்லை. குச்சி பெரிசானால் சரி!

இந்த ரசாபாசத்தை எழுதினால் இன்னும் நான்கு பக்கத்திற்க்குப் போகும் என்பதால் விஷயத்திற்கு வருகிறேன்.

வட அமெரிக்காவில் Beaver என்கிறதொரு தண்ணீரில் வசிக்கிற விலங்கு இருக்கிறது. பெருச்சாளியைப் போன்ற ஆனால் அதனைவிட பத்துமடங்கு பெரியதொரு விலங்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன். அமெரிக்க, கனடா நாடுகளின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் Beaver-இன் பங்கு மிக அதிகம். அப்படியாகப்பட்ட Beaver விலங்கின் குச்சியை சூப் வைத்துக் குடித்தால் அவனுடைய குச்சி கணநேரத்தில் ஒரு அடியாக வளர்ந்துவிடும் என்று எவனோ சீனர்களைக் கிளப்பிவிட்டுவிட்டான் போலிருக்கிறது. பரிதாபப்பட்ட Beaver இனத்தையே காலி செய்துவிட்டார்கள்.

கனடாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 12 டன் (அல்லது இரண்டு டன்) பீவர் குச்சிகளை, (ஆம்; குச்சிகள் மட்டும்) சீனக் கஸ்டம்ஸ்காரர்கள் பிடித்திருப்பதாகச் செய்தியொன்று தெரிவிக்கிறது. இதற்காக எத்தனை கோடி Beaverகள் இறந்தனவோ?

வயாக்ரா என்கிறதொரு சமாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை சீனர்கள் அறியார்கள் போலிருக்கிறது. ஒரு மாத்திரை போட்டால் டொண்டிஃபோர் அவர்ஸ் கொடிக்கம்பம் மாதிரியாக இருக்கும் என்கிற சமாச்சாரத்தை சீனர்களுக்கு யாராவது உடனடியாக எடுத்துச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் சுண்டெலிகளைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள் படுபாவிகள்!

Series Navigationமஹாவைத்தியநாத சிவன்செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *