வார இறுதியில்
எல்லாரும் வீட்டில் ….
ஊரிலிருந்து அடிக்கடி
நலம் கேட்கும் குரல்கள்
‘வாயைக்கட்டி சும்மா கிட’
சொல்லலாம் இல்லாளிடம்
‘எத்தனை நாள் ஆசை
இப்படி அமர்ந்து பேச’
ஓடுபாதையில் காகங்கள்
சென்னைக்கா நாளைக்கா
இருநூறே வெள்ளிதான்
‘ஏறும் வரி ஏவுகணை
இனச்சண்டை எல்லைச்சண்டை’
எங்கே போயின
எல்லாச் செய்தியும்
சாதாக் காய்ச்சலுக்கும்
ராஜமரியாதை
‘ஓய் ஐன்ஸ்டீன்
ஒளியைவிட வேகமாய்
இதோ இன்னொன்று’
‘சிங்கப்பூர் செல்லாதீர்கள்’
அட! சொல்லமுடிகிறது
விஞ்ஞானிகளின்
மண்டை குடையும் கேள்வி
‘கோவிட்டுக்கு எப்போது
கொள்ளி’
விலங்குகளின் வாதம்
‘வாழும் பூமி பொது
வாழுங்கள் வாழவிடுங்கள்
எங்களுக்கு
வாயில்லை உண்மை
வாய்மையுமா இல்லை?’
‘ஏய் யார் என்னை உலுக்கியது’
விலங்குகள் கேள்வியில்
குலுங்கியது பூமி
அமீதாம்மாள்
- கோவிட் 19
- புத்தகங்கள்
- கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?
- நெம்பு கோல்
- திருப்பூர் சக்தி விருது 2020
- ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்