செந்தில்
நிலத்தை வெற்றி கொள்ள
பந்தயமிட்டு பற்றிப் பரவும்
பாதங்கள் அற்ற பாம்பும்,
மண் புழுவும் காலத்தின் குறியீடு!
வேர்கள் விலங்கிட்டாலும்
விசும்பை வெற்றி கொள்ள
விண்ணோக்கி உயரும் மரம் செடி கொடியும் காற்றின் குறியீடு!
காலத்தை வெற்றி கொள்ள இரவும் பகலும் எந்நாளும் திசை மாறாது சுழலும் திங்களும் ஞாயிறும் நிலத்தின் குறியீடு!
பால் (ழ்) வெளியில் பலகோடி நூறாண்டு பரமபதம் விளையாடும் விண்மீன்கள்
காலாதீதத்தின் குறியீடு!
கண்ணுக்குத் தெரியாத காலாதீத கணங்களை குறிக்க கணக்கில் அடங்கா தெய்வங்கள்!
காற்றில் ஒருகாலும், சேற்றில் ஒருகாலுமாக காலாதீதத்தைக்
கண்டு கதிகலங்கி கனவுகளுடன் நிற்கும் மனிதன் ஒரு கல் (அல்லது) கடவுள்!
- அகநானூற்றில் பதுக்கை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்
- மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
- இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்
- ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை
- தனிமை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இன்னும் சில கவிதைகள்
- காலாதீதத்தின் முன்!
- மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………
- எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
- எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !