தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்

மொழிபெயர்ப்புக் கவிதை
அமெரிக்க எண்கணிதம்
ஆங்கில மூலம் : நதாலி டயஸ்
அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில்
பழங்குடியினர் ஒரு சதவீதத்துக்கும் கீழே.
0.8 சதவீதம்தான்.
ஓ, என் திறமையான நாடு.
முந்தைய அமெரிக்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
நாங்கள் எல்லோரும் இங்கு வந்தது எப்போது என்றும் தெரியாது.
மற்ற இனத்தினரை விடப்
போலீஸ் பழங்குடியினரை அதிகமாகக் கொல்கிறார்கள்.
இனம் என்பது வேடிக்கையான வார்த்தை.
இனம் என்றால் யாராவது ஒருவர் வெற்றி வாகை சூட வேண்டும்..
நானும் கூட வெற்றி பெற….
பந்தயமற்ற பந்தயத்தில் ஜெயிப்பது யார் என்பது
நாமெல்லாம் அறிந்த ஒன்று.
போலீஸ் கொல்பவர்களில் 1.9 சதவீதம் பழங்குடியினர்
இது மற்ற எந்த இனத்தவரையும் விட அதிகமானது.
நாங்கள் 0.8 சதவீதம் உயிர்வாழ்பவர்களாக இருக்கிறோம்.
சில சமயம் இனம் என்பது கூட ஓடுவதுதான்.
நான் கணக்கில் புலியல்ல –
நீங்கள் என் மீது குற்றம் சாட்ட முடியுமா?
அமெரிக்கக் கல்வியைக் கற்றவன் நான்.
நாங்கள் அமெரிக்கர்கள்.
1 சதவீதத்துக்கும் குறைந்தவர்கள்.
உயிர் வாழ்வதில் அல்ல –
போலீசால் கொல்லப்படுவதில்
எங்கள் வாழ்க்கை இருக்கிறது.
நாங்கள் சாகும் தருணம்
யாரை அழைக்க வேண்டும்?
போலீசையா? எங்கள்
ஆட்சிப் பிரதிநிதியையா?
அமெரிக்கப் பழங்குடியினரின தேசிய அருங்காட்சியகத்தில்
68 சதவீதத் தொகுப்பு அமெரிக்காவினுடையது.
நான் ஓர் அருங்காட்சியகமாக இருக்க விரும்பவில்லை.
இயல்பாக மூச்சு விடப்
பெரிதும் முயலுகிறேன்.
நான் மன்றாடி இறைஞ்சுவதெல்லாம் :
என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.
கண்ணுக்குத் தெரியாதவனாக அல்ல.
நூறு மனிதர்கள் வாழும் அமெரிக்க நகரத்தில்
நான் ஒன்றுக்கும் கீழான,
முழுமையற்ற
எனக்கே இருப்பில்லாத
அமெரிக்கப் பழங்குடி ஆள்.
ஓர் உடலின் மிகச் சிறிய பகுதி.
ஒரு கை என்று வைத்துக் கொள்ளுங்கள் –
அது என் காதலின் சட்டைக்குள் நழுவகையில்
நான் முற்றிலுமாக மறைந்து விடுகிறேன்.
(42 வயது நிரம்பிய நதாலி டயஸ் ஒரு நெகிழ்பாலுறவாளர் பழங்குடியைச் சார்ந்தவர். அரிஸோனாவில் வசிக்கும் பிரபல கூடைப்பந்து ஆட்டக்காரர். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் விளையாடி இருக்கிறார். When My Brother Was an Aztec என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.)
- அகலிகைக் கல்
- அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்
- அப்பொழுது அவன்
- திருக்குறள் காட்டும் மேலாண்மை
- இளிக்கின்ற பித்தளைகள்
- கூக்குரலுக்காய்…
- இவன் இப்படித்தான்
- எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்
- கவிதையும் ரசனையும் – 6
- காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்