Posted in

மனிதர்களுக்கு மரணமில்லை

This entry is part 13 of 13 in the series 11 ஏப்ரல் 2021

 

குமரி எஸ். நீலகண்டன்

 

காற்று போன

உடல் மாயமாகலாம்.

உள்ளிருந்த இதழினும்

மெல்லிய அன்பும்

இதமான ஈரமும்

வளமான இடம்தேடி

வானுயர வளர்ந்து விடுகின்றன.

 

அந்த ஆலமரங்களின்

அகன்ற விழுதுகளில்தான்

தலைமுறைகள்

தணலினில் தொங்கி

விளையாடுகின்றன.

 

நல்ல மனிதர்களின்

மரணம்

நல்ல விதைகளை

பலரிடம் தூவித்தான்

செல்கின்றன.

அவர்களுக்கு மரணமேது?

( மூத்த மொழிபெயர்ப்பாளரும் எனது ஆகஸ்ட் 15 நாவலை இந்தியில் மொழிபெயர்த்தவரும் சாகித்ய அகாதமி விருதாளருமான டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியம் நேற்றிரவு சிவபதம் அடைந்தார். அவர் பேராசிரியர் நாச்சிமுத்து அவர்களுடன் சேர்ந்து தொல்காப்பியத்தை இந்தியில் மொழி பெயர்த்திருக்கிறார். பாரதியார் கவிதைகள் முழுவதையும் சமீபத்தில் இந்தியில் மொழி பெயர்த்திருக்கிறார். குடியரசுத்தலைவர் விருது பெற்ற பெருமைக்குரியவர். டெல்லி தமிழ் சங்கத்தின் மூத்த உறுப்பினர் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *