சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, கால்வாய்க் குறுக்கே மாட்டி, இருபுறக் கப்பல் போக்கு வரத்தை, சுமார் 7 நாட்கள் தடை செய்தது. அது சிக்கிக் கொண்ட தோடு, 37 கப்பல்கள், வாய்க்கால் மத்தியிலும், 70 கப்பல்கள், கால்வாய் முழு தூரத்திலும் முடக்கம் ஆயின. அத்துடன் நான்கு நாட்களில் கடக்கப் போகும் 306 கப்பல் களுக்கு நுழைவு எச்சரிக்கை விடுத்து, நிறுத்தம் அடைய எதிர்பார்த்தன. எவர் கிவன் பூதக்கப்பல் கரைக்குள் புகுந்த மண் கட்டி 30,000 குபிக் மீட்டர் [1,059,000 குபிக் அடி] எடுக்க, பல்வேறு கிரேன்களும், மண் தோண்டிப் படகுகளும் இராப் பகலாய் வேலை செய்தன. மேலும் முழுநிலவுக் காலமானதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, மார்ச்சு 29 ஆம் தேதி பூதக் கப்பல் நேர்படச் செல்ல விடுதலை ஆனது. இப்போது [மார்ச் 29] 45 கப்பல்கள் இரு புறத்திலும் நகர்ந்து வருகின்றன. ஒரு நீள் கப்பல் 200 கி.மீடர் [120 மைல்] தூரக் கால்வாய் கடக்க சுமார் 12 மணி நேரம் ஆகிறது.
ஒருவாரம் சூயஸ் கடல் மார்க்கப் போக்கு தடைப்பட்டதால், உலக நாடுகளின் வாணிப இழப்பு நிதி நாள் ஒன்றுக்கு சுமார் 9.6 பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது. அத்துடன் உலக நாடுகளில் பெட்ரோல் விலை ஏறும். மற்றும் சாதனங்கள், பொருட்கள் விலை ஏறும்.
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய கால்வாய்!
கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர் களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.
இந்தியாவுக்கும் ஈரோப்பிற்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப்பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது! அந்த நூறு மைல்களைக் கடக்க ஒரு கப்பலுக்குச் சுமார் 15 மணி நேரம் எடுக்கிறது. பத்தாண்டுகளாக 2.4 மில்லியன் பணியாளிகள் அல்லும் பகலும் பணி செய்து, கட்டிய கடற்பாதை அது! கால்வாய் பூரணமாக 125,000 நபர்கள் உயிரைப் பலி கொடுத்துள்ளதாக அறியப் படுகிறது! டோக்கியோ, ராட்டர்டாம் [ஹாலந்து] கடற் பயண தூரத்தை 23% சதவீதம் சூயஸ் கால்வாய் குறைக்கிறது! செளதி அரேபியா துறைமுகம் ஜெட்டாவிலிருந்து [Jeddah], கருங்கடல் துறைமுகம் கான்ஸ்டென்ஸாவுக்குச் [Constanza] செல்லும் கப்பல், சூயல் மூலமாகச் சென்றால் 86% தூரத்தைத் தவிர்க்கிறது! அதுபோல் ஆஃபிரிக்கா முனை வழியாகக் கப்பல் லண்டனிலிருந்து பம்பாயிக்குச் சென்றால் 12,400 மைல்! ஆனால் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றால் லண்டன், பம்பாய் கடல் தூரம்: 7270 மைலாகச் சுருங்குகிறது.
தகவல்:
2. https://www.bbc.com/news/
- சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…
- தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்
- பூராம் கவிதைகள்
- முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?
- உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.
- எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்
- கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!
- ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !
- மனிதர்களுக்கு மரணமில்லை