அதிரசம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 20 in the series 23 மே 2021

 

 

 

 

 

 

பானுப்ரியா 

ஊருக்கு நடுவில் ஒரு குட்டி பிள்ளையார் கோவில் , அதுக்கு எதிர் வீடு நாராயணசாமி வீடு .

 

இவர் குடும்பத்தில் தற்போது கொஞ்சம் பணவீக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ஒன்றும் இவருக்கும் ,இவர் குடும்பத்திற்கும் புதிது இல்லை . விவசாய நடுத்தர வர்க்கம் இதை எல்லாம் கடக்க தான் வேண்டும்.

 அவர் வீடு சிறியதாக இருந்தாலும்,

அவ்வளவு அழகாக இருக்கும் வாயிலின் முகப்பில் இரு திண்ணைகள் , நடுவில் முற்றம்  , மூன்று சிறு அறைகள் ,முற்றத்தை சுற்றி தேக்கு மரத்தால் ஆன தூண்கள் எல்லாம் நாராயணசாமியின் அப்பா காலத்தில் செய்யபட்டது.

முற்றத்தின் இடப்பக்கத்தில் ஒரு பெரிய செம்மர ஊஞ்சல்,

முற்றத்தின் நடுவில் துளசி மாடம்.

மீனாட்சி அதை தினமும் குளித்து முடித்து சுற்றி வருவது வழக்கம்.

கொல்லைபுறத்தில் கிணறும்  ,வாழை மரமும் இருக்கும் .

நாரயாணசாமிக்கு ஒரு அரைக்காணி விவசாய நிலம் உள்ளது ,மாலை பொழுதில் நிலத்தில் இருந்து வீடு திரும்பினார் .

“மீனாட்சி எங்க இருக்க கொஞ்சம் குடிக்க தண்ணீ வேணும் ” 

என்றபடி உள்ளே சென்று தன் மனைவி மீனாட்சியை அழைத்தார்.

“இதோ வரேன்ங்க “

கொள்ளை புறத்தில் இருந்து வந்து, தண்ணீர் கொண்டு வந்தாள் .

“வேணி எங்க ?”

வேணி இவர்களின் ஒரே மகள் படுசுட்டி .

“அவளா ..! பள்ளிகூடத்துல இருந்து வந்து விளையாட போய்ட்டா ” 

சொல்லி கொண்டு இருக்கும்போதே,வேணி உள்ளே வந்தாள் .

“அப்பா எப்ப வந்தப்பா ..?”

என வினாவி கொண்டே ஏறிக்கொண்டாள் 

“இப்போ தான்டா வந்தேன்.

ஆமா நீ எங்க போன?”

“அப்பா நான் ராணியோட ,விளையாட ஆலமரத்துக்கு போனேன் “

மீனாட்சி சாப்பிட அழைத்தால் இருவரும் சென்றனர்.

சாப்பிட்டபின் படுக்கை அறைக்கு 

சென்று எதையோ எடுத்து வந்தவள் தன் அப்பா முன் நீட்டினால் 

அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தார் ,இவள் கைகளை பார்த்த உடன்,

“என்னடா இது ?”

“அப்பா இன்னைக்கு எங்க பள்ளிகூடத்துல கவிதை போட்டி நடந்துச்சி ,நான் முதல் பரிசு வாங்கினேன் “

“செல்லம் “

என்று அணைத்து கொண்டார் ,

அவள் உறங்க சென்றுவிட்டாள் .

இவருக்கு உறக்கம் வரவில்லை நாற்காலியை நடு முற்றத்தில் துளசி மாடத்திற்கு அருகில் போட்டு அமர்ந்துக்கொண்டு ,குடும்பசூழலை யோசித்து கவலை  கொண்டு இருந்தார்.

மறுபுறம் வேணியை நினைத்து மகிழ்ந்தார் .

ஏழு வயதிலே இவ்வளவு அறிவு 

இரவு முழுவதும் யோசித்து கொண்டே, சாய்வு நாற்காலியில் உறங்கிவிட்டார் .

விடிந்தது,

 மீனாட்சி குளித்து முடித்து விட்டு துளசி மாடத்தை சுற்றி வந்து சமையலை தொடங்கினாள்.

இவரும் வேலையை பார்க்க நிலத்திற்கு செல்ல ஆயத்தமானார்.

சாப்பிட்டுவிட்டு ,வேணியை அவரது சைக்கிளில் அமர வைத்து கொண்டு பள்ளிக்கு சென்றார்.

 போகும் வழிநெடுக,

 ஒரே கேள்விகணைகள்

 இவரும் சுளிக்காமல் பதில் அளித்தார்.   

செல்லும் வழியில் ஒரு ஒற்றை கிணறு

அருகில் உள்ள ஆலமரத்தடியில் இருவரும் சற்று நேரம் பேசுவது வழக்கம்.

பிறகு இருவரும் பள்ளியை அடைந்தனர்.

வேணி இறங்கி ஒரு பார்வை பார்த்தாள் 

நாராயணசாமி நெற்றியில் முத்தத்தோடு ,ஒரு முறுக்கையும் கொடுத்து விட்டு நிலத்திற்கு சென்றார்.

இது குளிர்காலம் என்பதால் நவரைகால பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

நவரை புரட்டாசி-ஐப்பசியில் துவங்கி 

மார்கழி-தையில் முடிவடையும்.

குறுகிய கால சாகுபடி 

இவர் நிலத்தில் கொஞ்சம் களைகள் இருந்ததால் களைபறித்து விட்டு வீடு திரும்பினார் .

மதிய உணவை சாப்பிட்டுவிட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தார் .அப்போது நண்பர் ஒருவர் வர இருவரும் திண்ணையில் அமர்ந்து கொண்டு கதையளந்து கொண்டு இருந்தனர்.

வேணி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தாள் 

தீபாவளி பண்டிகை பற்றி தன் அம்மாவிடம் பேசிவிட்டு விளையாட சென்றாள் .

இரவு உணவு உண்டு விட்டு 

வேணி இன்று முன்னதாகவே தூங்கிவிட்டாள் .

மீனாட்சி மெல்ல பேச்சை துவங்கினாள் 

“என்னங்க… தீபாவளி வருது”

“ம்….ஆமா என்ன செய்றதுனே தெரியல…”

“உங்களுக்கு தெரியுமா?”

“என்ன??”

“இன்னகி வேணி தீபாவளி பத்தி நிறைய பேசிட்டு இருந்தாங்க…

பலகாரங்கள் பத்தியும் கேட்டாங்க 

அதோட கருப்பட்டி அதிரசம் வேணும்னு சொன்னா”

“ம்…இரு மா பாக்கலாம் இன்னும் ஒரு வாரம் இருக்குல…”

இருவரும் பேசிக்கொண்டே உறங்கி விட்டனர்

விடிந்தது சரியான மழை கொட்டியது

வேணி மழையில்  விளையாடி கொண்டு இருந்தாள்

சமையல் அறையில் அடுப்பு ஊதிய படி அதட்டி கொண்டு இருந்தாள் மீனாட்சி

“ஏய் … ஒன்னும் இருக்க முடியலயா?

மழையில் ஆடாத வந்தேன் அடி வாங்குவ”

இதையெல்லாம் பார்த்து கொண்டு,

 எதுவும் தெரியாதவர் போல 

அமர்ந்து கொண்டு இருந்தார்.

வேணி இவள் மிரட்டலுக்கு துளியும் அஞ்சவில்லை.

அடுப்பங்கரையில் இருந்து வந்தவள் 

வேணியை இழுத்து ஒரு அடி அடித்தாள்.

“செல்றத கேக்குறியா…?? 

கொஞ்சம் கூட உடம்புல பயம் இல்ல 

உடம்புல கை வெச்சா தான் அடங்குற”

வேணி அழுதுகொண்டே அவள் அப்பா மடியில் அமர்ந்து கொண்டாள்.

மாலையில் ஊதை காற்று வீசியதால்

சற்று குளிராக இருந்தது 

மீனாட்சி வரகாப்பியுடன் வந்து நின்றாள் 

இன்னும் தீபாவளிக்கு இரு நாட்கள் மட்டுமே இருந்தது.

“இன்னும் ரெண்டு நாள்தாங்க இருக்கு 

என்னங்க …செய்றது..”

“ம்…என்னம்மா செய்றது ….

இருக்குறத வெச்சி தான் செயய்யனும் ..”

“நம்மகிட்ட தான் ஒன்னும் இல்லையேங்க…”

“ம்….”என்றவாறே அவர் நகர்ந்தார்;

இந்த வருடம் போல் எந்த வருடமும் இருந்தது இல்லை ;

அவ்வளவு கஷ்டம்.

வேணி தான் நண்பர்களோடு விளையாட சென்றாள் .

“இன்னகி என்ன விளையாடலாம்…?”

“ம்….இரு…ம்… தீபாவளி விளையாட்டு விளையாடலாமா…??”

“ம்…சரி ” 

என்று அனைவரும் கூறினர்.

ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்தடியில் தான் எப்போதும் விளையாடுவது வழக்கம்.

ஆற்றுக்கு அந்த பக்கம் வரிசையாக காவலுக்கு பனைமரங்கள் நின்று கொண்டு இருக்கும் ,பார்கக அழகாக இருக்கும்.

ஆலமரத்துக்கு பக்கத்தில் சற்று தொலைவில் ,ஒரேயொரு கருவேலமரம் இருக்கும்;

அது ரொம்ப பழைய மரம் .

பிறகு மருதமரங்களும், ஆற்றங்கரையில் இருக்கும் 

இந்த ஆற்றின் சொட்டை வாலை ,அயிரை ,விரால் போன்ற மீன்கள் உண்டு.

இந்த மீன்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்;

இவர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட ஆலமரத்தடியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.

வீடுகட்ட களிமண்ணிற்காக 

உடையார் தாத்தா வீட்டிற்கு சென்றனர்அனைவரும்.

உடையார் தாத்தாவிற்க்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம்;

பாண்டம் செய்யும் மண்களை வீட்டில் பின்புறம் வைத்து இருப்பார்.

பின்புறம் சென்று மண்ணை அள்ளி வந்து தந்தார் .

வாங்கி கொண்டு சென்றனர்

கொட்டாங்குச்சி,குட்டி குட்டி மண் சொப்புகள் ,எல்லாம் எடுத்து வந்தனர்.

கருவேல இலை,மணத்தக்காளி,குப்பைகீரைகள் வைத்து சமைக்க ஆரம்பித்தனர் .

எல்லோரும் சமையல் முடித்து விட்டு 

படையல் போட்டு தீபாவளியை கொண்டாடினர்.

வீட்டிற்கு வந்தாள்  வேணி 

“அம்மா…. அப்பா….

எங்க இருக்கீங்க…”

இருவரும் வந்து 

“என்னம்மா…??”

என்றனர்.

இவள் இன்று நடந்த தீபாவளி பற்றி கூறினாள்

பிறகு இரவு உணவு உண்டனர்

வேணி உறங்கி விட்டாள் 

“என்னங்க ….

எனக்கு ரொம்ப கவலையா இருக்கு…”

“ம்… ஆமாம் …”

“வேணியை பாத்திங்களா ?

ஒரு நல்ல நாளுல கூட நல்லா இருக்கு முடியல…”

“ம்…..” 

கவலையுடன் உறங்கினர்

விடிந்தால் தீபாவளி.

அம்மா குளித்து முடித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்;அடுப்பில் சாதத்தை போட்டு விட்டு என்னை குளிப்பாட்டி ,போன தீபாவளிக்கு மாமா எடுத்து கொடுத்த புத்தாடையை அணிவித்து விட்டாள்.

பிறகு சமையலறைக்குள் சென்று வேலையை செய்தாள் .

அரிசி மாவோடு சிறிது வெண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து முறுக்கு பிழிந்தாள்.

கருப்பட்டியை தட்டி எடுத்து கொண்டு காய்ச்சி ,

அதில் ஏலம் சேர்த்து பாகு எடுத்து பாக்குவமாய்,

கருப்பட்டி அதிரசமும.

 சர்க்கரை அதிரசமும் ,செய்து முடித்து .

படையல் இட்டு சாமி கும்பிட்டு முடித்தனர்.

வேணிக்கு கருப்பட்டி அதிரசத்தின் வாடை மூக்கை துளைத்தது.

கருப்பட்டி அதிரசத்தை கையில் எடுத்து கொண்டு,

வாயின் அருகில் சுவைக்க எடுத்து சென்றாள் .

ஒரு குரல்…

“வேணி …. குட்டி….எழுந்துகோ….

குளிக்கனும் சீக்கிரம் …”

Series Navigationஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…பயம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *