இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்

This entry is part 3 of 10 in the series 26 செப்டம்பர் 2021

 

 

First Solar Company CEO, Mark Widmar recently met Prime Minister Shri Narendra Modi to discuss India’s renewable energy landscape, particularly solar energy potential, and the company’s target of 450 GW.

2030 ஆண்டுக்குள் இந்தியா 450,000 MW மீள்புதிப்பு எரிசக்தியில் [சூரிய ஒளிக்கனல் & காற்றாடி மின்சாரம்] [Renewable Energy Solar & Wind Power] உற்பத்தி செய்யும் என்று பிரதம மந்திரி மோடி சமீபத்தில் அறிவிப்பு செய்துள்ளார். தொழிற்துறை ஆலைகள் தொடர்ந்து இயங்க அடிப்பளு மின்சார நிலையங்கள் [Base Load Power Stations], ஏறி இறங்கும் பளு மின்சாரத் தளங்கள் [Swing Load Power Systems] தேவைப்படுகின்றன.

அடிப்பளுத் தேவைக்கு நிலக்கரி நிலையம், நீரழுத்த நிலையம் அல்லது அணுமின் நிலையம் பூர்த்தி செய்யும். கிரீன்ஹௌஸ் வாயுக்கள் எழுச்சி குறைக்க வேண்டுமானால் அணுமின் நிலையங்கள் தகுதி பெறும். இவ்விதம் இயங்கும் இருமுறை எரிசக்தி இணைப்பு ஏற்பாடுகள் பல [ HYBRID ENERGY INTEGRATED SYSTEMS ] உலக நாடுகளில் பரவி வருகின்றன. கரிவாயு குறைப்பு நீடிக்க, கிரீன்ஹௌவுஸ் சேமிப்பு தவிர்க்க வேண்டுமானால் ஹைபிரிட் இணைப்பு எரிசக்தி ஏற்பாடுகளை இந்தியா மேற்கொள்வதை நாம் வரவேற்க வேண்டும்.

 

இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

Posted on February 22, 2020

Image result for westinghouse nuclear reactor ap1000

வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms.

 

இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

Posted on February 22, 2020

வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

https://en.wikipedia.org/wiki/AP1000

Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

+++++++++++++++++++

 

Image result for westinghouse nuclear reactor ap1000

Westinghouse PWR Reactor Vessel Components

அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ?  அணு உலை இயக்கும் இந்தியாவா ?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா ?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

Image result for westinghouse nuclear reactor ap1000

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

Image result for indian electric power generation

S. Jayabarathan [September 26, 2021] [R-1]

Series Navigationகணக்குகுருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *