பாரதிமணியை மறக்க முடியாது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 15 in the series 5 டிசம்பர் 2021
அழகியசிங்கர்
நவம்பர் மாதம் 16ஆம் தேதி பாரதி மணி இறந்து விட்டார்.  ஒரு நாடகாசிரியர், நாடகங்களில் நடித்திருப்பவர், பல சினிமா படங்களில்  நடித்திருப்பவர்,  க.நா.சு மாப்பிள்ளை.  இதெல்லாம் விட அவர் ஒரு கட்டுரையாளர்.
 
என் குடும்ப நிகழ்விற்காக நான் பெங்களூர் சென்றபோது ஒருமுறை வெங்கட் சாமிநாதனைப் பார்ப்பதை விட பாரதிமணியைப் பார்க்கலாமென்று நினைத்தேன்.
 
எளிதில் மனம் விட்டுப் பேசக்கூடிய மனிதர் பாரதிமணி.  அவர் விருப்பப்படி சமீபத்தில் அவருடைய உடல் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. 
 
மேலும் அவர் விருப்பப்படி எந்தவித சடங்கையும் அவர் குடும்பத்தினர் மேற்கொள்ளவில்லை. 
 
அவர் மறைவைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்  குடும்பத்தினர் சாதாரண நிகழ்ச்சியாக எடுத்துக்கொண்டனர்.
 
பாரதிமணியை ஏன் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்?  கநாசுவின் மாப்பிள்ளை என்பதாலா?  இல்லை.
 
அவர் திரைப்படத்தில் நடித்ததாலா? இல்லை
 
நாடகம் நடத்தியதாலா?  அது ஓரளவு உண்மை.  அவர் சில நாடகங்களை நடித்ததோடல்லாமல் நடத்தியும் காட்டியிருக்கிறார்.
 
ஆனால் அதைவிட முக்கியம் அவர் ஒரு கட்டுரையாளர்.  எல்லார் மனதையும் தன் கட்டுரைகளால் கட்டிப் போட்டவர். 
 
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்ற 500 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகத்தை, படிக்கத் தொடங்கினால் கீழே வைக்க முடியாது.
 
எப்போதும் அவர் பெயரை இப் புத்தகம் சொல்லிக்கொண்டிருக்கும்.
 
அவர் சிறுகதைகள் எழுதவில்லை.
 
கவிதைகள் எழுதவில்லை. 
 
நாவல்கள் எழுதவில்லை. 
 
ஆனால் அவருடைய வாழ்க்கை அனுபவங்களை ஒரே ஒரு புத்தகம் மூலம் நிலை நாட்டி உள்ளார்.  என்றும் எப்போதும் பாரதிமணி புகழை நிலைநாட்டும் இந்தப் புத்தகம்.
Series Navigationமீள்வதா ? மாள்வதா ?ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *