வந்தேறி

This entry is part 4 of 15 in the series 9 ஜனவரி 2022

 

சித்ரா
 
கீரைக்காரம்மா
மளிகைக்காரத் தாத்தா
ஆட்டோக்கார அண்ணா
உரையாடிய மொழி..
 
 
போக்குவரத்து நெரிசலில்
வசைப் பாடிய சொந்தங்களின்
அடுக்கு மொழி உட்பட..
 
 
எண்ணங்களின் சுருதியில்
இணைந்து விட்ட மொழி.
உணர்வுகளை மீட்டும் போது
நாட்குறிப்பிலும் கடிதத்திலும்
இயல்பாய் கசிந்த மொழி.
 
 
தாய் வழி மொழியல்ல
தாயையும் பாட்டியையும்
சுற்றிச் சுற்றி வாழ்ந்த சகமனித
சங்கிலித் தொடர் மொழி.
 
 
கயிறு திரித்த மடமையின்
ஒற்றைச் சொல் – வந்தேறி
உயிரோட்டமான பிணைப்புகளின்
நகக்கண்களில் கூர்முட்களை
ஏற்றியப்படி..
 
 
– சித்ரா
Series Navigationஇரண்டு பார்வைகள் ! பாடறிந்து  ஒழுகு …   
author

சித்ரா

Similar Posts

Comments

  1. Avatar
    Muralidharan says:

    ‘கயிறு திரித்த மடமையின்
    ஒற்றைச் சொல்’ என்னும் உருவகம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது, கவித்துவம் மிக்கதானதும் கூட. அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *