அகவைகள் நூறு கண்டதோர் சஞ்சிகை

0 minutes, 5 seconds Read
This entry is part 10 of 10 in the series 20 மார்ச் 2022

 

 

சக்தி சக்திதாசன்

ரீடர்ஸ் டைஐஸ்ட்” எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம்தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக ரீடர்ஸ் டைஐஸ்ட்” ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.

நான் ஒரு பள்ளி மாணவனாக ஈழத்தில் வலம் வந்த போது என் தந்தையின் வழக்கமான வாசிப்புச் சஞ்சிகைகளில் ஒன்றாக ரீடர்ஸ் டைஐஸ்ட்” இருந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன்அவரது பரிந்துரைப்பிலும்ஊக்குவிப்பிலும் நானும் ” ரீடர்ஸ் டைஐஸ்ட்” சஞ்சிகையை அவ்வப்போது அப்போதே படித்து வந்தும் இருக்கிறேன்அதிலுள்ள துணுக்குகள் என்னை மிகவும் அதிகமாகக் கவர்வதுண்டுஅது தவிர பலர் எழுதும் தமது வாழ்வியல் அனுபவங்களும் கூட மிகவும் ஆச்சர்யமூட்டுபவையாக இருக்கும்.

அந்தச் சஞ்சிகையின் ஆக்கங்களின் ஆழத்தை நான் எனது 19 வயதில் லண்டன் வந்தபோது என்னால் முழுமையாக உணரக்கூடியதாக இருந்ததுஎப்படி என்கிறீர்களா ?

நான் இலண்டன் வருவதற்கு முன்னால் ஈழத்தை விட்டு வெளிநாடு ஒன்றுக்குமே சென்றிராத என் தந்தை இலண்டன் வாழ்வு முறைகளைப் பற்றியும்இலண்டன் வாழ்வின் சில நடைமுறை வழக்கங்களையும் எனக்கு அறிவுரையாகக் கூறினார்அப்போது அவரின் அறிவுரைகளை அப்போதைய வாலிபத் துடுக்கின் நிமித்தம் அக்கறையுடன் நான் எடுத்துக் கொள்ளவில்லை.

என்னே அதிசயம் ?

இலண்டனில் நான் பார்த்த நடைமுறைகளை அப்படியே என் தந்தை விபரித்திருந்தது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்ததுபின்பு நான் ஈழத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தபோது இது பற்றி நான் வினவியபோது தனக்கேயுரித்தான புன்னகையுடன் அனைத்தும் தான் ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” பல வருடங்களாக வாசித்து வருவதனால் அறிந்து கொண்டது என்று விளக்கமளித்தார்.

1922 ம் ஆண்டு முதலாம் உலக மகாயுத்தத்தில் காயமடைந்திருந்த அமேரிக்கர் ௶” ட்வீட் வாலேஸ் (DeWitt Wallace ) ரென்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் சஞ்சிகையாகும்.

பல சஞ்சிகைகளில்கட்டுரைகளில் வந்த சுவையானவற்றைத் தொகுத்துக்சிலவற்றை மீண்டும் தனது பாணியில் எழுதியும் ஒரே சஞ்சிகையில் கொண்டுவர அவர் எண்ணியதன் விளைவாகவே அகவைகள் நூறுக்கு முன்பு ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் இந்த சுவையான சஞ்சிகை உதயமாயிற்று.

தனது அரசியல் நிலைப்பாடாக ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” பழமைவாத ( Concervative)

க்கு ஆதரவாகவும் மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாட்டையுமே கொண்டிருந்ததுஇந்தச் சஞ்சிகையின் மூலம் வருடமொன்றுக்கு 5000 டொலர்கள் ஈட்ட முடியும் என்றே டாவீட் வாலெஸ் அவர்கள் எண்ணினார் எனினும் 1929ம் ஆண்டில் ஆச்சரியமளிக்கும் வகையில் 900000 டொலர்கள் ஈட்டினார் என்பதும் சுமார் 290000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.

இச்சஞ்சிகையின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1928ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

இச்சஞ்சிகையின் 40வது வருட பூர்த்தியின்போது சுமார் 40 நாடுகளில் சர்வதேச பதிப்புகளும், 13 மொழிகளில் 29 மில்லியன் விநியோகத்தை எட்டியது.

பல தசாப்தங்களாக இச்சஞ்சிகையின் ஒவ்வொரு பதிப்பிலும் 30 பதிவுகள் இடம்பெறுவது வழக்கம்.

இவற்றுள்

  • அதிசயமான துணுக்குகள் ( Amusing Anecdotes )

  • சொந்த அனுபவங்கள் ( Personal Glimpses )

  • சீருடையில் நகைச்சுவை ( Humor in Uniform )

  • ஐக்கிய அமெரிக்காவில் வாழ்க்கை ( Life in these United States )

  • நிஜ வாழ்க்கை நாடகங்கள் (Drama in Real Life )

என்பன போன்றவை மிகவும் குறிப்பிடத் தக்க பதிவுகளாகும்.

“ ரீடர்ஸ் டைஐஸ்ட்” படிக்காதவர்கள் அல்லது அதைப் பற்றி அறியாதவர்கள் மிகவும் சொற்பம் என்றே சொல்ல வேண்டும்ஒரு நாட்டுக்கு போகாமல் அந்நாட்டைப் பற்ரிய வாழ்வு முறையை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சஞ்சிகையில் கட்டுரைகளும்துணுக்குகளும் இடம் பெறுவதே இச்சஞ்சிகையின் வெற்றிக்குக் காரணமாகிறது.

இன்றைய இலத்திரனியல் ஊடக காலத்தில் கூட இணையத்தளம் வாயிலாக தனது செல்வாக்கை இச்சஞ்சிகை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்பது இதன் வாசகர்களின் ரசிப்புத் தன்மையின் ஆழத்தைச் சுட்டிக் காட்டி நிற்கிறது.

நூறாவது அகவையில் கால் பதித்து தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச்சஞ்சிகை இது பொன்று இன்னும் பல நூறாண்டுகள் தனது தனித்தன்மையை இழந்து விடாமல் நிலைத்திருக்கும் என்பது என் போன்ற எழுத்துப் பித்தர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது

சக்தி சக்திதாசன்

Series Navigationநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.
author

சக்தி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *