ப க  பொன்னுசாமியின் படைப்புலகம்

This entry is part 8 of 13 in the series 11 செப்டம்பர் 2022

 

 

 

ஏன்,  எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை  இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும் அடங்கும். கொங்கு வாழ்வியலின் அறம் சார்ந்த கேள்விகளை பூடகமாய் கொங்கு பேச்சுப் படிமங்களின் மூலம் பல பதிவுகள் செய்த திரு ப.க.பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமானப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது.

ஒரு படைப்பாளியின் சில படைப்புகள் சிலரை சென்றடைந்திருக்கும். படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள  இது போன்ற தொகுப்புகள் தேவை .அவை கல்வியாளர்களுக்கும்,  ஆய்வு மாணவர்களுக்கும்,  பொது வாசகர்களுக்கும் பயன்படக்கூடியவை

அந்த வகையில் “ ரீடர் “ எனும் வகையில் இத்தொகுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

 

திரு பொன்னுசாமி அவர்களின் பல்வேறு படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலரும் தங்கள் அபிப்பிராயங்களை கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை இத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.

அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகள், வட்டார இலக்கியம், தொழில்நுட்ப சாதனைகள் , இசைக்கூறுகள் என்று திரு பொன்னுசாமி அவர்களின் படைப்புகள்  சார்ந்து எல்லாவிதப்படைப்புகளின் ஆய்வு சார்ந்த கட்டுரைகளாக இவை அமைந்திருக்கின்றன. இலக்கியப்படைப்புகள் பற்றி பெரும்பான்மை பேசினாலும் விஞ்ஞானக்கூறுகளும் அறிவியலும்  முதன்மை பெறும் இடத்தில் இருக்கிறது.. மீரா, அசோகமித்திரன்  போன்ற எழுத்தாளர்களின் எளிமையானக் கட்டுரைகள்  ஒரு புறம்.இன்னொரு புறம்

விஞ்ஞானச்சிந்தனைகள் சார்ந்த வியப்புகள் கூடி நிற்கின்றன.. பிரேமாந்ந்தகுமார், மருதநாயகம், மாலன் , திருப்பூர் கிருஷ்ணன் என்று பலர் பல்கோணங்களில் எழுதியுள்ளனர்நாவலின் சில பகுதிகள் பெரும் மலையின்  துணுக்கை காட்டுகின்றன. அவற்றை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கல்லூரிக்காலக்கவிதைகள், நாடகங்கள் என்பவை ஆரம்பகாலப்படைப்புகளின் தன்மையைக்காட்டுகின்றன.சுமார் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இவர் இருந்து வருவதின் அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம்

ஒரு இலக்கியப் படைப்பாளியின் மொத்தப் படைப்புகள் பற்றிய ஒரு பருந்துப்பார்வைக்கானத் தளமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.  சி பி எச் நிறுவனத்திற்கும் நன்றி

 

சுப்ரபாரதிமணியன் rs 350 NCBH Chenna

Series Navigationபோன்ஸாய்நானும் நானும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *