சுப்ரபாரதிமணியன்
0
இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல்.
குறுகிய காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். பலவகை விளிம்பு நிலை மனிதர்கள்.. வீட்டு வேலை செய்கிற பெண்மணிகள், சாராயம் விற்பவர்கள் கூலி வேலை செய்கிறவர்கள் நெசவாளர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களை தொடர்ந்து காட்டிக் கொண்டே போகிறார். நாவலில் ராஜாஜியும் காந்தியடிகளும் அந்த ஊருக்கு வரும் ஒரு நிகழ்ச்சி அறிவிப்போடு தூங்குகிறது பின்னால் பல காலகட்டங்களை தாண்டி போய்விடுகிறது அதேபோல பல கதாபாத்திரங்களைத் தாண்டி போய்க் கொண்டே இருக்கிறது இந்த கதாபாத்திரங்கள் தங்களுடைய வாழ்க்கையின் சிரமங்களையும் மன எழுச்சிகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் காலகட்டத்தை பிரிக்கிற அத்தியாயம் முறைகள் எதுவும் இல்லை. அதே போல கதாபாத்திரங்களின் வெவ்வேறு தன்மையை சொல்லக்கூடிய அத்தியாயப் பிரிப்பு முறையில்லை தொடர்ந்து விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு எழுத்து முறையில் உருவாக்கி இருக்கிறது இந்த நாவல் .இந்த மனிதர்களில் குடும்பங்களை காலி செய்யச் சொல்லி அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது ஒரு விரிவாக்க திட்டத்திற்காக .குறைந்த காலம் .அவர்கள் வெளியேற வேண்டி இருக்கிறது அவர்களின் மன அவஸ்தைகளை இந்த நாவல் சொல்கிறது.
தொடர்ந்து எழுத்துமுறைகளில் அக்கறை கொண்டு தன் படைப்புகளை உருவாக்கி இருக்கும் சிந்து சீனுவினுடைய எழுத்து முறையில் வேகமும் இயல்பும் எதார்த்தமும் கூடியிருக்கிறது. பொதுவான அவருடைய படைப்புகளில் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த ஒரு அழகியலும் உருவாகி இருக்கிறது இந்த நாவலின் தலைப்பில் 1189 வீடுகள் காலி செய்யப்பட வேண்டும் என்பதைக் கூட அவர் சாதாரண யூகப் பகிர்வில் சொல்லிக் கொண்டு போகிறார் அவர் சொல்லிக் கொண்டு போவதற்காக நிறைய விஷயங்கள் இருப்பதில் இந்த விஷயம் ஒன்றாகிறது .அவர் எடுக்கிற நாவல்களின் மையம் சிறப்பாக இருப்பதை தொடர்ந்து கவனித்து வரையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . விளிம்புநிலை வாழ்வியலை கூர்ந்து கவனிப்பவர்களில் ஒருவராக சிந்து சீனு மாறி இருக்கிறார் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்
1189 வேலூர் லாவண்யா பதிப்பக வெளியீடு ரூபாய் 180
- வியட்நாம் முத்துகள்
- கவிதை
- மரணித்தும் மறையாத மகாராணி
- வீடு
- கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்
- அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்
- போன்ஸாய்
- ப க பொன்னுசாமியின் படைப்புலகம்
- நானும் நானும்
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- 1189
- பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
- அமராவதி என்னும் ஆடு