லாவண்யா சத்யநாதன்
மருத்துவமனையின்
முதலாளி அவரே
தலைமை மருத்துவரும்.
அவர் கண்ணுக்கு நான்
ஆஸ்டின் பசுவாகவோ
ஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.
கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.
வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.
வந்த வயிற்றுவலி
போகாமல் போகவே
வார்டில் சேர்த்தோம்.
வதைமுகாமிலகப்பட்டவர்போல்
வதங்கிப்போனார் அப்பா.
ஆடாமல் அசையாமல் ஒருநாள்
ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.
காற்றில் கலந்த அப்பாவின் உயிரை
கரைசேர்ப்பதாய் புரோகிதர் வந்தார்.
தகனம் முதல் கிரேக்கியம்வரை
ஐந்து லகர ஏழு லகர பேக்கேஜ்களை
சிபாரிசு செய்துகொண்டிருந்தார்.
நான் மொட்டை போட்டுக் கொண்டிருந்தேன்.
- கனவு மேகங்கள்
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -3
- நியூட்டன் படைப்பு விதிகள் !
- கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்
- ஒரு மரணத்தின் விலை
- பாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..
- காற்றுவெளி தை இதழ் (2023)
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு
- குவிகம் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு 15/01/2023
- நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்