காலம் மாறிப் போச்சு !
ஞாலத்தின் வடிவம்
கோர மாச்சு !
நீர்வளம் வற்றி
நிலம் பாலை யாச்சு !
துருவத்தில்
உருகுது பனிக் குன்று !
உயருது
கடல் நீர் மட்டம் !
பூகோளம் சூடேறி
கடல் உஷ்ணம் ஏறுது !
காற்றின் வேகம் மீறுது !
பேய்மழை கொட்டி
நாடெல்லாம்
வீடெலாம், வீதியெலாம் மூழ்குது !
வெப்ப யுகத்தில்
காடெல்லாம் எரியுது;
அண்டை நாடுகள்
சண்டை யிட்டு, குண்டு போட்டு
நகரங்கள்
நரகங்கள் ஆயின !
தொழிற்சாலைகள் வெடித்து
கரி வாயு,விஷ வாயு
பேரளவு பெருகுது !
பூகோளம் முன்னிலைக்கு
மீளாது !
மக்கள் வேலை போச்சு !
கூலி போச்சு !
நோய் நொடிகள்
தாக்க,
மக்கள் எல்லாம் இழந்து
புலப்பெயர்ச்சி !
இப்போது
வெப்ப யுகப் பிரளய
வேளையில்
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?
ஊருக்கு ஊர் தேவை,
தன்னார்வ
முன்னுதவிப் படைகள்,
பன்னூறு
பின்னுதவிப் படைகள்.
ஊர்ச் செல்வர் பண உதவி
உண்டி, வாகனம்,
கருவிகள்
தங்கு விடுதி தயார்
செய்வதற்கு.
பேரிடர் பாதுகாப்பணி
கண்காணிப்பு.
நாட்டுக்கு
முதற்கண் தேவை.
பெட்ரோல்
விலை ஏறுது !
பயணத்தை குறைப்பாய் !
பஸ், ரயிலில்
பயணம் செய்வாய்.
நிலக்கரி, எரிவாயு எரிசக்தி
பயன்பாடு
அவசரத் தேவைக்கு மட்டும்.
கவனமாய் இயக்கு
அணுமின் சக்தி நிலையத்தை.
விலை மிகை ஆயினும்
யுரேனிய உலோகம் பேரளவு
கிடைக்குது.
அணுமின் நிலையங்கள்
தேசத்துக்கு
தேவையான தீங்கு !
தொழிற் சாலைகளில்
கரிப் புகை வீச்சை
குறை, குறை,
குறை படிப்படியாய் !
கரிவாயுவை
விழுங்கும், மாற்றும்
இரசாயன முறைகளை உடனே
கண்டுபிடி.
கரிப்புகைத் தண்டனை
உண்டு
தவறிடும் அதிபருக்கு !
காற்றாடி, சூரியக் கதிர்ச்சக்தி
நாட்டுக்குப் போதா !
வீட்டுக்கு வேணும்,
பச்சை எரிசக்தி சாதனங்கள்
வாகனங்கள்
உற்பத்தி செய்யனும்.
கதிரியக்கம் இல்லாத
வாணிப முறையில்
அணுப் பிணைவு மின்சக்தி
நிலையங்கள் இயங்க
ஐந்து,பத்து ஆண்டுகள்
இன்னும் ஆகலாம் !
- சூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாது
- ஆணவசர்ப்பம்
- 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் தான் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகி யுள்ளது .
- பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்
- கேட்டது
- பழுப்பு இலை
- இந்த இரவு
- நாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000
- பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்