ஆர் வத்ஸலா
சிறு வயதில்
மும்பை திரையங்கில்
அப்பா அம்மாவுடன்
10 மணி காட்சியில்
‘ஜெமினி’யின்
‘ஏ.வி.எம்.’ மின்
தமிழ் படம் பார்க்கையில்
இடைவேளையில் வெவ்வேறு அழகான நிறங்களில்
கண்ணாடி தம்ளர்களில்
விற்கப்பட்ட திரவங்களின் (கற்பித்துக் கொண்ட) ருசி
நாற்பது வயதில் முதன்முதலாக
வீட்டில்
கலர் படம் பார்க்கையில்
நானே செய்த
மாம்பழ மில்க் ஷேக்கில் காணவேயில்லை
தெருவோர சாக்கடைக்கு மிக அருகில் இயங்கும்
தள்ளுவண்டி ‘பவனை’ தாண்டிப் போகையில்
மூக்கைத் துளைக்கும் வாசனையுடைய
வெங்காய பஜ்ஜி மாதிரி
வீட்டில் செய்ய
‘யூ ட்யூப்’ பாடம் கூட உதவவில்லை
முதன்முதலாக மகளை
வேற்றூர் கல்லூரி விடுதியில் சேர்த்து விட்டு
திரும்புகையில்
படுக்கை வசதி இருந்தும் தூங்க முடியாமல்
சோகம் விழிக்க வைக்க
நள்ளிரவில்
ஏதோ ஒரு நிலையத்தில் ரயில் நிற்க
நான் கற்பனையில் ருசித்த
கண்ட எண்ணெயில்
தள்ளுவண்டியில்
‘ப்ரெட் ஆம்லெட்’ செய்தவரின்
கை பக்குவம்
எனக்கு
வரத்தான் இல்லை
இன்னமும்
- ருசி 1
- ருசி 2
- முதல் ஆழ்வார்கள் கண்ட அரன் [பொய்கையாழ்வார்]
- பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023
- தினை அத்தியாயம் முப்பத்தெட்டு பொ.யு 5000
- ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2
- ஆதிவாசி கேரளர்கள் என்று கேரள இடதுசாரி அரசாங்கம் செய்யும் இனவெறித்தனம்