ஹிந்தியில் : ஹேமந்த் தேவ்லேகர்
தமிழில் : வசந்ததீபன்
நம் இருவருக்கு நடுவே ஒரு ஹார்மோனியம்
________________________________________
ஹார்மோனியத்தின் அந்தப் பக்கம்
சுரங்களை தனது விரல்களின் அமுக்குதலிருந்து
விழித்தெழுகிற நீ அமர்ந்து இருக்கிறாய்
மற்றும் இந்த பக்கம்
உன்னுடைய சுரங்களில் நாதம் நிரப்பி
திரைச்சீலையால் காற்றை வீசுகிறேன் நான்
ஹார்மோனியம் _
சந்தோஷ ஆரவாரம் நிரப்புகிறது ,கை_ கால்கள் நடக்கச் செய்கிறது.
ஒரு புதிய பிறந்த குழந்தை இருக்கிறது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆனது
நாம் இருவரும் அதற்கு உணவூட்டுவதில் ஈடுபட்டிருக்கிறோம்
நம் இருவரின் நடுவில்ஒரு ஹார்மோனியம் இருக்கிறது.
எனக்கு _ உனக்கு இடையில் ஒரு மழை நதி இருக்கிறது
அதில் ராக அனந்த அலைகள் எழுகின்றன
நாம் மூழ்கிறோம் அந்த நதியில்
நீந்துகிறோம் மற்றும் மூழ்கியபடி
பிடிக்கிறோம் ஏழு வண்ண மீன்களை
ஹார்மோனியம் நம் இருவரின் நடுவே அந்த நதியைப் போல இருக்கிறது.
ஆனால் என்ன நீ…
‘யமனி ‘ன் வரம்பு நினைவுக்கு வந்தபடி
எப்போதும் கவனமாக பார்த்திருக்கிறேன் ஹார்மோனியத்தை
என்ன அது உனக்கு பாலமாகத் தெரியவில்லையா?
அதன் மேலிருந்து ஓடி _ஓடி
நாம் ஒருவர் _ இன்னொருவர் நெருக்கம் வரைபோய் சேர்ந்திருக்கிறோம்
மற்றும் தொடாமல் தான் நனைந்து _ நனைந்து போய் இருக்கிறோம்
நம் இருவரின் நடுவே ஒரு ஹார்மோனியம் இருக்கிறது
அதில் வார்த்தைகள் இல்லையென்றால் என்ன ?
அது அதே மொழி பேசுகிறது
அது என்னுடையதாக இருக்கிறது ,உன்னுடையதாக இருக்கிறது.
நம் இருவரின் நடுவே ஹார்மோனியம் ஒரு கைராட்டை போல இருக்கிறது
அது நூற்கிறது
நிறைய மெல்லியதும் மிருதுவானதுமான நூற்கள்.
ஹிந்தியில் : ஹேமந்த் தேவ்லேகர்
தமிழில் : வசந்ததீபன்
ஹேமந்த் தேவ்லேகர்
_______________________
பிறப்பு : 11 ஜூலை 1972
பிறந்த இடம் : உஜ்ஜைன், மத்தியப்பிரதேசம்.
படைப்புகள் : ( 1)ஹமாரி உம்ர கா கபாஸ் தீரே_ தீரே லோஹே மே பதல் ரஹா ஹை ( கவிதைத் தொகுப்பு).
(2) ரங் கர்ம கர்தே ஹூஏ நாடகோங் கா லேகன்.
- நம் இருவருக்கு நடுவே ஒரு ஹார்மோனியம்
- ஆனாலும்
- கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தைப்பொங்கல் விழா