தமிழில் : வசந்ததீபன்
(1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை….
_____________________________________
அவைகள் இருப்பதில்லை
உடன் செல்வதற்காக.
அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக
சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன.
அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும்
முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன
அவைகள் மட்டும் இங்கே சந்தோஷம் கொண்டு பெறுகின்றன
என அவைகள் ஏதாவதொரு இருதயத்தில் இருக்கின்றன
என அவைகள் ஏதாவதொரு மூளையில் இருக்கின்றன
என யாரோ ஒருவன் அவற்றின் நினைவுகளை நெய்கிறான்
என யாரோ ஒருவர் அவற்றிற்காக
அல்லது ஈரமான கண்களை திரும்ப எடுத்துக் கொள்கிறான்.
சில காதல்கள் உற்சவததை கொண்டாடுவதில்லை
ஆனால் அவைகள் நோன்பு நோற்கின்றன
மேலும் இரண்டு வாய் அன்பு அவற்றை வாழ வைக்கின்றன.
காதல் ஒரு சித்தப்பிரமை.
ஹிந்தியில் : அர்ஷிதா
தமிழில் : வசந்ததீபன்
((2)) வெறுமை
______________
தினமும்
காலையில் எழுகிறேன்,
எனது தனிமையுடன்.
சூரியன் அதேவாக இருக்கிறது, வெப்பம் அதேவாக இருக்கிறது அதில்
மலர் அதேவாக இருக்கிறது, மணம் அதேவாக இருக்கிறது அதில்
சந்திரன் அதேவாக இருக்கிறது, குளிர்ச்சி அதேவாக இருக்கிறது அதில்
நதி அதேவாக இருக்கிறது, வேகம் அதேவாக இருக்கிறது அதில்.
ஆனால்,
இவை எல்லாம் இப்போது
என்னுடைய எந்த காரியத்திற்கு ?
எப்பொழுது __
நீ இல்லை,
உன்னுடைய நேசம் இல்லை என்னிடம் .
ஹிந்தியில் : பல்ஜித் கர்வால் ‘பாரதி’
தமிழில் : வசந்ததீபன்
(3)
ஆழம் அல்லது அகலம்
பார்க்கும் கண்கள் உற்றுப்பார்த்தபடி இருக்கின்றன இவர்களை
கொஞ்சம் விஷயம் இருக்கிறது இவர்களில் ஒவ்வொரு முறை அப்படி ஏற்படுகிறது
இவர்களின் புனிதம் நிறைய சொல்கிறது
நூற்றாண்டுகளாக பாசனம் செய்கிறது தானாக
வேர்கள் ஆழமாக போய் இருக்கின்றன
ஒரு _ ஒரு கிளைகள்
விஸ்தாரத்தின் செய்தி சொல்கின்றன
பசுமை கூறுகின்றன
இலையுதிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் சந்திப்பு
ஆண்டு ஆண்டுகளாக வாழ்ந்தோம் நாம்
நூற்றாண்டுகளில் குளிர் இருக்கிறது
கோடையில் விதானம் சிதறி இருக்கிறது
எத்தனை பயணிகள் வேகத்தை குறைத்து
பயணத்தில் செல்கிறார்கள்
கொதிக்கும் சூரியன் மற்றும் நிலவொளியும்
ஒரு ஒரு இலைகளின் மேல் இறங்கி
இன்றும் நின்று இருக்கிறேன்
சிரிக்கிறேன், பேசுகிறேன்
காத்திருப்பீர்களா? கேட்பீர்களானால்
என்னுடையது போல் உணர்வேன்
எனக்கு நீ எப்போதும்
என்னுடையவனாக
இருந்தாய்
இப்போது நான் கொஞ்சம் கொஞ்சம்
புரிதலை அடைந்தேன்.
ஹிந்தியில் : புஷ்பா குப்தா
தமிழில் : வசந்ததீபன்
(4,) மரணத் தொடரின் மற்றொரு கவிதை
_______________________________________
குரல் மெள்ள மெள்ளப் பேசுகிறது
காலடி மெதுவாக எழுகிறது
அமைதியாய் இருக்க கற்கின்றன கண்கள்
தன்னிடமிருந்து மட்டும் உடைந்து விழுந்த படி இருக்கிறது
மனம்
மனிதன் மனிதனிடமிருந்து தப்பிக்கிறான்
மனிதனை மட்டும் துண்டித்துவிட்டு வெளியேறுகிறான்
அவன் தானாகவும் சிக்குவதில்லை
அடிக்கடி குனிகிறான்
அங்கே எழுதுவதும் இல்லை
காலியாக விடப்படுகிறது இடம்
யாருக்கும் நம்பிக்கை இல்லாத போது
எந்தவித சந்தடியும் இல்லை
மரணம் உடலுக்கு வருகிறது.
ஹிந்தியில் : அருண்தேவ்
தமிழில் : வசந்ததீபன்
- போ
- 4 ஹிந்தி குறுங்கவிதைகள்