ஹிந்தியில் : நவீன் ராங்கியால்
தமிழில் : வசந்ததீபன்
_______________________________
கிணற்றிலிருந்து வாளிகள்
இழுத்து _ இழுத்து
அவர்கள் கயிறுகளாக
மாறிப் போனார்கள
மற்றும் உடைகளின் தண்ணீர்
பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்
நான் வெப்பமான மத்தியானங்களில் அவர்களை எனது கண்களின் மீது வைத்து இருந்தேன்
வேப்பமரத்தின் குளிர்ந்த இலைகளைப்போல
தண்ணீரில் இருக்கிற போது
அவர்களுடைய கைகள்
உருக ஆரம்பித்ததால்
அவர்களுக்கு
அடுப்புகள் எரிப்பதற்கான வேலை
ஒப்படைக்கப்பட்து
அதனால் அவர்களின் ஆன்மாவிற்கு
வெப்பம்
கிடைத்து கொண்டிருக்கிறது என்று இல்லை
அதனால்
நெருப்போடு
பெண்களின் நெருக்கம் உண்டாகிக் கொண்டிருக்கிறது
மேலும் அவர்கள் ஊதுகையில் அவைகள் எளிதாக எரியும்
நான் எப்போதும் நெருப்பை பார்க்கிறேன்
அப்போது எனக்கு பெண்களின் கைகள் நினைவுக்கு வருகின்றன
தீப்பிழம்பு போல மின்னிய
அவர்களுடைய கண்களுக்குக் கீழே
ஒன்று சேர்ந்திருந்தது
புகைக்கரியெனத் தெரிய வந்தது
எவ்வளவு வருடங்களாக அடுப்புகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள்
பெண் உலகத்தின் உலைக்கான அடுப்புக் கரியாக இருக்கிறாள்
அவள் குடும்பம் நிறைவடைவதற்காக பருப்பு _ அரிசியாகவும் ரொட்டியின் சூடான புல்காவாகவும் மாறிப் போனாள்
அவள் மனதிற்காக ஆகிப் போனாள் பச்சைக் கொத்தமல்லி
உடலுக்காக ஆகிப் போனாள்
உப்பு
மற்றும் இரவுக்காக அவள் சேகரித்து எடுத்தாள்
மிகுந்த எல்லா சுகங்களையும் ஓய்வுகளையும்
நீண்ட யாத்திரையில் அவள் ஊறுகாயினைப் போல
சேர்ந்து கொண்டு
எவ்வளவு ரொட்டிகளை
அவள் தயாரித்தாள்
அதிலிருந்து
புரிந்தது இந்த உலகம்__
எவ்வளவு பசியோடு இருந்தது என்று
பெண்களின்
எவ்வளவு பேர்
வறுக்கும் வடச்சட்டிகளில்
கொல்லப்பட்டனர்
பெண்கள்
அதால் அறிய முடிந்தது
எவ்வளவு உப்பு வேண்டியதாக இருந்தது ஆண்களுக்கு
வற்றிப் போன கிணறுகளிலிருந்து தெரிய வந்தது
எவ்வளவு குளிர்ச்சி இருக்கிறது பெண்களின் சூடான உள்ளங்கைகளில்
அவள் உலகின் பசியை அழித்தாள் மற்றும் தாகத்தையும்
அவள் உலகை சூடாகவும் வைத்தாள் குளிர்ச்சியாகவும் செய்தாள்.
இதற்கு சரியான எதிர்ப்பதமாக அந்த நெருப்பும் தண்ணீரும் பெண்களுக்கு கிடைத்தது இப்போது வரை.
அதை பூவினைப் போல பெண் வளர்த்தெடுத்தாள் தனது வயிற்றில்
மற்றும் மிகுந்த அன்போடு திருப்பித் தந்தாள் உலகத்திற்கு.
புல்கா : மென்மையான ரொட்டி
ஹிந்தியில் : நவீன் ராங்கியால்
தமிழில் : வசந்ததீபன்
நவீன் ராங்கியால்
________________________
பிறப்பு : 12 நவம்பர்1977
பிறந்த இடம் : இந்தூர் , மத்தியப் பிரதேசம்
” காத்திருப்பில் ” ஆ” மட்டும் ” என்ற முதல் கவிதைத் தொகுப்பு சேது பிரகாசன் என்ற பதிப்பகத்தால் 2023 ல் வெளியிடப்பட்டது.
நவீனக் கவிதைப் போக்கின் முக்கிய கவிஞர் ,எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர்.
நவீன் ராங்கியால்
- பூனை
- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு
- பெண்ணும் நெருப்பும்
- நெடுநல்வாடை