பள்ளிப் பருவமாய் இனிக்கும்
அந்தப் பேருந்து நிறுத்தம்
அருகில்தான் மகள் வீடு
மகளைப் பார்த்தபின்
என் மனை செல்லும் பேருந்து
அங்குதான் நிற்கும்
அங்கு….
ஒற்றுத்தாள் விற்கும் பாட்டி
சிநேகமாய்ச் சிரிப்பார்
இரண்டுவெள்ளி தருவேன்
செவன்லெவன் கடையின்
சிப்பந்திப்பெண் என் ஊர்
ஊரின் மழைவெயில் விசாரிப்பேன்
உணவுக்கடையில் நம் பையன்
பரோட்டாசுழற்றுவதில்
பேருந்தை மறப்பேன்
சிவப்பு மனிதன் முன்
பெருஞ்சாலை கடக்கும்
பெரிசுகள் பார்த்துத் திகைப்பேன்
என் நேரம் அங்கு
இரவு 8 மணி
‘நல்லா யிருக்கீங்களாண்ணே’
ஓட்டுநர் விசாரிப்பில் உறைவேன்
இன்று…..
அந்த இடமே அந்தியமாகி
அந்த நிறுத்தம்
அந்ந மனிதர்கள்
எல்லாமுமே
மனதுக்குள் மரணித்துக்கொண்டே…..
என் மகள் வீடு மாறிவிட்டார்.
அமீதாம்மாள்
- துருவன் ஸ்துதி
- வீடு விடல்
- பெருமை
- பேருந்து நிறுத்தம்
- சந்தைக்குப் போனால்…
- சாதனா எங்கே போகிறாள்