அமீதாம்மாள்
இட்லி வேணுமா?
தோசை வேணுமா?
தயாரா இருக்கு
மாக்கி நூடுல்ஸ்
கேவூர் கூழ்
உடனே தரலாம்
நேத்து வாங்கிய
சப்பாத்தி, பரோட்டா
உப்புமா, இடியப்பம்
எல்லாம் திடீர் வகைகள்
வேணுமா?
அட! மறந்துட்டேன்
பழசு புடிக்குமே
தண்ணிவிட்ட சோறு
தயிர், கருவாடு தரவா?
சொல்லுங்க
என்ன வேணும்?
யோசித்துக்கொண்டே
தொலைக்காட்சியைப்
பார்க்கிறேன்
ரொட்டி
எதிர்பார்த்து……
ஒட்டிய வயிறோடு…..
ஆயிரமாயிரம்
அகதிகள்
அமீதாம்மாள்
- `கிழக்கினை எதிர்கொண்டு’ – கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
- படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி !
- பசியாறலாமா?
- காலாதீதன் காகபூஶுண்டி
- கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு
- தனிமையின் இன்பம்
- யார்?