கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 7 in the series 9 ஜூன் 2024

குரு அரவிந்தன்

சென்ற ஞாயிற்றுக் கிழமை 02-06-2024 அன்று கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் அமரர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய ‘இலக்கிய உறவுகள்’ என்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்விற்கு கனடா – குரும்பசிட்டி நலன்புரி சபையின் தலைவர் ஐயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலில் அமரர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இடம் பெற்றது. குடும்பத்தினர், மற்றும் வருகை தந்தோரின் மலரஞ்சலியைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம் பெற்றது. கனடா பண், தமிழ் வாழ்த்து, இறைவணக்கம் ஆகியன சாச்சவி திலீபன் அவர்களால் பாடப்பெற்றன. அதன்பின் அமைதி வணக்கம் இடம் பெற்றது.

செயலாளர் கணேஸ்வரி குகனேசன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஐயாத்துரை ஜெகதீஸ்வரனின் தலைமையுரை இடம் பெற்றது. அடுத்து மறைந்த கவிஞருக்கான அஞ்சலி உரைகள் இடம் பெற்றன. திரு. வி.எஸ் துரைராஜா, திரு. க.சிவதாசன், எழுத்தாளர் இரா. சம்பந்தன், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், வீணைமைந்தன் சண்முகராஜா, பொன்னையா விவேகானந்தன், தமிழ்ப்பணி வா.மு. சே. திருவள்ளுவர் ஆகியோரது அஞ்சலி உரைகள் இடம் பெற்றன.

நினைவேந்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கவிஞர் கந்தவனம் அவர்களின் ‘இலக்கிய உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் நயவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ‘முதலில் கனடா தேசியப்பண், இறைவணக்கம் ஆகியவற்றை மிகச் சிறப்பான குரல் வளத்துடன் இனிமையாகப் பாடிய, இங்கே பிறந்து வளர்ந்த இளையதலைமுறையைச் சேர்ந்த செல்வி. சாச்சவி திலீபன் அவர்களைப் பாராட்டுகின்றேன். இன்று சாச்சவி போன்ற இளைய தலைமுறையினர் துணிந்து கனடிய மேடையில் நின்று தமிழ் மொழியில் இசைப்பதற்கு, இந்த நூலில் கவிஞர் குறிப்பிட்ட கனடாவில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்கள். இந்த இலக்கிய உறவுகள் என்ற நூலில் சுமார் எண்பது இலக்கிய உறவுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். இவர்களில் பலரோடு நானும் பழகியிருக்கின்றேன், பலர் எனது ஊரைச் சேர்ந்தவர்கள், நான் கல்விகற்ற நடேஸ்வரா, மற்றும் மகாஜனா கல்லூரிகளுடன் தொடர்புடையவர்கள், சிலர் அதிபர் பொ. கனகசபாபதி மற்றும் கவிஞர் கந்தவனம் மூலம் கனடா எழுத்தாளர் இணையத்தில் எனக்கு அறிமுகமானவர்கள். கனடாவில் கடந்த 35 வருடங்களாகத் தமிழ் மற்றும் சைவசமயத்தை வளர்ப்பதில் தம்மை அர்பணித்தவர்கள் பலரைப் பற்றி இங்கே குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.’ என்று தனதுரையில் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய வாணி சிவராஜன் தனக்குத் தெரிந்த சிலரின் பெயர்கள் நூலில் இடம் பெற்றிருப்பதையும், காங்கேசந்துறை குருநாதபிள்ளையின் மூத்த மகள், குரு அரவிந்தனின் சகோதரி கௌரியின் கணவர் அதிபர் பொ. கனகசபாபதி, அவரின் ஒன்றுவிட்ட சகோதரி வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) மற்றும் எழுத்தாளர் குரு அரவிந்தனைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பதால் ஒரே குடும்பத்தில் மூவரைப்பற்றி எழுதியிருப்பது பெருமைப்பட வைக்கின்றது.’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து பேராசிரியர் அ. சந்திரகாந்தனின் உரையைத் தொடர்ந்து தாய்வீடு ஆசிரியர் பி.ஜே. டிலிப்குமார் வெளியீட்டுரை நிகழ்த்தினார். சிறப்புப் பிரதிகளை எழுத்தாளர் எஸ். ஜெகதீசன், சி. இராஜதுரை, கௌரி கருணாரத்ன, யசோதா அரவிந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கவிஞரின் மகள் வாணி கந்தவனம் நன்றியுரை வழங்கினார்.

Series Navigationகாலாதீதன் காகபூஶுண்டிதனிமையின் இன்பம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    bala says:

    In Canada also the dichotomy of Saivism Vs. Hinduism seems to have got in, because here in Tamilnadu also Saivism is not part of Hinduism. Happy to see that interpretations!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *