சசிகலா விஸ்வநாதன்
தரையில்விழுந்தவளை
தாங்கியது பல கரங்கள்.
கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது
ஒரு செய்தி.
நாளை அடுக்களை வேலை, எனக்கா?
அலுப்புடன்!
மருத்துவர் என்ன செலவு சொல்கிறாரோ?
அச்சம்!
என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்?
ஆயாசம்!
பேசாமல் படு;
இரண்டு நாள்கள்!கனிவு!
என் கரம் பற்றியது;
எந்தக் கரத்தை?
சசிகலா விஸ்வநாதன்