குறுக்கு வெட்டாய்
பிளந்து போட்டார்கள்.
ஓ! வென அலறி
தலை சாய்ந்து கிடந்தது
உடல் மரம்!
தலை ஒரு பக்கம்
உடல் ஒரு பக்கம்.
கா!கா! வென
கதறி அழுத காக்காய் கூட்டம்.
கிரீச்……கீரீச்… என குருவிகள் ஓலம்.
ட்விட்….ட்விட்…. கருங்குருவி கதறல்,
டக் டக் .டக்,,,,, என மரங்குத்தி துக்கம்.
கூடுகளை தேடி
தூக்கனாங் குருவிகள் கூட்டம்.
மரண ஓலம் பூமியெங்கும்
மரித்துப்போனது ஆலமரம்.
மெளனமாய் சினுங்கியது
மண்!
“எல்லாம் முடிந்துவிட்டது”
வேர்!
தூரத்தில் புல்டோசர்
அடத்து மரத்தை நோக்கி….
நேற்றுவரை என் மரம்
நேற்றுவரை என் பறவைகள்
நேற்றுவரை அதன் பாடல்கள்
நேற்றுவரை அதன் அன்பு
நேற்றுவரை அதன் காதல்.
இன்று இல்லை.
நாளை
நீயும்-நானும் யாரோ!!.
-ஜெயானந்தன்